இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் இந்தியாவில் புதிய கேன்வாஸ் ஸ்பார்க் 2 ப்ளஸ் என்ற கருவியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.3,999க்கு விற்பனை செய்யப்படும் இந்த கருவியானது பிரத்யேகமாக ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டாலிக் கிரே, காப்பர் கோல்டு மற்றும் ஷேம்பெயின் கோல்டு போன்ற நிறங்களில் இந்த கருவி கிடைக்கின்றது.
இத்தனை குறைந்த விலைக்கு இந்த கருவியில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை பாருங்கள்..
திரை
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 2 கருவியானது 5 இன்ச் FWVGA திரை கொண்டிருக்கின்றது.
பிராசஸர்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம் கொண்ட இந்த கருவியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.
இயக்கம்
கூகுள் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பான மார்ஷ்மல்லோ இயங்குதளம் மூலம் இந்த கருவி இயங்குகின்றது. மேலும் 10 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் திறன் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கேமரா
5 எம்பி ப்ரைமரி கேமராவும், 2 எம்பி முன்பக்க கேமராவும் கொண்ட இந்த கருவியானது 2000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
வெளியீடு
'முதல் முறை ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு ஏதுவாக இருக்கும் படி குறைந்த பட்ஜெட்டில் தரமான கருவியாக புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 2 கருவி இருக்கும்' என அந்நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி சுபஜித் சென் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment