டைம் டிராவல் (Time Travel) அதாவது காலப்பயணம் என்பது - தற்காலத்தில் இருந்து சில கணங்கள் முதல் நாட்கள், ஆண்டுகள் காலகட்டத்திற்கு முன்னோக்கி அல்லது பின்னோக்கி பொருள்களை/மனிதர்களை அனுப்புதல் என்பதாகும்.
டைம் டிராவல் என்ற கருத்தாக்கத்திற்கு அறிவியல் பூர்வமான எந்த விதமான துல்லியமான ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்கிற போதும் அவ்வபோது டைம் டிராவல் புரிந்தவர்கள் மற்றும் டைம் மெஷின் போன்றவைகள் பற்றிய சதியாலோசனை கோட்பாடுகளும், ஆதரங்களும் கிளம்பி கொண்டே தான் இருகின்றன. அப்படியாக சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள மிகவும் சுவாரசியமான நம்பமுடியாத (அதே சமயம் நகைப்பான) ஒரு டைம் டிராவல் ஆதாரம் தான் இது !!
பெண் மம்மி :
மங்கோலியாவில் உள்ள அல்தை மலைப்பகுதியில் (Altai Mountains) சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன பெண் மம்மி ஒன்று தோண்டி எடுக்கப்பட்டது.
எஞ்சியுள்ள உடல் பகுதி :
இதுவரையிலாக அந்த பெண் மம்மியின் எஞ்சியுள்ள உடல் பகுதிகளான கை மற்றும் பாதம் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது இருப்பினும், அதுதான் தற்போது இன்டர்நெட்டை ஒரு கலக்கு கலக்கி கொண்டிருகிறது.
பாரம்பரிய காலணி :
ஏனெனில், கண்டுப்படிக்கப்பட்ட பெண் மம்மி அணிந்திருக்கும் அக்காலத்து பாரம்பரிய காலணியான பார்பதற்கு அச்சுஅசலாக ஜெர்மன் விளையாட்டு பிராண்ட் ஆன அடிடாஸ் ஷூ போன்றே வடிவமைப்பில் இருக்கிறது.
அடிடாஸ் ட்ரெயினர்ஸ் :
அதவாது தெளிவாக அந்த காலணிகள் சற்று புதிய மற்றும் தூய்மையான அடிடாஸ் ட்ரெயினர்ஸ் (ADIDAS trainers) ஷூ போன்றே காட்சியளிக்கிறது. இதன் மூலம் இப்பெண் காலத்தில் பின்னோக்கி பயணித்த ஒரு டைம் டிராவலர் என்ற கோட்பாடுகள் கிளம்பி உள்ளன.
குதிரை :
அதுமட்டுமின்றி கிடைகப்பபெற்ற பெண் மம்மியானது ஒரு குதிரையுடன் இணைத்து புதைக்கப்பட்டுள்ளது. உடன் ஒரு சேணம், கடிவாளம், களிமண் குவளை, மர கிண்ணம், தொட்டி மற்றும் இரும்பு கெண்டி ஆகியவைகளும் அப்பெண் மம்மி உருவத்துடன் கிடைக்கப்பெற்றுள்ளது
தனிப்பட்ட நுண்ணறிவு :
மங்கோலியர்கள் வாழ்வில் மிகவும் தனிப்பட்ட நுண்ணறிவுகளில் இந்த "அடிடாஸ்" ஷூ வடிவமைப்பும் ஒன்றாகும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
துருக்கிய அடக்கம் :
மத்திய ஆசியாவில் முதன்முதலாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள துருக்கிய அடக்கம் (Turkik burial) ஆன இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஏற்கனவே ஏகப்பட்ட கேள்விகள் எழத்தொடங்கி விட்டன.
உயர் அடுக்கு இனம் :
கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள மம்மியானது ஒரு பெண்ணாக இருக்கலாம் என்றும், உயர் அடுக்கு இனத்தை சேர்ந்தவர் அல்ல என்பது அவர் கல்லறைக்குள் கிடைக்கப் பெறவில்லை என்பதின் மூலமும் அறிந்துகொள்ள முடிவதாக க்ஹோத் அருங்காட்சியகத்தை (Khovd Museum) சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment