Thursday, 26 May 2016

நடிகர் சங்கம் நடத்திய திருட்டு டிவிடி வேட்டை


நடிகர் சங்கம் நடத்திய திருட்டு டிவிடி வேட்டை: 1 லட்சம் திருட்டு டிவிடிக்கள் பறிமுதல்.......

6XEEwgn.jpg


திருட்டு டிவிடிக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில், மதுரையில் பாலரங்கம் என்னும் பகுதியில் உள்ள குடோனில் திருட்டு டிவிடி தயாரிக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, விஷாலின் பேரில் வீடியோ பைரசி கண்காணிப்பு போலீஸ் அதிகாரி ஜெயலட்சுமி ஐ.பி.எஸ். அவர்களிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்களின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தி 1 லட்சம் டிவிடிக்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 20 லட்சம் மதிப்புள்ள கணினி இயந்திரங்களும், புதிய படங்களை பதிவு செய்துள்ள குறுந்தகடுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இவை அனைத்தும் கோட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்தியன் எலெக்ட்ரிக்கல்ஸ் என்னும் கடைக்கு மேலே ராம்சந்த் லால் சேட்டு என்பவருடைய குடோனில் 20 பேர் திருட்டு விசிடி தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாக நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் தலைமையிலான குழு கண்டுபிடித்தது.
இதையடுத்து பொதுச்செயலாளர் விஷாலின் புகார் அடிப்படையில் வீடியோ பைரசி கண்காணிப்பு போலீஸ் அதிகாரி ஜெயலட்சுமி அவர்களின் உத்தரவின் பேரில் அங்கு சோதனை செய்யப்பட்டு திருட்டு டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சேலம் கிச்சாபாளையம் பகுதியில் இயங்கி வந்த திருட்டு டிவிடி தயாரிக்கும் இடமும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment