அமெரிக்காவில் கொலையாளி பயன்படுத்திய ஐபோன் கருவியை அன்லாக் செய்ய அதிகளவு பணம் செலவழித்திருப்பதாக அமெரிக்க புலன் விசாரனை கூட்டாட்சி பணியகத்தின் (எஃப்பிஐ) தலைவர் ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளார்.
அதன் படி அன்லாக் செய்தவருக்கு கோமி மீதம் இருக்கும் தன் வாழ்நாளில் சம்பாதிக்க இருக்கும் பணத்தை இந்த வழக்கிற்காக வழங்கி இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
வருமானம்
எஃப்பிஐ மற்றும் அமெரிக்க நிதி மற்றும் நிர்வாக அலுவலக தகவல்களின் படி கோமியின் வருமானம் ஜனவரி 2015 ஆம் ஆண்டு வரை சுமார் $183,300 ஆக இருந்தது.
எதிர்காலம்
கோமி மீதமிருக்கும் தன் பணி காலத்தில் மொத்தம் $1.34 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.89,351,133 வரை சம்பாதிப்பார் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஹேக்கிங்
ஹேக்கிங் செய்ததற்கு எஃப்பிஐ இதுவரை இல்லாத அளவு அதிக பணம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக போனினை ஹேக் செய்ய ரூ.6,66,79,950 வழங்கப்பட்டது அதிகபட்ச தொகையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அஸ்பென் செக்யூரிட்டி ஃபோரம்
லண்டன் நகரின் அஸ்பென் பாதுகாப்பு கருத்துக்களம் ஒன்றில் ஐபோனினை அன்லாக் செய்யும் மென்பொருளுக்கு எஃப்பிஐ எவ்வளவு தொகை வழங்கியது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
பதில்
'வழங்கப்பட்ட தொகை மிகவும் அதிகமானது, அதாவது மீதம் இருக்கும் எனது பணிக்காலத்தில் நான் சம்பாதிக்கும் தொகை. சரியாக நான் இன்னும் ஏழு ஆண்டுகள் நான்கு மாதத்திற்கு பணியில் இருப்பேன்' என கோமி பதில் அளித்தார்.
வழக்கு
சான் பெர்நார்டினோ கொலையாளியின் ஐபோனினை மூன்றாம் தரப்பு உதவியோடு அன்லாக் செய்யப்பட்டு விட்டதாக நீதித்துறை சார்பில் மார்ச் மாதம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்துடனான வழக்கு திரும்ப பெறப்பட்டு விட்டதும் குறிப்பிடத்தக்கது.
பயன்பாடு
கண்டறியப்பட்டிருக்கும் மென்பொருள் கொண்டு ஐஓஎஸ் 9 இயங்குதளம் கொண்ட மற்ற ஐபோன் 5சி கருவிகளை அன்லாக் செய்ய முடியும் என்றும் கோமி தெரிவித்துள்ளார்.
பயன்பாடு
தற்சமயம் அமெரிக்காவில் மொத்தம் ஒரு கோடி பேர் ஐபோன் 5சி கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர், இவர்களில் சுமார் 84 சதவீதம் பேர் ஐஓஎஸ் 9 இயங்குதளம் பயன்படுத்தி வருவதாக ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சான் பெர்நார்டினோவில் நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்ததோடு 22 பேர் காயமுற்றனர்.
குற்றவாளி
இந்த துப்பாக்கி சூட்டில் முக்கிய குற்றவாளியின் ஐபோன் கருவியை அன்லாக் செய்வதில் அமெரிக்க புலனாய்வு பிரிவு ஆப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்தது.
வழக்கு
வழக்கு விசாரனை நடந்து கொண்டிருக்க குற்றவாளியின் ஐபோன் கருவியை அன்லாக் செய்ய முடியாது என ஆப்பிள் நிறுவனம் பிடிவாதம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒத்துழைப்பு
இவ்வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல்வேறு பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பணம்
'இவ்வழக்கில் ஐபோன் கருவியை அன்லாக் செய்ய ரூ.89 கோடி செலவிடப்பட்டது என்னை பொருத்த வரை கொடுத்த பணத்திற்கு மதிப்புடையது தான்' என ஜேம்ஸ் கோமி தெரிவித்திருக்கின்றார்.
No comments:
Post a Comment