Friday, 22 April 2016

வோர்ல்ட் கிளாஸ் : வாய்பிளக்க வைக்கும் 8 ஸ்மார்ட் பைக்ஸ்..!

டெஸ்லா மாடல் 3-ல் இருந்து சாத்தியமான ஆப்பிள் கார் வரையிலாக, இன்னோவேட்டிவ் மற்றும் ஸ்மார்ட்டான மின்சார கார்கள் மட்டும் தான் உலகின் கவனத்தை ஈர்த்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், இந்த தொகுப்பு உங்கள் எண்ணத்தை அடியோடி மாற்றிவிடும். எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் வளர்ந்து வரும் நகரமயமாக்கல் போன்றவைகளை புத்திசாலித்தனமாக சமாளிக்க உதவும் ஒன்று தான் இ-பைக்ஸ் எனப்படும் எலெக்ட்ரிக் பைக்ஸ்..!

முதலில் எளிமையான வடிவமைப்பு முறைகளில் அறிமுகமான இ-பைக்குகள் தற்போது செயலிகள் உதவியுடன் ஸ்மார்ட்போன் மூலம் இணைத்து கொள்ளும் திறன் போன்ற புதிய புதிய அம்சங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்படுகின்றன. அப்படியாக உலக தரத்தில், மிகவும் புதுமையான மற்றும் ஸ்மார்ட் ஆன முறையில் உருவான 8 இ-பைக்குகளைதான் கீழ் தொகுத்துள்ளோம்..! 

uaqzgLK.jpg

ஸ்மார்ட் பைக் #1 :

ஜி ப்ளைபைக் (Gi FlyBike) - இதற்கென தனியாக ஒரு செயலியே (ஆப்) உண்டு. ஆட்டோமாடிக் லாக்கர் கொண்ட இதில் உங்கள் மொபலை சார்ஜ் செய்துகொள்ளும் வசதி உண்டு, அதுமட்டுமின்றி இதை பாதியாக மடித்து எங்கும் எடுத்து செல்ல முடியும். விலை : 2000 டாலர்களுக்கு மேல்..!

Sgd3aqX.jpg

ஸ்மார்ட் பைக் #2 :

ஒகேஒ எலெக்ட்ரிக் பைக் (OKO electric bike) - இது ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 25 மைல்கள் தூரம் பயணிக்கும் அளவிலான சக்திவாய்ந்த பேட்டரிகளை கொண்டது. விலை 2300 டாலர்களுக்கு மேல்..! 

EHldDRr.jpg

ஸ்மார்ட் பைக் #3 :

ஓட்டோசைக்கிள் ரேசர்ஆர் (Otocycle RacerR) - இதில் உள்ள பைவ் லெவல் எல்சிடி அம்சம் மூலம் இ பைக்கின் பேட்டரி மற்றும் பைக்கின் பெர்பார்ம்மன்ஸ் ஆகியவைகளை எளிமையாக கண்டுகொள்ள முடியும். பார்பதற்கு மோட்டார் சைக்கிள் போல் இருக்கும் இது ஒரு முறை சார்ஜ் செய்தால் மணிக்கு 15 மெயில் வேகத்தில் சுமார் 40 மைல்கள் தூரம் வரை பயணிக்கும். 

WHwpOWN.jpg

ஸ்மார்ட் பைக் #4 :

ஜென்ஸ் இ-பைக் (Genze e-bike ) - இதன் பிரதான சிறப்பம்சம் ரிமூவபில் பேட்டரி (Removable Battery)தான், எங்கு வேண்டுமானாலும் அதை கழட்டி சார்ஜ் செய்து கொள்ள முடியும். த்ரோட்டுல் மோட்டில் ( throttle mode) மணிக்கு 20 மெயில் வேகத்தில் செல்லக் கூடிய இதில் வேகம், மிதி நிலை, இ-பைக் முறை, மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவைகளை காட்சிப்படுத்தும் எல்சிடி டிஸ்ப்ளேவும் உள்ளது. விலை 1500 டாலர்களுக்கு மேல்..! 

bAJ8O66.jpg

ஸ்மார்ட் பைக் #5 :

போர்ட் நிறுவனத்தின் மோட்:ப்ளெக்ஸ் இ-பைக் (Ford's MoDe:Flex e-bike) - போர்ட் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட் பைக். ஸ்மார்ட்போன் மூலம் இணைத்துக் கொள்ளப்பட்டபின் பிளான் ரூட்ஸ், பிட்னஸ் தகவல்கள், போக்குவரத்து சார்ந்த எச்சரிக்கைகள் போன்றவைகளை வழங்கி கொண்டே இருக்கும். இரண்டாக மடித்துக்கொள்ளும் வடிவமைப்பு கொண்ட இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை..!

5ubSzzt.jpg

ஸ்மார்ட் பைக் #6 :

லியஸ் சோலார் (Leaos Solar) - இது இரண்டு பக்கமும் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் தானாகவே சார்ஜ் ஆகிக்கொள்ளும். 2 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் இது பேடல் அச்சிஸ்ட் மோட்டில் 62 மைல்கள் தூரம் பயணிக்கும். விலை 8700 டாலர்களுக்கு மேல்..! 

cv5VI3S.jpg

ஸ்மார்ட் பைக் #7 :

வை-பைக் (Wi-Bike) - இதிலுள்ள ஜிபிஎஸ் மானிட்டர் மூலம் பைக் எங்கே செல்கிறது எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். திருட முடியாத வண்ணம் ஆன்ட்டி-தெப்ட் அம்சமும் இதில் உண்டு. உரிமையாளரை விட்டு 16 அடி தூரம் விலகி சென்றால் இந்த பைக் ஆனது உரிமையாளருக்கு தானாக ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பும். மொபைல்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் இதில் யூஎஸ்பி போர்ட்களும் உண்டு. 

L81MCj7.jpg

ஸ்மார்ட் பைக் #8 :

வன்மூப்-ன் புதிய இ-பைக் (Vanmoof's new electric bike) - இது இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டு வசதியும், கைரேகை மூலம் அன்லாக் செய்யும் வசதியும் கொண்டது. குறிப்பிட்ட செயலி மூலம் இதன் வேகத்தை கட்டுப்படுத்தவும் முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் மணிக்கு 20 மெயில் வேகத்தில் சுமார் 70 மைல்கள் தூரம் பயணிக்க கூடியது. விலை 2000 டாலர்களுக்கு மேல்..!

No comments:

Post a Comment