Friday 22 April 2016

வாய்ஸ் கமாண்ட் கொண்ட தானியங்கி சூப்பர் கார் அறிமுகம்.!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லீ ஈகோ தனது முதல் சூப்பர்கார் மகிழுந்துகளை பெய்ஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் ஒருபக்கமும் மறுபுறம் மகிழுந்து என உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது லீ ஈகோ. இந்நிறுவனத்தின் மகிழுந்து வகைகள் வீசீ கார் என அழைக்கப்படுகின்றது. இங்கு லீசீ மேம்பட்ட மகிழுந்தில் (சூப்பர் கார்) வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் அம்சங்களை விரிவாக தெநிந்து கொள்ளுங்கள்..
ஒப்பந்தம் 

லீசீ சூப்பர் கார்களுக்காக லீஈகோ நிறுவனம் ஆஸ்டன் மார்டின் மற்றும் ஃபாரடே பியூச்சர் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

எல்இடி

லீசீ காரின் முன்பக்கம் பெரிய எல்இடி திரை வழங்கப்பட்டுள்ளது. இந்த மகிழுந்து மணிக்கு சுமார் 130 மைல் வேகத்தில் செல்லும். 

தானியங்கி

இந்த மகிழுந்தின் இயங்கும் அம்சங்கள் முழுமையாக தானியங்கி முறையில் வேலை செய்யும். இதனால் வாகன நிறுத்துமிடங்களில் தானாகவே நிறுத்தி கொள்ள முடியும். 

அம்சங்கள் 

செல்ஃப்-பார்க்கிங் என அழைக்கப்படும் இந்த அம்சமானது ஸ்மார்ட்போன் கொண்டு குரல் மூலம் இயக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஃபேஷியல், பாத் மற்ரும் எமோஷன் ரெகக்னீஷன் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இயக்கி 

இந்த சூப்பர் காரின் உந்துவண்டி இயக்காழியை (ஸ்டீயரிங்) மடித்து வைத்தால் மகிழுந்து தானாகவே இயங்கும். அதாவது காரின் செல்ஃப்-டிரைவிங் மோடு ஆன் செய்யப்பட்டு விடும். 

போட்டி 


எலக்ட்ரிக் பேட்டரி கான்செப்ட் கார் டெஸ்லா மோட்டார் வகை கார்களுக்கு போட்டியாக அமையும் என லீஈகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இடையூறு 

இந்த மகிழுந்தில் ஒவ்வொரு பயணியும் மற்ற பயணிக்கு இடையூறு இல்லாமல் இசை, அல்லது வீடியோ போன்றவைகளை ரசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment