Wednesday 20 April 2016

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணியாற்றிய ஜான் போடெஸ்டா ஏலியன் சார்ந்த சில தகவல்களை தெரிவித்து

உண்மையில் வேற்றுகிரக வாசம் இருக்கின்றதா, இல்லையா என்ற கேள்விக்கு இன்று வரை குழப்பம் தான் தெளிவான பதிலாக இருக்கின்றது. ஒரு விஷயத்தை புதிதாக தெரிந்து கொண்டு, அவற்றை விரிவாக புரிந்து கொள்ள முற்படும் போது பல்வேறு வினோதங்களையும், புதிய அனுபவங்களையும் பெற முடியும். 

அவ்வாறு பெரும்பாலான உலக நாடுகளும் வேற்று கிரக வாசம் குறித்து தேடலில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன. ஆனால் இத்தேடலில் கிடைத்த தகவல்கள் எதுவும் மக்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை என்பதே உண்மை. இதன் காரணமாகவே வேற்றுகிரக வாசம் குறித்த மர்மங்கள் இன்று வரை தொடர் கதையாக இருக்கின்றது. 

JiV5yvI.jpg

விடை

தற்சமயம் வரை நீடித்து வரும் ஏலியன் சார்ந்த குழப்பங்களுக்கு ஒரு வழியாக விடை கிடைத்துவிட்டது. 

DNyvRGA.jpg

வெள்ளை மாளிகை

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணியாற்றி வந்த ஜான் போடெஸ்டா என்பவர் ஏலியன் சார்ந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளார். 

3H7Tgbu.jpg

கிளின்டன்

இவர் ஹிலாரி கிளின்டனின் பிரச்சார தலைவராக பணியாற்றி வந்தார். தற்சமயம் இவர் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் யுஎஃப்ஒ மற்றும் ஏலியன் தேடல் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். 

u7ABCcZ.jpg

அதிகம்

'அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சார்ந்த மக்களின் கேள்விகளுக்கு அமெரிக்க அரசாங்கம் அதிகளவு பதில் வழங்க முடியும்' என அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

RdE1cJL.jpg

கேள்வி

'அதிபர் கிளின்டன் உடன் பணியாற்றும் போது ஏலியன் இருப்பதற்கான ஆதாங்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?' என்ற கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு மிகவும் யோசித்து பதில் அளித்த அவர், பாதுகாப்பாக தனது வார்த்தைகளை பயன்படுத்தினார். 

OFgDlkL.jpg

பதில்

'அமெரிக்க அரசு வைத்திருக்கும் ஆதாரங்களை பார்த்து மக்கள் தான் இதை முடிவு செய்ய வேண்டும்' என அவர் பதில் அளித்துள்ளார். 

ioshPU1.jpg

நம்பிக்கை

வேற்றுகிரக வாசத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா என்ற கேள்விக்கு அவர், 'வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கின்றது' என சிரித்து கொண்டே பதில் அளித்துள்ளார். மேலும் 'அமெரிக்க மக்களால் உண்மையை கையாள முடியும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

PomFLH8.jpg

தகவல்

யுஎஃப்ஒ நடமாட்டம் இருப்பதாக அறியப்படும் நெவேடா பகுதி சார்ந்த தகவல்களில் உண்மை வெளியிடப்பட வேண்டும் என திருமதி கிளின்டன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார். 

y8tbVry.jpg

ஏரியா 51

'திருமதி கிளின்டன் அமெரிக்க அதிபரானால் ஏரியா51, நெவேடா குறித்த பல்வேறு அரசு ஆவணங்களை கேட்க கூடும்' என போடெஸ்டா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். 

விளக்கம்

ஏலியன் இருப்பது குறித்து இதுவரை வெளியான தகவல்களில் அதிகாரப்பூர்வமாக மிகவும் உறுதியான தகவல் இது தான் என்றும் நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment