Thursday 19 May 2016

டூம்ஸ்டே கடிகாரம் : நள்ளிரவிற்கு மூன்று நிமிடம் 'செட்' செய்யப்பட்டது..!

'டூம்ஸ்டே' எனப்படும் இறுதிநாளின் கடிகாரமானது ஒரு சாத்தியமான உலக பேரழிவை கணக்கீட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்கான பிரபலமற்ற "இறுதிநாள் கடிகாரம்" ஆனது 1947 ஆம் ஆண்டில், அறிவியல் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் மூலம் சிக்காககோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது..!

இயங்கி கொண்டிருக்கும் அந்த கடிகாரத்தை சார்ந்த விஞ்ஞானிகள் குழுவில் 16 நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..!

 Q7YhZuT.jpg

நள்ளிரவு தான் விடியல் :

 இறுதிநாள் கடிகார கோட்பாடானது நள்ளிரவு தான் ஒரு உலக பேரழிவின் விடியல் என்று பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

 OpqV5Yg.jpg

ஒவ்வொரு ஆண்டும் :

 1947-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நிலைக்கு ஏற்றது போல அந்த டூம்ஸ்டே கடிகாரம் செட் செய்யப்பட்டு கொண்டே இருக்கிறது.

 Xt2CvRy.jpg

ஏழு நிமிடங்கள் :

பனிப்போர் காலம் தொடங்கிய போது, டூம்ஸ்டே கடிகாரத்தில் நள்ளிரவு வர ஏழு நிமிடங்கள் 'செட்' செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 BT5ZbBY.jpg

மூன்று நிமிடங்கள் :

தற்போது அந்த கடிகாரத்தில் நள்ளிரவு பிறக்க மூன்று நிமிடங்களே உள்ளது போல் 'செட்' செய்யப்பட்டுள்ளது (அந்த கடிகாரத்தின் நேரத்தின் படியாக..!)

 Z7imfBz.jpg

இயற்கை பேரழிவு :

முதலில் இந்த அடையாள கடிகாரம் ஆனது ஒரு அணு ஆயுத பேரழிவை தான் பிரதிநிதித்துவப்படுத்தியது என்றாலும் கூட 2007-ஆம் ஆண்டில் காலநிலை மாற்ற அச்சுறுத்தல் மற்றும் சில இயற்கை பேரழிவுகளை பிரதிநிதிப்படுத்துவது போல் மாறிவிட்டது.

 hEo12hk.jpg

முன்னோக்கி அல்லது பின்னோக்கி :

அதை தொடர்ந்து அணு ஆயுத போர் வாய்ப்புக்கள் மற்றும் உலக நிலையைப் பொறுத்து முன்னோக்கி அல்லது பின்னோக்கி டூம்ஸ்டே கடிகார நள்ளிரவு தள்ளப்போடப்பட்டது.

 b120KA7.jpg

2012 :

 பின்பு 2012-ஆம் ஆண்டில், கடிகாரம் நள்ளிரவிற்க்கு மிக நெருக்கமாக (அதாவது நள்ளிரவிற்கு 5 நிமிடங்கள் ) சென்றது, ஏனெனில் அணு படைக்கலங்கள் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய அச்சுறுத்தல்கள் அந்த ஆண்டில் அதிகமாக இருந்தது.

 jU5sCXA.jpg

மிக நெருக்கம் :

டூம்ஸ்டே கடிகாரம் ஆனது எப்போதை விடவும், இந்த 2016-ஆம் ஆண்டு தான் மிக நெருக்கமாக நள்ளிரவை நெருங்கியுள்ளது, அதாவது 3 நிமிடங்கள் செட் செய்யப்பட்டுள்ளது.

 282kNmN.jpg

விளக்கம் :

தொடர்ச்சியான உலக காலநிலை மாற்றம் சார்ந்த பிரச்சினை, உலகம் முழுவதும் அரசியல் நடவடிக்கை இல்லாத நிலை ஆகியவைகள் தான் இந்த அளவிலான நள்ளிரவு நேர நெருக்கத்தை உண்டாக்கியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 is7vWXn.jpg

அணு ஆயுத நவீனமயமாக்கல் :

 மேலும் நள்ளிரவின் நெருக்கத்திற்கு ரஷ்யா மற்றும் அமெரிக்க அணு ஆயுதங்கள் நவீனமயமாக்கலில் உள்ள செல்வாக்கு மற்றும் அணு கழிவு பிரச்சனை ஆகியவைகளும் காரணமாக கூறப்பட்டுள்ளது

 ZcK1wof.jpg

2016 :

ஆக, டூம்ஸ்டே நம்பிக்கையாளர்கள் எதிர்நோக்கும் அந்த ஆண்டு இந்த 2016-ஆக இருக்கலாம் என்று அணு விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment