எளிதில் விளக்கம் அளிக்க முடியாத, தெளிவான பதில் இல்லாதவைகளை தான் மர்மம் என்கின்றோம். இன்று பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காக மர்மமங்களை அறிந்து கொள்வது இருக்கின்றது. உலகில் மர்மமான ஒரு விஷயம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமானது.
சுவார்ஸ்யங்கள் யாருக்கு தான் பிடிக்காது. உலகமே சுவார்ஸ்யம் நிறைந்த ஒன்று தான். இதில் உலகெங்கும் இருக்கும் பல சுவார்ஸ்ய விஷயங்களை தெரிந்து கொள்ளும் போது மனம் புது வித அனுபவம் பெறுவதோடு மகிழ்ச்சியும் கொள்கின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் உலகளவில் மர்மமாக கருதப்படும் சில விசித்திர புகைப்படங்கள் சார்ந்த தொகுப்பு தான் இது.
பபுஷிகா லேடி
இந்த புகைப்படத்தில் காணப்படும் பெண்மனி பபுஷிகா லேடி என அழைக்கப்படுகின்றார். இவர் யார் என்ற தெளிவான தகவல்கள் இல்லாத நிலையில் இவர் ஜான் எஃப் கென்னடி கொலை செய்யப்பட்ட இடத்தில் படமாக்கப்பட்ட வீடியோவில் பதிவாகியிருந்தார். இவரை விசாரித்தால் கொலை சம்பவம் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கும் என்ற முயற்சியில் காவல் துறையினர் இவரை கண்டுபிடிக்க முயன்றனர்.
மர்மம்
இன்று வரை புகைப்படத்தில் இருக்கும் பெண்மனி கண்டுபிடிக்கப்படவே இல்லை. இவர் யார் என்பது குறித்த தகவல்கள் தொடர்ந்து மர்மமாகவே இருக்கின்றது.
ஹெஸ்டேலென் லைட்ஸ்
ஹெஸ்டேலென் லைட்ஸ் என்பது நார்வேயின் வானத்தில் ஆண்டு முழுக்க காணப்பட்டது. 1981 முதல் 1984 ஆம் ஆண்டு வரை வாரத்தில் சுமார் 15 முதல் 20 முறை வானத்தில் தென்ப்பட்டது.
மர்மம்
வானத்தில் பிரகாச வெளிச்சங்களை பிரதிபலிக்கும் ஹெஸல்டேலென் லைட்ஸ் குறித்த அறிவுப்பூர்வமான விளக்கம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.
ஹூக் தீவு கடல் மிருகம்
1964 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி படமாக்கப்பட்ட இந்த புகைப்படம் உலகளவில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இன்று எடுக்கப்பட்டதாக இருந்தால் இது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என பலரும் கூறி இருப்பர்.
மர்மம்
ராபர்ட் லீ செரெக் மற்றும் தன் மனைவி ஹூக் தீவின் ஸ்டோன்ஹேவென் பே பகுதியில் மர்மம உருவம் ஒன்றை பார்த்து, அதன் பின் அதனினை படமாக்க துவங்கினர். தாங்கள் கண்ட உருவமானது 75 முதல் 80 அடி நீளமாக இருந்தது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
சால்வே ஃபிர்த் ஸ்பேஸ்மேன் மர்மம்
இங்கிலாந்தின் கம்ப்ரியா பகுதியில் தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஜிம் டெம்பிள்டன் என்பவர் எடுத்தார். 1964 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் விண்வெளி வீரர் ஆடையுடன் ஒருவர் நிற்பதை கண்டுபிடிக்கப்பட்ட இந்து புகைப்படம் யுஎஃப்ஒ வல்லுநர்கள் மத்தியில் வேகமாக பரவியது.
மர்மம்
காவல் துறையில் வழங்கப்பட்ட இந்த புகைப்படத்தில் மர்மமாக ஏதும் இல்லை என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இப்புகைப்படம் குறித்த மர்ம தகவல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
எஸ்எஸ் வாட்டர்டவுன் ஃபேன்டம் ஃபேஸ்
ஜேம்ஸ் கொர்ட்னி மற்றும் மைக்கேல் மீஹன் என்ற இருவர் 1924 ஆம் ஆண்டு கார்கோ டேன்க் ஒன்றை சுத்தம் செய்தனர். அச்சமயம் வாயு தாக்கி இறந்துவிட்டனர். அதன் பின் கடற்கரையில் அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டன.
முகம்
இருவரின் உடல்களில் புதைக்கப்பட்ட பின் அவர்களின் முகம் போன்ற உருவம் நீரில் மிகவும் தெளிவாக தெரிவதாகவும் கூறப்படுகின்றது.
ஏலியன் விண்கலம்
கடந்த 13,000 ஆண்டுகளாக ஏலியன் விண்கலம் ஒன்று பூமியை சுற்றி வருவதாக ப்ளாக் நைட் சதி கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. சிலர் இதனினை தாமதிக்கப்பட்ட எதிரொலி மற்றும் 1899 ஆம் ஆண்டு நிகோலா டெஸ்லா கண்டறிந்த ரேடியோ சிக்னல்களை முன்வைத்து இதனினை நம்புகின்றனர்.
துவக்கம்
1950 ஆம் ஆண்டு முதல் இது ஒரு விண்கலமாக இருக்கலாம் என்ற ரீதியில் சந்தேகங்கள் கிளம்ப யுஎஃப்ஒ ஆய்வாளர் டோனால்டு கீஹோ என்பவர் விண்வெளியில் யாரும் விண்கலம் செலுத்தாத நேரத்தில் அமெரிக்க விண்வெளியில் இரண்டு விண்கலங்களை கண்டதாக தெரிவித்துள்ளார்.
' விரிவான தகவல் '
கூப்பர் குடும்பம்
தனது புதிய வீட்டிற்கு சென்றதும் கூப்பர் குடும்பம் எடுத்து கொண்ட முதல் புகைப்படம் தான் இது. இந்த புகைப்படம் டெவலப் செய்யப்பட்ட போதே இதில் இருக்கும் மர்ம உருவம் தெளிவாக காணப்பட்டது.
மர்மம்
இப்புகைப்படத்தில் காணப்படும் மர்ம உருவம் குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. சிலர் இந்த புகைப்படத்தில் ஏதோ மர்மம் அல்லது கோளாறு ஏதும் ஏற்பட்டிருக்கலாம் என நம்புகின்றனர்.
நிலா
அப்போலோ 17 மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் பல காரணங்களால் தெளிவாக எடுக்கப்படவில்லை என்றாலும், இதில் சில தகவல்கள் அதன் மீதான ஆர்வத்தை அதிகரிக்கத்தான் செய்கின்றது.
கோபுரம்
தெளிவில்லா புகைப்படங்களில் கூர்நுனிக் கோபுரங்கள் தெரிவாத எழுந்த சந்தேகமானது நாசா திட்டமிட்டே சில ரகசியங்களை மறைக்கின்றது என்பதில் நிற்கின்றது.
ஃப்ரெட்டி ஜாக்சன்
1919 ஆம் ஆண்டு ஃப்ரெட்டி ஜாக்சன் என்ற விமான பொறியாளர் விபத்தில் உயிர் இழந்தார். அச்சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்களுக்கு பின் ஸ்குவாட்ரான் மற்றும் கொட்டார்ட் புகைப்படம் எடுத்து கொண்டனர். தற்செயலாக இந்த புகைப்படத்தில் மரணித்த ஃப்ரெட்டி உருவம் பதிவாகி இருந்தது.
ஆவி
ஃப்ரெட்டி மரணித்த பின் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவரது உருவம் பதிவாக இருப்பதால், பலரும் இது ஃப்ரெட்டியின் ஆவி தான் என நம்புகின்றனர்.
எலிஸா லேம்
லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் அமைந்திருக்கும் செசில் தங்கும் விடுதியில் தங்கி இருந்தவர் தான் எலிஸா லேம். பைபோலார் டிஸார்டர் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் திடீரென மரணித்தார்.
சந்தேகம்
உடல்நல கோளாரால் மரணித்ததாக அறியப்பட்ட இவரது மரணம் குறித்து பல்வேறு மர்மம் தொடர்ந்து நீடிக்கின்றது. இவரது மரணத்திற்கு முன் இவர் இவரது நடவடிக்கைகள் வீடியோ மூலம் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment