டூம்ஸ்டே (Doomsday) - என்பது இறுதிநாள் (முடிவு நேரம்) என்று பொருள்படும். டூம்ஸ்டே ஆனது ஆப்ரஹாமிய சமயங்களின் எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும். அப்போகலிப்ஸ் (apocalypse) என்பது பேரழிவு என்று பொருள்படும். டூம்ஸ்டே எனப்படும் கருத்தானது 15-ம் நூற்றாண்டின் பல மக்கள் மனதில் முன்னணியில் இருந்ததுள்ளது என்பது அந்த காலத்தில் இருந்தே பல்வேறு நூல்கள் 'இறுதிநாள்' நிகழும் என்று விளக்கங்கள் இருபதின் மூலம் உணர முடிகிறது..!
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கையெழுத்துப் படிவம் (manuscript), இறுதி நாட்கள் எப்படி நிகழலாம் என்பதை வேறு கோணத்தில், வரைபடங்கள் மூலம் விவரிக்கின்றது..!
1486 -1488 :
ஜெர்மனியின் லியூபேக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கையெழுத்துப்படிவமானது 1486 -1488 இடையே ஆகிய காலங்களுக்கு இடையே உருவாக்கம் பெற்றிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு நாள் :
கிறிஸ்துவுக்கு எதிர் நிலை, இஸ்லாமிய பரவல் மற்றும் சில நிகழ்வுகளை தொடர்ந்து ஜட்ஜ்மென்ட் டே எனப்படும் தீர்ப்பு நாள் வரும் என்கிறது இலத்தீன் மொழியில் உள்ள அந்த கையெழுத்து படிவம்.
பாப்டிஸ்டா :
இதன் ஆசிரியர் யார் என்று அறியப்படவில்லை என்கிற போதும், சிலர் இது பாப்டிஸ்டா என அழைக்கப்படும் ஒரு நன்கு படித்த மருத்துவர் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன.
அடிப்படை :
கையெழுத்துப்படிவத்தோடு உள்ள ஒரு தனி வரைபடம் 1570 - 1600 ஆகிய காலகட்டத்தின் ஆண்டிகிறிஸ்ட் எழுச்சியை முக்கோணங்கள் அடிப்படையில் குறிப்பிடப்படுகின்றன.
துவங்குகிறது :
இந்த தீர்க்கதரிசன படிவமானது 639 - 1514 ஆகிய காலகட்டங்களின் இடையே உள்ள உலகின் மாநிலங்களை விவரிக்கும் ஒரு வரைபடத்தில் இருந்து துவங்குகிறது. வரையப்பட்டுள்ள ஒரு பெரிய வட்டம் பூமியையும், அதன் துண்டுகள் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் நீர் பிரதிநிதித்துவம் சார்ந்த விளக்கம் என்று நம்பப்படுகிறது.
இஸ்லாமிய எழுச்சி :
ஆசிரியர் உரையானது இஸ்லாமிய எழுச்சியானது எப்படி கிரிஸ்த்துவத்தின் அச்சுறுத்தலாக விளங்கும் என்பதை விவரிக்கிறது.
கைப்பற்றுதல் :
கையெழுத்துப் படிவத்தில் உள்ள மற்றொரு வரைபடமானது 'இஸ்லாமியம் வாள்' என்பதை விவரிக்கிறது. அதாவது, முதலில் ஐரோப்பாவை கைப்பற்றல் பின்பு உலகின் மற்ற பகுதிகளை கைப்பற்றுதல் சார்ந்த விடயம்.
ஐந்து வாள்கள் :
அப்படியாக, வரையப்பட்டுள்ள பூமி வட்டத்துள் மொத்தம் ஐந்து வாள்கள் உள்ளன, அது சரிசெய்கிறது, அது சீர்திருத்துகிறது, அது நசுக்குகிறது, ரோம் வரை என்று 4 வாள்களில் எழுதப்பட்டுள்ளது, ஐந்தாவது வாளில் ஒன்றும் எழுதப்படவில்லை.
1515 - 1570 :
இறுதி நாள் சார்ந்த இந்த படிவத்தில் 1515 - 1570 ஆகிய காலகட்டங்களை சுற்றி என்ன என்ன நடக்கும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது.
நான்கு கொம்பு :
மற்றொரு படமானது, வரையப்பட்டுள்ள பூமியின் நான்கு மூலைகளுக்கும் நீளும் நான்கு கொம்புகளை கொண்டுள்ளது. அந்த கொம்புகள் கிறிஸ்து எப்படி தன்னை கடவுளாக காட்டிக் கொண்டார் என்ற கிறிஸ்துவுக்கு எதிர் கருத்துகள் உள்ளன.
இறுதி நாளான தீர்ப்பு நாள் :
அனைத்து வரைபடங்களை விடவும் தெளிவாக, இறுதி நாளான தீர்ப்பு நாள் சார்ந்த ஒரு வரைபடத்தை ஆசிரியர் வரைந்துள்ளார்.
நகரம் வாய் திறந்து கிடப்பது :
அதில் சொர்கத்தின் கதவுகளுக்கு கீழ், இறுதி நாளும், இயேசு கிறிஸ்துவும் இருக்க, அதற்கு நகரம் வாய் திறந்து கிடப்பது போன்று வரைந்துள்ளார் ஆசிரியர்..!
1651 :
இறுதிநாளுக்கான திகிலூட்டும் கணிப்புகளை கொண்ட இந்த கையெழுத்துப்படிவம் மற்றும் இதன் வரைபடங்கள் அனைத்துமே 1651-ஆம் ஆண்டிற்க்குள் நடக்கும் என்றே ஆசிரியர் குறிபிட்டுள்ளார்.
No comments:
Post a Comment