மோட்டோரோலா நிறுவனம் தனது நான்காம் தலைமுறை மோட்டோ ஜி கருவிகளை மே மாதம் 17 ஆம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுக்கின்றது. இதோடு அந்நிறுவனம் மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவியை வெளியிடலாம் என்றும் கூறப்படுகின்றது. மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவியில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
வெளியீடு
மோட்டோ ஜி3 கருவிகளை போன்றே இந்த கருவிகளையும் முதலில் இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர்
லெனோவோ கைப்பற்றியிருக்கும் மோட்டோரோலா நிறுவனத்தின் பிரான்ட் 'மோட்டோ பை லெனோவோ' என மாற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து இந்த மாற்றம் மோட்டோ ஜி4 வெளியீட்டில் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரகசியம்
முன்னதாக மோட்டோ ஜி4 மற்றும் மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவி தகவல்கள் புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் வெளியானது, எனினும் இவை எதுவும் அந்நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்தது.
நிறம்
இம்மாத துவக்கத்தில் மோட்டோ ஜி4 கருவியின் ப்ரோடோடைப் மற்றும் மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவியின் புகைப்படம் வெளியானது. இதில் மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவி வெள்ளை நிறம் கொண்டு, சதுர வடிவம் கொண்ட கைரேகை ஸ்கேனர், ஸ்பீக்கர், கேமரா போன்ற அம்சங்கள் காணப்பட்டன.
வீடியோ
இதே போல் மோட்டோ ஜி4 கருவி குறித்து வெளியான வீடியோவில் கைரேகை ஸ்கேனர் காணப்படவில்லை, கருப்பு நிற கருவியானது முந்தைய மாடலை விட பெரிதாக இருந்ததோடு, இந்த கருவியில் ஆக்டிவ் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் இருப்பதும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment