Saturday 16 April 2016

மார்ஸ் மிஷன் : நம்மை தடுக்கும் 10 'தெளிவற்ற' சிக்கல்கள்..!

மார்டியன் திரைப்படமும், அங்கு சிக்கி கொண்டு உயிர் வாழப்போராடும் 'மேட் டமோன்' கதாப்பாத்திரமும், செவ்வாய் கிரகத்தின் மீதான நமது ஆர்வத்தையும் அதன் மீதான இனம் புரியாத தேடலையும் சற்றே அதிகரித்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்..! 

உண்மையில், செவ்வாய் கிரகம் நோக்கிய பயணம் என்பது மார்டியன் திரைப்படத்தில் காட்சிப் படுத்தியதை விடவும், நாம் நினைப்பதை விடவும் மிகவும் கடினமாகும். கதிர்வீச்சு மட்டுமில்லாது, விண்ணில் செலவழித்த நேரம், மற்றும் மனநல-சுகாதார பிரச்சினைகள் என செவ்வாய்க்கான பயணங்களில் எதிர்கொள்ளும் மற்ற பிற கடுமையான சவால்களும், தெளிவற்ற சிக்கல்களும் உள்ளன. 

4W0NQsI.jpg

மார்ஸ் மிஷன் சவால் #10 :

சற்று நீண்ட செவ்வாய் தினம் (Martian Day) 

ip0osSW.jpg

பாதிப்பு : 

ஒரு செவ்வாய் நாள் என்பது பூமியின் ஒரு நாளை விட 40 நிமிடங்கள் அதிகம். மனிதர்கள் 24 மணி நேரத்திற்கு மிகவும் பழக்கப்பட்டவர்கள் என்பதால் இது மிகப்பெரிய அளவில் விண்வெளி வீரர்களை பாதிக்கும். 

kApZPIc.jpg

மார்ஸ் மிஷன் சவால் #09 : 

செவ்வாய் கிரகத்தின் குறைந்த மேற்பரப்பு ஈர்ப்பு (Low Surface Gravity)

OmpSxQv.jpg

விளைவு : 

பூமி மேற்பரப்பில் ஈர்ப்பில் வெறும் 38 சதவிகிதம் மட்டுமே செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஈர்ப்பு ஆகும். இதுபோன்ற குறைவான மேற்பரப்பு ஈர்ப்பின் நீண்ட நேர வெளிப்பாடு மனித உடலில் எந்தவிதமான விளைவுகளைப் ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. 

HLZtSVn.jpg

மார்ஸ் மிஷன் சவால் #08 : 

பாறைகளிலான நிலப்பரப்பு (Rocky Martian Terrain)

hSjT4J6.jpg

கடினம் :

நிலவில் தரையிறங்கும் போதே பிரம்மாண்டமான கற்பாறைகள் பல வகையான சிக்கல்களை உருவாக்கின, செவ்வாய் போன்ற பாறைகளையே நிலப்பரப்பாய் கொண்ட கிரகத்தில் தரை இறங்குவது மிக மிக கடினம் ஆகும்..! 

XykhStG.jpg

மார்ஸ் மிஷன் சவால் #07 : 

பேலோட் பாரிங் விட்டம் (Diameter of Payload Fairing) 

iFmsdlm.jpg

சிக்கல் :

மனிதர்களை கொண்ட செவ்வாய் கிரக லேண்டர் வடிவமைப்பில் தொடர்ச்சியாக ஏற்படும் ஒரு சிக்கல் தான் பேலோட் பாரிங் விட்டம். செவ்வாய் கிரக லேண்டருக்கு அபாரமான 8.4 மீட்டர் ( 27.6 அடி) விட்டம் பரிந்துரைக்கப்படும் அதே வேளையில் அதை சாத்தியப்படுத்துவதில் இன்னும் பல தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன.

