Wednesday 20 April 2016

சர்வதேச விண்வெளி மையம் அருகே பறந்து வந்த ஏலியன் வாகனம்.!

மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் மற்றும் ஓர் சம்பவம் விண்வெளியில் நடைபெற்றுள்ளது. வழக்கம் போல இம்முறையும் இது குறித்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையம் அருகே அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (யுஎஃப்ஒ) ஒன்று வந்தது எனவும், இந்நிகழ்வானது வழக்கம் போல நேரடி ஒளிபரப்பில் இருந்து மழுங்கடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது. 


முதல் முறை

சர்வதேச விண்வெளி மைத்தில் இதே போன்ற சம்பவம் ஏற்கனவே பல முறை நிகழ்ந்திருப்பதாகவும், இவை அனைத்தும் தொழில்நுட்ப காரணங்களை முன் வைத்து ஒளிபரப்பு மழுங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

காட்சி

இம்முறை சர்வதேச விண்வெளி மையத்தின் அருகே வந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் மறையும் போது மழுங்கிய சாம்பல் நிற வெளிச்சத்தை பிரதிபலித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கேமரா 

சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்பட்டுள்ள மற்றொரு கேமராவில் இந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சற்றே கூடுதல் நேரத்திற்கு பதிவாகியுள்ளது. 

வடிவம் 

எனினும் இந்த யுஎஃப்ஒ'வின் வடிவம் தெளிவாக கண்டறிய முடியவில்லை, என்றாலும் யுஎஃப்ஒ வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நாசா

இச்சம்பவத்தை கண்கானித்து வந்த நாசா, யுஎஃப்ஒ மறுபடியும் வரலாம் என்ற அச்சத்தில் உடனடியாக திரையை 'ஸ்டான்ட் பை' மோடில் வைத்து விட்டது. இதனால் கேமராவின் கோணம் மாற்றப்பட்டதோடு யுஎஃப்ஒ பார்வை மறைக்கப்பட்டு விட்டது. 

நேரலை

இது அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவம் என்றால், யுஎஃப்ஒ வந்ததும், உடனடியாக ஏன் இதன் நேரலை நிறுத்தப்பட வேண்டும். 

யூட்யூப்

ஸ்ட்ரீட்கேப் 1 எனும் பெயரில் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ விரைவில் பல்வேறு யுஎஃப்ஒ வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்தது.

கருத்து

இம்முறை வீடியோவில் பதிவான யுஎஃப்ஒ மிகவும் தரமானதாக இருக்கின்றது என பிரபல யுஎஃப்ஒ ஆய்வாளர் ஸ்காட் சி வாரிங் தெரிவித்துள்ளார். இந்த யுஎஃப்ஒ சரியாக ஏப்ரல் 1ஆம் தேதி கண்டறியப்பட்டுள்ளதால் ஒருவேலை நாசா கூட இதை விளையாட்டாக செய்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பறக்கும் தட்டு

பொதுவாக யுஎஃப்ஒ ஆனது பறக்கும் தட்டு போன்றே இருக்கும் என ஸ்காட் கூறுகின்றார். இந்த வீடியோவினை உற்று நோக்கும் போது யுஎஃப்ஒ'வின் மேல் மற்றும் கீழ் பகுதிகள் மேடானது போன்று காட்சியளிக்கின்றது. இதோடு மேல் பகுதியில் கட்டளை அறை இருப்பதால் அது கீழ் பகுதியை விட முக்கியமானதாகும்.

No comments:

Post a Comment