Saturday, 30 April 2016

கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் பற்றி 3 ஆபத்தான கட்டுக்கதைகள்..!

நம் அனைவருக்குமே ஒரு 'இன்ஸ்பிரேஷன்' (Inspiration) இருக்கும் - அதவாது, நமக்கு மிகவும் பிடித்த ஒருவரை கண்டு-அவர்களின் வாழ்வால் ஈர்க்கப்பட்டு பிரமித்து, அவர்களால் நமக்குள் ஏற்படும் ஒரு தூண்டுதல் சக்தி..! 

பொதுவாக, அந்த தூண்டுதல் சக்தியானது நீங்கள் எந்த துறையை சார்ந்தவரோ அந்த துறையில் ஜாம்பவனாக இருப்பவர் தான் உங்களது தூண்டுதல் சக்தியாக இருப்பார். எடுத்துக்காட்டுக்கு, அப்துல் கலாம், சச்சின் டெண்டுல்கர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீவ் ஜாப்ஸ் என அடுக்கி கொண்டே போகலாம்..! 

S90uKpH.jpg

ஜாம்பவான்களை பற்றி :

இப்படியான இன்ஸ்பிரேஷன்களை உண்டாக்கும் ஜாம்பவான்களை பற்றி, அவர்கள் இப்படியெல்லாம் இருந்தார்கள்., அதையெல்லாம் செய்தார்கள், அதனால் தான் அவர்கள் வெற்றியாளர்கள் ஆனார்கள் என்று ஏகப்பட்ட கட்டுகதைகள் உண்டு..! 

Pto0vZF.jpg

'செட்-அப்' :

அதையெல்லாம் நம்பி, நாமும் அவர்களை போன்றே இருப்பின் நாமும் ஜாம்பவான்களுக்கான தகுதியை உள்ளடக்கியுள்ளோம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் தோல்வியை நீங்களே 'செட்-அப்' செய்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம்..! 

GJLekSd.jpg

3 கட்டுக்கதைகள் :

அப்படியாக, பெரும்பாலான கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் பற்றிய 'பொதுவான' ஆபத்தான 3 கட்டுக்கதைகளை தான்  தொகுத்துள்ளோம்.

MPM24d5.jpg

கட்டுக்கதை #1 :

ஜாம்பவான்கள் ஒரு 'லோன் வுல்ப்' (Lone Wolf) ஆக இருப்பார்கள், அதாவது அவர்கள் எப்போதுமே தங்களை மிகவும் தனிமைப்படுத்திக் கொள்வார்கள்..! 

நிதர்சனம் :

ஆனால், பெரும்பாலும் அப்படியெல்லாம் கிடையவே கிடையாதாம். பெரும்பாலான ஜாம்பவான்கள் சமூகத்தோடும், சொந்த வாழ்க்கையோடும் மிகவும் இணைந்து செயல்பட்டனர் என்பது தான் நிதர்சனம். 

oVUByZK.jpg

கட்டுக்கதை #2 :

யூரேக்கா மொமன்ட், அதாவது திடீரென்று ஒரு முன்புரியாத பிரச்சனை அல்லது கருத்தை புரிந்து கொள்ளும் மனித அனுபவம்..!

நிதர்சனம் :

தொடர்ச்சியான முயற்சிகள், தோல்விகள் அதனால் ஏற்படும் அனுபவம் மற்றும் ஞானம் ஆகிவைகளை கொண்டுதான் பெரும்பாலான ஜாம்பவான்கள் உருவாகி இருக்கிறார்களே தவிர ஒரே இரவில் யாரும் ஜாம்பவான் ஆகிவிடவில்லை என்பது தான் நிதர்சனம்..! 

KBA041M.jpg

கட்டுக்கதை #3 :

ஒரு குறிப்பிட்ட துறையில் ஜாம்பவானாக உருவாக வேண்டுமென்றால், முதலில் இருந்தே அந்த துறையில் பெரிய வல்லுனராக இருந்திருக்க வேண்டும். 

நிதர்சனம் :

ஒரு துறையின் மீதான ஆர்வம் வேண்டுமென்றால் விரைவில் தோன்றலாம். ஆனால், அத்துறைக்குள் நாம் பெறும் அதிகப்படியான அறிவும், உழைப்பும் தான் நம்மை வல்லுனராக உருவாக்குமே தவிர வல்லுனராக இருப்பதால் யாரும் ஜாம்பவனாகி விட இயலாது..!

No comments:

Post a Comment