2tJesDM.jpg

மார்ஸ் மிஷன் சவால் #06 :

சூப்பர்சோனிக் ரெட்ரோப்ரோபல்ஷன் (Supersonic Retropropulsion) 

BpVd4UG.jpg

சேதம் : 

மார்ஸ் கிரகத்தின் மீது பாதுகாப்பான தரை இறக்கத்திற்கு சூப்பர்சோனிக் ரெட்ரோப்ரோபல்ஷன் சிறந்த வழி என்கிற போதும் அதேசமயம் சூப்பர்சோனிக் வேகமானது செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் போது அதிர்ச்சி அலைகளை உருவாக்கி மாபெரும் சேதத்தை உருவாக்க முடியும்.! 

T3C4sfc.jpg

மார்ஸ் மிஷன் சவால் #05 : 

நிலையான மின்சாரம் (Static Electricity) 

0ygZTDc.jpg

பாதிப்பு :

நாம் ஒரு கதவு பிடியையோ அல்லது ஒரு உலோகப் பொருளையோ தொடும் போது சில சமயம் உடலில் சிறிய மின்சாரம் பாய்ச்சப்படும் அல்லவா..? பூமியில் அது ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் அதுவே செவ்வாய் கிரகத்தில் நடந்தால் விண்வெளி வீரர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்..! 

zKduBWe.jpg

மார்ஸ் மிஷன் சவால் #04 : 

லான்ச் வெயிக்கல் கிடைக்கக்கூடிய தன்மை (Launch Vehicle Availability) 

71F37TJ.jpg

நிதர்சனம் : 

எதிர்கால ராக்கெட் ஆன எஸ்எல்எஸ் (Space Launch System - SLS) தான் செவ்வாய்க்கு மனிதனை அழைத்து செல்ல உதவும் ராக்கெட் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது சாத்தியமாக டஜன் கணக்கில் எஸ்எல்எஸ் (SLS) தேவைப்படும் என்பது தான் நிதர்சனம்..! 

oOsLztc.jpg

மார்ஸ் மிஷன் சவால் #03 :

செவ்வாய் கிரகத்தின் நச்சு தன்மையான மண் (Toxic Martian Soil) 

sIY5fC3.jpg

சிக்கல் : 

2008-ல், நாசாவின் தானியங்கி பீனிக்ஸ் ப்ராப் ஒரு மோசமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியது. அது செவ்வாய் மேற்பரப்பில் பெர்க்ளோரேட் உப்புகள் (perchlorate salts) இருப்பதை கண்டறிந்து சொல்லியது அது விஷத்தன்மை அதிகம் கொண்டது இல்லை என்கிற போதிலும் தைராய்டு சுரப்பி சிக்கல்களை ஏற்படுத்தும். 

EQFUzlq.jpg

மார்ஸ் மிஷன் சவால் #02 :

நீண்ட கால ராக்கெட் எரிபொருள் சேமிப்பு (Long-Term Storage Of Rocket Fuel)

CiC2HAg.jpg

சாத்தியம் : 

செவ்வாய் கிரகத்திற்கு செல்வது மட்டுமே சாதனையாகி விடாது, சென்று திரும்பவும் வேண்டும் அதற்கு ராக்கெட் எரிபொருள் மிக மிக அவசியம் ஆகும். ஆனால் அந்த அளவிற்கான நீண்ட கால ராக்கெட் எரிபொருள் சேமிப்பு திட்டம் இதுவரை சாத்தியமாகவில்லை..! 

7JcsABx.jpg

மார்ஸ் மிஷன் சவால் #01 :

காதல் மற்றும் மனமுறிவுகள் (Romances And Breakups) 

QOwEVTF.jpg

கற்பனை : 

இது நிச்சயம் அறிவியல் தொழில்நுட்ப சிக்கல் இல்லை என்கிற போதிலும், இதுவும் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களை மிகவும் பாதிக்கும் ஒரு விடயம் என்பதில் சந்தேகமே இல்லை. அன்புக்குரியவர்களை ஒரு மணி நேரம் பிரிந்தால் கூட மனதளவில் பாதிக்கப்படும் மனிதன், திரும்புவோமா என்றே தெரியாத பயணத்தில் அன்புக்குரியவர்களை எந்த அளவு தேடுவான் என்பதை கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாது..!

No comments:

Post a Comment