தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை காஜல் அகர்வால் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து நடித்ததில்லை. அவருக்கு வலுக்கட்டாயமாக லிப் டு லிப் கிஸ் கொடுத்து திணறடித்தார் பாலிவுட் ஹீரோ. இந்த ருசிகர சம்பவம்பற்றிய விவரம்: ‘தோ லப்ஸோ கி கஹானி’ படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். ஹீரோ ரன்தீப் ஹுடா. தீபக் திவாரி இயக்குகிறார். ரன்தீப், காஜலுக்கு இடையே நெருக்கமான காதல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. முகத்தோடு முகம் நெருக்கமாக வைத்து காஜலுடன் ரன்தீப் லயித்தார். திடீரென்று காஜலை இழுத்து அவரது உதட்டில் முத்தம் கொடுத்தார். முன்னதாகவே இது பற்றி காஜலிடம் சொல்லப்படாததால் அதிர்ச்சி அடைந்தார்.
தன்னை ரன்தீப்பிடமிருந்து விடுவித்துக்கொண்டு, ‘கட் கட்’ என்றார். கோபமாக இயக்குனரிடம் சென்றவர் இதுவரை லிப் டு லிப் கிஸ் கொடுத்து நடித்ததில்லை. என்னிடம் சொல்லாமல் எப்படி இக்காட்சியை படமாக்கலாம். உடனடியாக அந்த காட்சியை அழியுங்கள் என்று இயக்குனரிடமும் ஹீரோவிடமும் சண்டை போட்டார். அவரிடம் சமாதானம் பேசிய இயக்குனர் ‘திட்டமிட்டு இக்காட்சி படமாக்கவில்லை. காட்சியில் நன்றாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் ஹீரோ இப்படி செய்தார். ஆனாலும் இந்த சீன் கதைக்கு மிகவும் முக்கியம்’ என்றார். நீண்ட நேர விவாதத்துக்கு பிறகு அக்காட்சியை வைத்துக்கொள்ள சம்மதித்தார் காஜல்.
No comments:
Post a Comment