Showing posts with label Tamil Cine NEWS. Show all posts
Showing posts with label Tamil Cine NEWS. Show all posts
Thursday, 23 June 2016
Tuesday, 21 June 2016
ILAYATHALAPATHY VIJAY’S 42ND BIRTHDAY CELEBRATION AT?
Actor Vijay’s 42nd birthday falls on June 22, 2016 which is exactly a week away from now. Ilayathalapathy fans across the globe are getting ready to celebrate their matinee idol’s birthday with huge frenzy. The actor’s latest release ‘Theri’ turning out to be a blockbuster and still holding onto multiple screens with packed shows, will make this year’s celebrations much bigger.
But we have learnt a new that may be a slight disappointment for the star’s fans.
Vijay will not be in Chennai and he will not be taking part in any sort of birthday celebrations except probably a simple cake cutting this year, as he will be busy with work.
The shooting of ‘ Vijay 60 ‘ directed by Bharathan is presently going on in Hyderabad and the schedule will go on till June 25 without a break. So Vijay will be at work with his ‘ Vijay 60 ‘ crew on his birthday.
The ‘Vijay 60 ‘ crew has, however started making arrangements for the birthday celebrations. They have already ordered a large cake for Vijay to cut in the shooting spot.

Monday, 13 June 2016
கயல் ஆனந்தி புகார்.
அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்க நிர்ப்பந்திக்கின்றனர்: ஆனந்தி புகார்...
‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கி உள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை ஆனந்தி அளித்த பேட்டி வருமாறு:-
‘‘பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது நடிகையாக வேண்டும் என்று ஆர்வம் இல்லை. எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன். கயல் படத்தில் டைரக்டர் பிரபு சாலமன் என்னை நடிக்க வைத்து பிரபலபடுத்தினார். அவர்தான் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார்.
திரிஷா இல்லன்னா நயன்தாரா, பொறியாளன், சண்டி வீரன் உள்பட பல படங்களில் நடித்து விட்டேன். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறேன்.
எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் தாதாவின் மகளாக வருகிறேன். இந்த படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் எனக்கு சிபாரிசு செய்தார் என்பதில் உண்மை இல்லை. நல்ல கதாபாத்திரம் இந்த படத்தில் எனக்கு அமைந்து இருக்கிறது. படப்பிடிப்பில் என்னிடம் எல்லோரும் அன்பாக பழகினார்கள். அக்கறையோடு பார்த்துக்கொண்டனர்.
ஏற்கனவே நான் நடித்த சில படங்களில் எனக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டன. டைரக்டர் ஆரம்பத்தில் என்னிடம் கதை சொன்னதை மீறி படப்பிடிப்பில் கவர்ச்சியாக நடிக்கும்படி வற்புறுத்தப்பட்டேன்.
அரைகுறை ஆடையை கொடுத்தும் உடுத்த சொன்னார்கள். என் உடல்வாகுக்கு கவர்ச்சி எடுபடாது. கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று சினிமாவில் அறிமுகமானபோதே முடிவும் செய்து விட்டேன்.
எனவே கவர்ச்சி ஆடைகளை உடுத்த மாட்டேன் என்று மறுத்து விட்டேன். மீறி என்னை வற்புறுத்தினால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விடுவேன் என்றும் மிரட்டினேன். இப்போதெல்லாம் கதை கேட்கும்போதே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குட்டைப்பாவாடை அணிய மாட்டேன் என்றெல்லாம் டைரக்டரிடம் உறுதியாக சொல்லி விட்டுத்தான் நடிக்க செல்கிறேன்.
இவ்வாறு ஆனந்தி கூறினார்.
டைரக்டர் சாம் ஆண்டன் கூறும்போது, ஒவ்வொருவருக்கும் வெளியே தெரியாத முகம் ஒன்று இருக்கிறது. அதுதான் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் கதை என்றார்.
Sunday, 12 June 2016
அட்ரா மச்சான் விசிலு படத்தை முடக்க சதி ! பின்னணியில் யார்..?
சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், நடிப்பில் உருவாகி வெளிவர தயாராக இருக்கும் படம் ” அட்ரா மச்சான் விசிலு “. இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சென்சாருக்கு அனுப்பும் நடைமுறைகள் நடந்து வருகின்றன.
இந்த படத்தை தயாரிக்கும் அரசு பிலிம்ஸ் நிறுவனம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், கில்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்சாருக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்தோடு சேர்த்து படத்தின் தலைப்பை உறுதிப்படுத்தும் வகையில் சங்கத்தின் கடிதமும் இணைக்க வேண்டும். இதனால் கடிதம் வேண்டி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்கப்பட்டது.
ஒரே நாளில் கடிதம் கொடுத்து விடுவது தான் சங்கத்தில் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால் என்ன காரணத்தாலோ இந்த படத்திற்கு கடிதம் வழங்காமல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இழுத்து வருகிறது.
இந்த படத்தை வெளியிட விடாமல் பெரிய நடிகர் ஒருவர் தடுப்பதாகவும், அவருக்கு உடைந்தையாக சங்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திங்கட்கிழமைக்குள் தங்களுக்கு கடிதம் கிடைக்காவிட்டால் படக்குழுவினரோடு சென்று தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் உண்ணாவிரதம் இருப்பது என தயாரிப்பாளர் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Tuesday, 31 May 2016
Saturday, 28 May 2016
எனக்குப் போட்டியே ரஜினிதான் !
எனக்குப் போட்டியே ரஜினிதான் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.
'வாங்க வாங்க' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் அப்புக்குட்டி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சீனிவாசன் பேசும்போது ''சினிமாவில் முன்பெல்லாம் சில்க்கை அதிகமாக கூப்பிட்டார்கள்.இப்போது என்னை அதிகமாக கூப்பிடுகிறார்கள். இதனால் நான் ஆம்பள சில்க்கா இல்லை பொம்பள சில்க்கா என்று எனக்கே தெரியவில்லை.
இன்று நான் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் பட்ட கஷ்டங்கள் தான். இப்போது எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள்.

. இதனைப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இதனால் சினிமாவிற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றுகிறது.
சினிமாவில் எனக்குப் போட்டியாக நான் கருதுவது ரஜினியைத் தான். ரஜினி இன்று இந்த நிலையில் இருக்க அவர் பட்ட கஷ்டங்களே காரணம் என்பது எனக்குத் தெரியும்.
அவர் போலவே நானும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான சீனிவாசன் ...
தல 58: மீண்டும் இணையும் 'மிரட்டல்' கூட்டணி?
ஏ.ஆர்.முருகதாஸ்-அஜீத் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜீத்தின் 'தீனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
2 வது முறையாக இருவரும் இணையவிருந்த 'மிரட்டல்' ஒருசில காரணங்களால் கைவிடப்பட்டது.இந்நிலையில் மீண்டும் இருவரும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீனா:
அஜீத்-சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான இப்படம் அஜீத் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அஜீத்திற்கு முதன்முதலில் தல என்ற அடையாளத்தைக் கொடுத்தவர் என்ற பெருமையும் முருகதாஸுக்கு உண்டு.

மிரட்டல்:
தீனாவைத் தொடர்ந்து மிரட்டல் என்ற படத்தின் மூலம் மீண்டும் இந்தக் கூட்டணி இணையவிருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. 2 வது முறையாக மீண்டும் அஜீத்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைவார்கள் என்று, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தி:
விஜய்யை வைத்து 'துப்பாக்கி', 'கத்தி' என 2 பிளாக்பஸ்டர்களைக் கொடுத்த முருகதாஸ், தற்போது இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக இருக்கிறார். இந்தி நடிகையான சோனாக்ஷி சின்ஹாவை மையமாக வைத்து இவர் இயக்கிய 'அகிரா' முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை முருகதாஸ் இயக்குகிறார்.

தல 58:
அஜீத் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் தல57 படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் தல 58 படத்தை முருகதாஸ் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை உறுதி செய்வதுபோல மிரட்டல் படத்தின் அஜீத் போஸ்டரை, தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் முருகதாஸ் அப்டேட் செய்திருக்கிறார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
Friday, 27 May 2016
IDHU NAMMA AALU REVIEW TAMIL
இதுவரை பாண்டிராஜ் இயக்கிய இயக்கிய படங்களில் காதல் இருந்திருக்கிறது. காதலுக்காகவே ஒரு படம் இயக்கலாம் என்று யோசித்திருப்பார் போல. சிலம்பரசனையும் அவரது முன்னாள் காதலியும் மிகத் திறமையான நடிகையுமான நயன்தாராவையும் (படத்தில்) இணைத்து ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு தடைகளைக் கடந்து வெளியாகியிருக்கும் இந்தக் படம் எப்படி இருக்கிறது? பாண்டிராஜ் சொல்லி இருக்கும் இந்தக் காதல்க் கதை ரசிக்க வைத்ததா?
சென்னையில் ஐடி துறையில் வேலையுடன் வசதியாக வாழ்ந்துவருகிறான் சிவா (சிலம்பரசன்). அவனது அப்பா (ஜெயபிரகாஷ்) அவனது திருமணத்துக்குப் பார்த்துவைக்கும் பெண் மயிலா (நயன்தாரா). பெண் பார்க்கும் படலத்தில் சிவாவின் முன்னாள் காதல் உட்பட கடந்த கால வாழ்க்கை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்கிறாள் மயிலா. சில ஊடல்கள், சண்டைகளைத் தொடர்ந்து இருவரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கின்றனர். அதன் பிறகு அவர்களது பெற்றோருக்கிடையில் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டு அதனால் திருமணம் தடைபடுகிறது. அந்தத் தடை நீங்கி சிவாவும் மயிலாவும் இணைந்தார்களா என்பதே மீதிக் கதை.
நகர்ப்புற நவீன வாழ்க்கையையும் ஆண்-பெண் உறவுகளையும் ஒட்டி காதல் ரசம் திகட்டத் திகட்ட ஒரு படத்தைத் தந்திருக்கிறார் பாண்டிராஜ். யதார்த்தமான கதைச் சூழலும், காட்சிகளும் படத்தை மனதுக்கு நெருக்கமாகின்றன. குறிப்பாக நகர்ப்புற காதலர்களும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களும் சிவாவிடமும் மயிலாவிடமும் தங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள்.
மையக் கதை தொடங்கும் முன் ஐடி இளைஞர்களின் வாழ்க்கை பற்றி தரப்படும் சற்றே விரிவான அறிமுகம் தெரிந்த விஷயங்களைப் பேசினாலும் பாண்டிராஜின் பாணியில் சொல்லப்படுவதால் ரசிக்க வைக்கிறது.
முதல் பாதியில் நாயகனின் முன்னாள் காதலும் இரண்டாம் பாதியில் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணுடனான காதலும் விரிவாக சொல்லப்படுகின்றன. இரண்டு காதல்களுமே உண்மையாகவும் அழகாகவும் இருக்கின்றன. நாயகனின் முதல் காதல் பிரிவதும் அதை இருவரும் கடந்து செல்லும் விதமும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டாம் பாதியில் இன்றைய காதலர்களின் மொபைல் ஃபோனிலேயே பல மணி நேரம் பேசிக்கொண்டு (கற்பனையாக) குடும்பம் நடத்துவிடுவது மிக விரிவாகவும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்த விமர்சனமும் படத்திலேயே வந்துவிடுகிறது.
இன்றைய இளைஞர்களைக் கவரும் நோக்கில் ஆங்காங்கே பெண்களை பிரச்சனைக்குரியவர்களாக சித்தரிக்கும் வசனங்கள் இருந்தாலும் நாயகியை நாயகனின் முன்னாள் காதலியையும் கண்ணியமான உண்மையான அன்பு செலுத்தும் பெண்களாக காட்டி தனது முதிற்சியான பார்வையைப் பதிவுசெய்கிறார் இயக்குனர்.
நகர்ப்புறக் காதலின் சில பக்கங்களை அழகாக படம்பிடித்திருக்கும் இயக்குனர் ஆழமான அல்லது அழுத்தமான கதைக்கு அதிகம் மெனக்கெட்டதாகத் தெரியவில்லை. கதையில் வரும் சிக்கல்கள் சுவாரஸ்யத்தைத் தக்கவைக்கும் அளவுக்கு வலுவாக இல்லை. கதையில் புதிதாக ஒன்றுமில்லை, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லை.
இவற்றால் படம் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பைத் தருவதைத் தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் ஆங்காங்கே சில புத்திசாலித்தனமான காட்சிகள் கவனத்தைத் தக்கவைக்கின்றன. நாயகன், நாயகி மற்றும் முன்னாள் காதலி சந்தித்துக்கொள்ளும் காட்சியும் அதில் வெளிப்படும் ஒரு சஸ்பன்ஸும் திரைக்கதை ஆசிரியரின் புத்திசாலித்தனக்கு சான்று.
மிகவும் யதார்த்தமாக இருப்பதுதான் படத்தின்ச் சிறப்பும் சிக்கலும். சினிமாத்தனமாக எதுவும் இல்லை, லாஜிக் மீறல்கள் இல்லை. கதாபாத்திரங்களுடன் பார்வையாளர்கள் ஒன்ற முடிகிறது. ஆனால் படத்தில் காட்டப்படும் யதார்த்தம் திரையில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு புதுமையானதாகவோ வலுவானதாகவோ இல்லை என்பது சிக்கல். உதாரணமாக காதலர்கள் மொபைல் ஃபோனிலேயே காதல் வளர்க்கும் காட்சிகளுக்கு மிக அதிக நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவை காதல் வயப்பட்டிருக்கும்/காதலுக்காக ஏங்கும் வயதினருக்குப் பிடிக்கலாம். மற்றவர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்று தெரியவில்லை.
படத்தின் பெரும்பகுதி வசனங்களாலேயே நிரப்பப்பட்டிருப்பதால் நாடகம் பார்க்கும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. மொபைல் ஃபோன் திரையில் நடப்பவற்றை திரையில் காட்டும் புத்திசாலித்தனம் மட்டுமே இந்த உணர்வை மட்டுப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில் வசனங்கள்தான் படத்தின் பலம் என்பதையும் சொல்லி ஆக வேண்டும்.
சிலம்பரசன் நயன்தாரா இருவருக்குமே இது சவாலான வேடம் அல்ல. ஆனால் இருவருமே தங்கள் பாத்திரத்தின் தேவகளை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு முழுக்க முழுக்க காதல் மட்டுமே செய்யும் சிம்புவைப் பார்க்கவே இனிமையாக இருக்கிறது.

அதிலாவது ஒரு சண்டைக் காட்சி உண்டு. இதில் அதுவும் இல்லை. நயன்தாராவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.
சிம்புவின் முன்னாள் காதலியாக வரும் ஆண்ட்ரியா அழகாகவும் முன்னெப்போதையுவும் இளமையாகவும் இருக்கிறார். நடிப்பிலும் குறைவைக்கவில்லை.
படம் முழுக்க வரும் நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் சூரி படத்தில் நகைச்சுவையை அள்ளி வழங்கவில்லை என்றாலும் ஆங்காங்கே சிரிக்கவைத்து தன் பணியை சரியாகச் செய்திருக்கிறார். பாத்திரத்தை உள்வாங்கி யதார்த்த நடிப்பிலும் பல படிகள் முன்னேறியிருக்கிறார். சிம்புவை அவர் கலாய்ப்பதும் பதிலுக்கு மொக்கை வாங்குவதும் ரசனையான கலாட்டா. சந்தானம் வரும் நான்கு காட்சிகளும் நகைச்சுவைக்கு கியாரண்டி.
சிம்புவின் அப்பாவாக நடித்திருக்கும் ஜெயபிரகாஷ் மீண்டுமொருமுறை அன்பும் அக்கறையும் மிக்க அப்பாவாக,. வழக்கம்போல் குறையின்றி நடித்திருக்கிறார்.
குறளரசனின் இசையில் பாடல்கள் காதுக்கு இனிமையாக இருக்கின்றன. அழகாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன. ‘மாமன் வெயிட்டிங்’ சிம்பு ரசிகர்களுக்கு ஏற்ற குத்துப்பாட்டு. சிம்புவும் அதா ஷர்மாவும் நன்றாக ஆடியிருக்கிறார்கள். ஆனால் ஒரு குத்துப் பாடல் வேண்டும் என்பதற்காகவே அந்தப் பாட்டையும் அதற்கு ஒரு முன்கதையையும் சேர்த்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பின்னணி இசை பெரிதாக ஈர்க்கவும் இல்லை குறை சொல்லும் அளவுக்கும் ஒன்றுமில்லை.
பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு ஐடி துறை வளர்ச்சியால் வேறு வடிவம் டைந்திருக்கும் சென்னை நகரைப் சரியாப் பிரதிபலிக்கிறது.
மொத்தத்தில் நகர்ப்புற இளைஞர்களின் காதலை அழகாகவும் கண்ணியமாகவும் பெருமளவில் ரசிக்கத்தக்கதாகவும் சொல்லிய அளவில் திருப்திபடுத்துகிறது ‘இது நம்ம ஆளு’.
