Friday 29 April 2016

பழைய வாட்ஸ்ஆப் ஆப், ஆனால் புதிய பயன்கள்.!

ஃபேஸ்புக் வைத்திருக்கும் வாட்ஸ்ஆப் செயலி தனது பயனர்களுக்கு கடந்த சில மாதங்களாக பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகின்றது. அந்த வரிசையில் வாட்ஸ்ஆப் செயலியின் சில புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

dVSc65E.jpg

கால் பேக்

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கான வாட்ஸ்ஆப் செயலியில் கால் பேக் எனும் புதிய அம்சம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தவறிய அழைப்பு

இந்த கால் பேக் அம்சம் மூலம் வாட்ஸ்ஆப் செயலியில் தவற விடப்பட்ட அழைப்புகளுக்கான நோட்டிபிகேஷன்களை அறிந்து கொள்ள முடியும் என்பதோடு செயலியை ஓபன் செய்யாமலேயே மீண்டும் வாட்ஸ்ஆப் அழைப்பினே மேற்கொள்ள முடியும். 

வாய்ஸ்மெயில்

மேலும் ஐஓஎஸ் இயங்குதளங்களத்திற்கு வாய்ஸ்மெயில் அம்சமும், புதிதாக ரெக்கார்டு வாய்ஸ் மெயில் மற்றும் சென்ட் வாய்ஸ் மெயில் போன்ற அம்சமும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

ஃபைல்

இந்த அம்சங்களோடு வாட்ஸ்ஆப் செயலியில் ZIP ஃபைல்களை பகிர்ந்து கொள்ளும் அம்சமும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்சமயம் வரை வாட்ஸ்ஆப் செயலியில் PDF, VCF, DOCX மற்றும் DOCS போன்ற ஃபைல்களை பரிமாறி கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ கால்

அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சமாக இருக்கும் வீடியோ கால் வசதியும் அடுத்த அப்டேட் மூலம் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

என்க்ரிப்ஷன்

இம்மாத துவக்கத்தில் வாட்ஸ்ஆப் செயலியில் முழுமையான என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்பட்டது, இதன் மூலம் வாட்ஸ்ஆப் செயலியில் பகிர்ந்த கொள்ளப்படும் தரவுகள் அனைத்தும் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment