விர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) எனப்படும் தோற்ற மெய்ம்மை என்பது கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மெய்யுருவம் போல் காட்டுவதாகும். இது வீடியோ கேம், திரைப்படம் ஆகிய துறைகளில் மட்டுமின்றி இராணுவம், வானியல் போன்ற துறைகளிலும் உபயோகிக்கப்படும் ஒரு தொழில்நுட்பம் ஆகும்.
அவ்வாறான 'தோற்ற மெய்ம்மை' தொழில்நுட்ப கேமிராக்கள் மூலம் விண்வெளி வராலாற்றின் மிகவும் சக்தி வாய்ந்த நடவடிக்கைகளில் ஒன்று பதிவாக்கப்பட்டுள்ளது, அதுவும் 360 டிகிரி கோணத்தில் சாதகமான பார்வைக்கு பதிவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய புலனாய்வு :
டெல்டா 4 என்ஆர்ஒஎல் (Delta IV NROL-45) - தேசிய பாதுகாப்பிற்காக அமெரிக்க தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு ஆதரவாக செயல்படும் நோக்கத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகோள் ஆகும்.
31-வது டெல்டா 4 மிஷன் :
இது டெல்டா 4-ன், 31-வது மிஷன் ஆகும் என்பதும், டெல்டா 4 கடந்த 2002-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒன்பதாவது என்ஆர்ஒ மிஷன் :
மேலும் இது ஒன்பதாவது என்ஆர்ஒ (NRO - National Reconnaissance Office) மிஷன் என்பதும் குறிப்பிடத்தக்கது.