Rating : 2.8 / 5.0

Thursday, 26 May 2016
தமிழ் சினிமா செய்திகள்-1
நடிக்கலை வாழ்ந்தாங்க – பாண்டிராஜ் சொல்லும் சிம்பு, நயன்தாரா லவ் கெமிஸ்ட்ரி....
இது நம்ம ஆளு வரும் 27 வெளியாகிறது. முன்னாள் காதலர்களின் திரைக்காதலைப் பார்க்க ரசிகர்கள் தயார்.
சிம்பு, நயன்தாரா காதல் காட்சிகள் எப்படி வந்திருக்கின்றன என படத்தின் பாண்டிராஜ் கூறினார்.
“சட்டென்று பூக்கும் பூவைப்போல, மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. அந்த காதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் இது நம்ம ஆளு.
ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த 50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம்.
படத்தில் நாயகன், நாயகியாக நடித்த சிம்பு, நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை.
அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது.
அவர்களின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை. பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்” என்றார்.
பிடிக்கிற மாதிரி இருந்தா சரிதான்.
மீண்டும் இணைந்த ஆதி, நிக்கி கல்ராணி..
சென்ற வருடம், யாகாவாராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்த ஆதி, நிக்கி கல்ராணி மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கும் படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆதி நாயகனாக நடிக்க உள்ளார். நாயகியாக நிக்கி கல்ராணியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்கள் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது.
விரைவில் படத்தின் பெயர், பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகின்றனர்.
வெளிநாட்டில் தயாராகும் வீர சிவாஜி பாடல்..
விக்ரம் பிரபு, ஷாம்லி நடிக்கும் வீர சிவாஜி பாடல் ஒன்றை ரஷ்யாவில் படமாக்குகின்றனர்.
கணேஷ் விநாயக் இயக்கத்தில் வீர சிவாஜி படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரித்து வருகிறது. ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, வினோதினி உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்தப் படத்துக்காக இமான் இசையில் சிம்பு ஒரு பாடல் பாடினார். தாறுமாறு தக்காளி சோறு என ஆரம்பிக்கும் அந்தப் பாடலை ரஷ்யாவின் ஜார்ஜியா மாகாணத்தில் படமாக்குகின்றனர். அடுத்த மாதம் இப்பாடலை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளதால் அடுத்த மாதம் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆனந்தி இருக்கார் குமாரு..
ராஜேஷ் எம். இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்துவரும் படத்தின் நாயகி மாற்றப்பட்டுள்ளார். முதலில் ஒப்பந்தம் செய்த அவீகா கோரை நீக்கிவிட்டு ஆனந்தியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படங்களுக்குப் பிறகு ராஜேஷ் இயக்கும் படம், கடவுள் இருக்கான் குமாரு. இந்தப் படத்தில் நடிக்க ஜீ.வி.பிரகாஷ், அவீகா கோர், நிக்கி கல்ராணி, பிரம்மானந்தம், மொட்டை ராஜாந்திரன், தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, மே முதல் வாரம் முதல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், எதிர்பார்த்த நடிப்பு வரவில்லை என அவீகா கோரை மாற்றிவிட்டு அவருக்குப் பதில் ஆனந்தியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இது இவர்கள் இணைந்து நடிக்கும் மூன்றாவது படமாகும்.
சொந்தத் தயாரிப்பில் கலெக்டராகும் நயன்தாரா..
நயன்தாரா நடிக்கிறார் என்றால் படம் தயாரிக்க பலபேர் இருக்கிறார்கள். அதையும் மீறி, கதை பிடித்ததால் தானே அக்கதையை படமாக்க முடிவு செய்துள்ளார் நயன்தாரா.
படத்தயாரிப்பு சூதாட்டமாகிவிட்டது தெரிந்தும் நயன்தாரா எடுத்திருக்கும் துணிச்சல் முடிவுக்கு ஒரு சலாம்.
சமீபமாக நாயகி மையப் படங்களில் ஆர்வம் காட்டுகிறார் நயன்தாரா. ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனர் ஜெகன் நயன்தாராவிடம் சொன்ன கதை துணிச்சல்மிக்க ஒரு பெண் கலெக்டரை பற்றியது.
கதையை கேட்டவர் உடனே நடிக்க ஒப்புக் கொண்டதுடன், படத்தை தயாரிக்கவும் முன் வந்துள்ளார். நயன்தாரா பத்து வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் இருந்தாலும் நடிப்பைத்தாண்டி தயாரிப்பில் இறங்குவது இதுவே முதல்முறை.
நயன்தாரா தயாரிக்கிற அளவுக்கு அப்படியென்ன கதை என்று ஜெகனின் படத்துக்கு இப்போதே ஏக எதிர்பார்ப்பு.
இதே சூட்டோடு படத்தை எடுத்து வெளியிடுங்கள். வெற்றி நிச்சயம்.
நடிகர் சங்கம் நடத்திய திருட்டு டிவிடி வேட்டை
நடிகர் சங்கம் நடத்திய திருட்டு டிவிடி வேட்டை: 1 லட்சம் திருட்டு டிவிடிக்கள் பறிமுதல்.......
திருட்டு டிவிடிக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில், மதுரையில் பாலரங்கம் என்னும் பகுதியில் உள்ள குடோனில் திருட்டு டிவிடி தயாரிக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, விஷாலின் பேரில் வீடியோ பைரசி கண்காணிப்பு போலீஸ் அதிகாரி ஜெயலட்சுமி ஐ.பி.எஸ். அவர்களிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்களின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தி 1 லட்சம் டிவிடிக்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 20 லட்சம் மதிப்புள்ள கணினி இயந்திரங்களும், புதிய படங்களை பதிவு செய்துள்ள குறுந்தகடுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இவை அனைத்தும் கோட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்தியன் எலெக்ட்ரிக்கல்ஸ் என்னும் கடைக்கு மேலே ராம்சந்த் லால் சேட்டு என்பவருடைய குடோனில் 20 பேர் திருட்டு விசிடி தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாக நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் தலைமையிலான குழு கண்டுபிடித்தது.
இதையடுத்து பொதுச்செயலாளர் விஷாலின் புகார் அடிப்படையில் வீடியோ பைரசி கண்காணிப்பு போலீஸ் அதிகாரி ஜெயலட்சுமி அவர்களின் உத்தரவின் பேரில் அங்கு சோதனை செய்யப்பட்டு திருட்டு டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சேலம் கிச்சாபாளையம் பகுதியில் இயங்கி வந்த திருட்டு டிவிடி தயாரிக்கும் இடமும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Wednesday, 25 May 2016
'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..' கவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள்
நகைச்சுவையின் மன்னர் என்று அழைக்கப்படும் நடிகர் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதனை முன்னிட்டு தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் அவரின் நகைச்சுவை வசனங்களிலிருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.
*'நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் .. நாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்...
*'பத்த வச்சிட்டியே பரட்டை..'
*'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..'
*"ஏன்டா, எவன கேட்டாலும் மலேசியாவுல இருந்து காசு வருது, சிங்கப்பூர்ல இருந்து காசு வருதுன்னு சொல்றிங்க, அப்ப இந்தியால இருந்த காசெல்லாம் எங்கடா போச்சு?"
*"டேய் தகப்பா.." *நாட்ல இந்த தொழிலதிபர் தொல்ல தாங்க முடியலடா...''
*"ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி"
*''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மோட்டர் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை. நமக்கு மனைவியும் அமையல மோட்டரும் அமையல''
*"அய்யோ.. இப்போ நா எதையாவது வாங்கணுமே.. இந்த தெரு என்ன விலைன்னு கேளு"
*"நான்லாம் அமெரிக்கால பொறக்க வேண்டியது, என் கெரகம் சைக்கிள் கட வச்சிருக்கேன்"
*"காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில எடம் பாக்குறேன்"
*"கோழி குருடா இருந்தாலும், கொழம்பு ருசியா இருக்கணும்டா" "இது உலக நடிப்புடா சாமி"
*"க்ரீஸ் டப்பாவ எப்டி எட்டி ஒதச்ச?"
*"பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?"
*"என் அக்கா மகளே இந்து"
*"உங்கக்காளுக்கு சூப்பு வக்கத் தெரியும்னே எனக்கு இன்னிக்குத்தாண்டா தெரியும்"
*"நா இங்க ரொம்ப பிசி... இத பத்தி ஹோம் மினிஸ்டர்கிட்ட பேசுறேன்"