Showing posts with label the jungle book 2. Show all posts
Showing posts with label the jungle book 2. Show all posts

Friday, 29 April 2016

90களில் பிறந்த குழந்தைகளுக்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் ஜங்கிள் புக் மிகவும் பரிச்சயம். இவர்களை டார்கெட் செய்து ஹாலிவுட்டில் உருவாகி இந்தியாவில் முதலில் ரீலீஸ் செய்யப்பட்ட “தி ஜங்கிள் புக்”வெளியான முதல் நாளே 10 கோடி வசூல் சாதனை படைத்தது.


'அயர்ன் மேன்' பட இயக்குநர் ஜான் ஃபேவ்ரூ இயக்கிய  இப்படத்திற்கு விமர்சகர் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்க இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தற்பொழுது டிஸ்னி நிறுவனம் இப்படம் உருவான விதத்தை 2.21 நிமிட வீடியோவாக வெளியிட்டு மிரளவைத்திருக்கிறது. படப்பிடிப்பின் பின்னணியில் நிகழும் ஆர்ட் ஒர்க்ஸ், கேமரா நுணுக்கங்கள், VFX பற்றிய பிரம்மாண்ட இந்த வீடியோவைப் பார்த்தாலே, இந்த கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்புமே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்பது தெரியும்.



0

Sunday, 24 April 2016


ஸ்னி தயாரித்துள்ள த ஜங்கிள் புக் சென்ற வாரம் இந்தியா உள்பட சில நாடுகளில் வெளியானது. இந்தியாவில் மட்டும் ஓபனிங் வீக் என்டில் 7.6 மில்லியன் டாலர்களை படம் வசூலித்தது..

ரஷ்யாவில் 6.2 மில்லியன் டாலர்கள். 

ஆஸ்ட்ரேலியா 2.6 மில்லியன் டாலர்கள். இதேபோல் சில நாடுகளின் வசூலே 28.9 மில்லியன் டாலர்கள். வரும் வெள்ளிக்கிழமைதான் படம் யுஎஸ், சைனா, மெக்சிகோ போன்ற நாடுகளில் வெளியாகிறது.

இந்தியாவிலேயே பெரும் வரவேற்பை பெற்ற படம் யுஎஸ்ஸில் அள்ளி குவிக்கும் என்பதில் டிஸ்னிக்கு சந்தேகம் இல்லை. அதனால் இப்போதே இரண்டாம் பாகத்துக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஜஸ்டின் மார்க்கை இரண்டாம் பாகத்துக்கு திரைக்கதை எழுத பணித்துள்ளது. முதல் பாகத்தை இயக்கிய Jon Favreau இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

பிற விவரங்களை டிஸ்னி விரைவில் அறிவிக்க உள்ளது. 



0