பூமியில் எல்லாமே அழகு தான்..!
உலகம் முழுக்க மக்கள் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் என்பதற்கு இந்த தொகுப்பு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
பூமியில் பல விஷயங்கள் இன்றும் வினோதமாக இருக்கின்றது. அந்த வகையில் உலகின் பல்வேறு வினோதங்களில் வானத்தில் இருந்து அழகாய் தெரியும் சில வினோதங்களை தான் புகைப்படங்களாய் இங்கு தொகுத்திருக்கின்றோம்..
உருவப்படம்
உலகின் மிகப்பெரிய உருவப்படம் இது தான். சுமார் 7.5 சதுர அடியில் டர்க்கியின் முதல் குடியரசு தலைவர் முஸ்தஃபா கெமல் அடடுர்க் அவர்களின் உருவப்படம் அந்நாட்டின் எர்ஸின்கேன் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா
பெட்ரோ மார்டின் என்ற உழவரின் அயராத உழைப்பில் உருவான காடு இது. இந்த காடு வானத்தில் இருந்து பார்த்தால் கிட்டார் போன்றே காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏரி
இந்த இடம் பிரேஸில் நாட்டில் அமைந்திருக்கின்றது. பார்க்க கச்சிதமாக மனித உருவம் போன்று காட்சியளிக்கும் இது ஒரு ஏரி ஆகும்.
குதிரை
ஆல்டன் பார்னெஸ் வெள்ளை குதிரை. 1812 ஆம் ஆண்டின் குதிரை தான் இது. இந்த குதிரை உருவப்படம் வில்ட்ஷையர் மலைப்பகுதியில் அமைந்திருக்கின்றது.
இதயம்
அமெரிக்காவில் இதய வடிவில் காணப்படும் ஏரி.
யுஃபிங்டன் வெள்ளை குதிரை
சுமார் 374 அடி நீளம் கொண்ட இந்த குதிரை படம் வெள்ளை சாக் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. இது ஆக்ஸ்ஃபோர்டுஷையர் பகுதியில் அமைந்துள்ளது.
கைரேகை
உலகின் மிகப்பெரிய கைரேகை இது தான். சுமார் 38 மீட்டர் பரப்பளவிலான இந்த கைரேகை பிரிங்டன் பகுதியில் அமைந்துள்ளது.
வீடியோ
பூமியில் அமைக்கப்பட்டுள்ள வினோதங்களை வீடியோ மூலம் பாருங்கள்.
No comments:
Post a Comment