Thursday 21 April 2016

ஆண்ட்ராய்டு தெரியும், ஆனால் ஆண்ட்ராய்டு பற்றி இதெல்லம் தெரியுமா.?

உலகளவில் அனைவரும் அறிந்த இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருக்கின்றது, இன்றைய ஸ்மார்ட்போன் கருவிகளில் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இருக்கின்றது எனலாம். இந்தளவு பிரபலமான ஆண்ட்ராய்டு இயங்குதளம் குறித்து பலருக்கும் தெரிந்திராத சில தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.. 

ucOVjNP.jpg

ஆண்ட்ராய்டு

2015 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு வரையிலாக உலகெங்கும் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் சுமார் 81% கருவிகளில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

ஆண்ட்ரயாடு 

2017 ஆம் ஆண்டு உலகெங்கும் விற்பனை செய்யப்பட இருக்கும் ஸ்மார்ட்போன்களில் சுமார் 84% கருவிகள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும். 

tW9DxeP.jpg

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு இயங்குதளம் இதுவரை சுமார் 3,100 கோடி வரை ஈட்டியுள்ளது. 2008 ஆம் ஆண்டில் இருந்து இது வரை லாபம் மட்டும் சுமார் 2,200 கோடியை கூகுள் ஈட்டியுள்ளது.

பணம் 


ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் கூகுள் நிறுவனம் இரு வழிகளில் பணம் ஈட்டுகின்றது. ஒன்று ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் வழங்கும் விளம்பரங்கள், இரண்டாவது கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் பணம் சம்பாதிக்கின்றது. 

ZH5AwzG.jpg

உருவாக்கம்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கூகுள் நிறுவனம் உருவாக்கவில்லை. முன்னாள் ஆப்பிள் பொறியாளர் ஆன்டி ரூபின் தான் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கினார். இதன் பின் ஆண்ட்ராய்டினை கூகுள் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு வாங்கி கொண்டது. 

வெளியீடு 

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் முதல் பதிப்பு (வெர்ஷன் 1.0) 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முதல் பதிப்பிலேயே கூகுள் நிறுவனத்தின் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

DAxKetR.jpg

பெயர்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் முதல் பதிப்புகளுக்கு இனிப்பு பெயர்கள் ஏதும் வழங்கப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு வெளியான பதிப்புகளில் கப்கேக் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. இதன் பின் டோநட், எக்ளேர், ஜின்ஜர் பிரெட், ஹனிகாம்ப், ஐஸ்கிரீம் சான்ட்விட்ச், ஜெல்லி பீன், கிட்காட், லாலிபாப் மற்றும் புதிய பதிப்பு மார்ஷ்மல்லோ என பெயர் சூட்டப்பட்டு வருகின்றது. 

சீன சந்தை 

உலகின் பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் சீனாவில் தான் தயாரிக்கப்படுகின்றது. ஆண்ட்ராய்டு சந்தையில் சீன ஸ்மார்ட்போன்கள் சுமார் 78% கருவிகளை தயாரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment