கூகுள் ஆப்ஸ் என்றதும், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், கூகுள் எர்த் மற்றும் கூகுள் ப்ளே ஆப்ஸ் என யோசிக்க வேண்டாம். தினசரி அடிப்படையில் பயன்தரும் பல்வேறு அம்சங்களை கூகுள் தனது செயலிகளின் மூலம் வழங்குகின்றது.
அந்த வகையில் கூகுள் நிறுவனம் மக்கள் பயன்பாட்டிற்கு வழிங்கியும், பலருக்கும் தெரிந்திராத ஆப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்..
கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்
வெளியூர்களுக்கு அடிக்கடி பயணம் செய்வோருக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். இதனை இன்ஸ்டால் செய்து உங்களக்கு தெரியாத மொழி பெயர் பலகையில் காண்பித்தால் உடனடியாக ஸ்மார்ட்போன் திரையில் உங்களுக்கு விருப்பமான மொழி மாற்றம் செய்யப்பட்டு விடும்.
ஜிமெயிலிஃபை
இந்த செயலியை கொண்டு அவுட்லுக்.காம், யாஹூ போன்ற அனைத்து மின்னஞ்சல் கணக்குகளை ஜிமெயில் இன்பாக்ஸ்'இல் பெற முடியும்.
கூகுள் ஸ்காலர்
கல்வி பயல்வோருக்கு ஏற்ற தரவுகளை படிக்க கூகுள் ஸ்காலர் ஆப் பயனுள்ளதாக இருக்கின்றது.
கூகுள் கீப்
பல நிறங்களில் குறிப்புகளை குறித்து வைக்க உதவும் செயலி தான் கூகுள் கீப்.
டைமர்
உங்களுக்கு தேவையான நேரத்தை குறிப்பிட்டால் கூகுள் அலாரம் கடிகாரம் போன்று வேலை செய்து சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்யும்.
கூகுள் ஸ்கை
இது சிலருக்கும் தெரிந்திருக்கலாம். கூகுள் ஸ்கை சேவையை தொலைநோக்கி போன்று பயன்படுத்தி விண்வெளியை பார்த்து ரசிக்க முடியும்.
கூகுள் ஃபாண்ட்ஸ்
இந்த சேவையை பயன்படுத்தி இணையத்தில் கிடைக்கும் தலைசிறந்த எழுத்து வடிவங்களை அறிந்து கொள்ள முடியும்.
கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட்
கலை சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களுக்கு கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் சிறந்த சேவையாக இருக்கின்றது. இதை கொண்டு உலகின் சிறந்த கலைகளை ஆன்லைனில் பார்த்து ரசிக்க முடியும்.
No comments:
Post a Comment