Tuesday, 31 May 2016

மர்மமான துட்டன்காமன் கத்தி : இது பூமியில் உருவானது

உலோகம் - மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு மிகவும் முக்கிய பங்கு வகித்தது, அதைதான் வரலாற்றாசிரியர்கள் "உலோக" வயது (Metal age) என்று அழைக்கின்றனர். மனித நாகரீகமானது செம்பு, வெண்கலம் , மற்றும் இரும்பு என்ற வரிசையில் தான் உலோகங்களை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்துள்ளது. 

எனினும், ஒவ்வொரு நாளும் பூமிக்குள் இருந்து கிடைத்துக் கொண்டே இருக்கும் பண்டைய ஆதாரங்கள் எல்லாமே நாம் நமது முன்னோர்களை தவறான முறையில் புரிந்துக் கொண்டுள்ளோம் என்பதையும் ஒருபக்கம் நிரூபித்துக் கொண்டே தான் போகிறது..! 


ஆனால், சமீபத்தில் கிடைத்துள்ள ஒரு பண்டைய கால உலோகப் ஒருள் ஆனது இதுவரையில்லாத அளவிலான குழப்பத்தின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்கிறது அது தான் - துட்டன்காமன் இரும்பு கத்தி..! 

ZYLSOPK.jpg

வம்ச மன்னன் :

துட்டன்காமன் (Tutankhamun) என்பவன் கிமு 1341 - கிமு 1323 என்ற காலகட்டத்தில் வாழ்ந்த பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச மன்னன் ஆவான். இவன் கிமு 1333 முதல் கிமு 1324 வரை புதிய இராச்சியம் என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். 

wVf5QsP.jpg

பாரோ :

துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே பாரோ (Pharaoh - பண்டைய எகிப்தை ஆண்டு வந்த ஆட்சியாளர்) ஆனான். பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். 


மம்மி கல்லறை : 

ஆராய்ச்சியாளர்கள் துட்டன்காமனின் மம்மி கல்லறையில் இருந்து இரண்டு கத்திகளை கண்டுபிடித்தனர், அவற்றுள் ஒரு கத்தி மிகவும் விசித்திரமான முறையில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளனர். 

BVIgUbQ.jpg

புனையப்பட்டது :

அதாவது, அந்த இரும்பு கத்தியானது பூமியில் உருவாக்கம் பெற்றது போல் உள்ளது, இன்னும் தெளிவாக சொன்னால் அந்த கத்தியானது விண்கல் துண்டுகளின் இரும்பில் இருந்து புனையப்பட்டது என்று கூறுகிறார்கள். 

LtJACPq.jpg

வானத்திலிருந்து வந்த ஒன்று :

இது விண்வெளியில் உருவான கத்தி என்பதை நிரூபிக்கும் வகையில் பண்டைய எகிப்தியர்கள், உலோகம் என்பது வானத்திலிருந்து வந்த ஒன்று என அவர்களின் பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். 

WEmis7K.jpg

அரிதான கூறு :

எரிமீன் அல்லது விண்வீழ்கள் மற்றும் கிரக அறிவியல் ( Meteoritics and Planetary Science) விளக்கத்தின் கீழ் பண்டைய எகிப்தியர்கள் எப்போதுமே மிகவும் அரிதான கூறுகளை கொண்டுதான் பொருட்களை உருவாக்குவார்கள் என்றும் நம்பப்படுகிறது. 

உற்பத்தி நுட்பங்கள் :

மறுபக்கம் சில ஆராய்ச்சியாளர்கள், கத்தியின் உயர்தர உற்பத்தி நுட்பங்கள், அதிநவீன வடிவமைப்பு முறையை கண்டு, இது இரும்பின் கண்டுபிடிப்புக்கு முன்பே உருவான ஒரு கத்தி என்றும் நம்புகின்றன.

Uz3p1Az.jpg

துரு :

35 செ.மீ. நீளம் கொண்ட அந்த கத்திகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் அதில் துருக்கள் படியாமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

TwHE2ES.jpg

எகிப்தியர் - ஏலியன் :

வேற்று கிரக அமைப்பு (extraterrestrial composition) கொண்ட கத்தியானது வேற்றுகிரக வாசிகளால் துட்டன்காமனுக்கு வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும், எகிப்தியர்களுக்கும் ஏலியன்களுக்கும் தொடர்பு இருந்ததற்கு இதுவும் ஒரு ஆதாரம் என்றும் பல சதியாலோசனை கோட்பாடுகள் உள்ளன.


தெய்வீக செய்தி :

மத்திய தரைக்கடல் பகுதிக்கு அப்பால் நிகழ்ந்ததாக பல பண்டைய கலாச்சாரங்களில் தெய்வீக செய்தியாக குறிப்பிடப்படும் விண்கற்கள் வீழ்ச்சியில் இருந்து தான் இந்த கத்தி உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற விளக்கமும் உண்டு.

No comments:

Post a Comment