Friday, 22 April 2016

'சாத்தான் முக்கோணத்தில்' (Bermuda Triangle) இருந்து தானாக திரும்பி வந்த கப்பல்..?!

1925 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி, தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டனில் இருந்து க்யூபாவின் ஹவானாவை நோக்கி பயணிக்க தொடங்கியது - எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல். அதாவது சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாக செல்கிறது எஸ் எஸ் கொடபக்சி..! 

பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ, ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle). ஆக, மர்மமான சாத்தான் முக்கோணத்தின் ஒரு புள்ளியான ஃப்ளோரிடாவை கடந்து தான் எஸ்எஸ் கொடபக்சி ஹவானாவை அடைய முடியும்..! 

WsqYDWL.jpg

காணமல் போனது :

ஆனால், அந்த கப்பல் ஹவானாவை சென்றடையவில்லை. புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்எஸ் கொடபக்சி காணமல் போனது, அதன் பின்பு அந்த கப்பல் பற்றிய தகவலே இல்லை. 

rnqE2QA.jpg

32 மாலுமிகள் :

எஸ்எஸ் கொடபக்சி கப்பல் மட்டுமின்றி, 2340 டன் எடையுள்ள நிலக்கரியுடன் கேப்டன் டபிள்யூ ஜே.மெயர் தலைமையில் பயணித்த 32 மாலுமிகள் பற்றிய எந்த விதமான தகவலும் இல்லை. 

6v3tXCE.jpg

ஒரு கப்பல் :

சமீபத்தில் கியூபா கடலோர காவல்படையினர், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின் வழியாக ஒரு கப்பல் தீவை நோக்கி வருவதை கண்டுள்ளனர்.

SUkgr0s.jpg

90 ஆண்டுகளுக்கு :

அதை தொடர்பு கொள்ள முயற்சி செய்து, பயன் அளிக்காததை தொடர்ந்து, அதன் அருகே சென்று பார்த்த போதுதான் அது 90 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எஸ்எஸ் கொடபக்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளான. 

632XMSC.jpg

அறிவியல் மற்றும் சதியாலோசனை :

அதனை தொடர்ந்து பெர்முடா முக்கோணத்தில் காணமல் போன மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான எஸ்எஸ் கொடபக்சி, ஒரு நாடோடி போல இத்தனை ஆண்டுகளாய் பெர்முடா முக்கோணத்துடன் இணைந்தே கிடந்துள்ளது என்றும் அறிவியல் மற்றும் சதியாலோசனை கோட்பாடுகள் கிளம்பிய வண்ணம் உள்ளன.

ஒருவரும் இல்லை : 

திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்த கப்பல் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

TvulciC.jpg

கேப்டனின் லாக் புக் :

கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் எஸ்எஸ் கொடபக்சி கேப்டனின் லாக் புக் (Log book) எனப்படும் குறிப்பு எழுதும் நோட்டு புத்தகம் கிடைத்துள்ளது. 

ryy5L1L.jpg

என்ன நடந்தது : 

ஆனால், அந்த நோட்டு புத்தகத்தில் கடந்த 90 ஆண்டுகளாய் எஸ்எஸ் கொடபக்சி கப்பலுக்கும், அதில் பயணித்த 33 பேருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு தகவலும் கிடைக்கப் பெறவில்லையாம். 

H9oFJOF.jpg

1925 ஆம் ஆண்டு டிசம்பர் 1 :

கேப்டனின் லாக் புக் உண்மையானது தான் என்றும், சரியாக 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கேப்டன் கப்பல் பயணம் பற்றிய குறிப்பு எழுதுவதை நிறுத்திக் கொண்டுள்ளார் என்றும் க்யூபா நாட்டு வல்லுநர் ஆன ரோடோல்போ சல்வடோர் க்ருஸ் (Rodolfo Salvador Cruz) நம்புகிறார். 

b0ssdsj.jpg

விசாரணை :

க்யூபா நாட்டு அரசாங்கம், எஸ்எஸ் கொடகப்சி கப்பல் காணமல் போனது ஏன்..? மற்றும் திரும்பி கிடைக்கப்பெற்றது எப்படி..? என்பது பற்றிய விசாரணையை தொடங்கியுள்ளது. 

NeySujI.jpg

வணிக ரீதியான பிரச்சனை :

இதுபோன்று கப்பல்கள் காணமல்போகும் நிகழ்வுகளானது வணிக ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க எஸ்எஸ் மீதான ஆய்வு மிகவும் அவசியமான ஒன்று என்று க்யூபா நாட்டு அதிகாரிகள் கருத்து கூறியுள்ளனர்.

kD69LmV.jpg


சாத்தான் முக்கோணம் (Bermuda Triangle)

மேலும் படிக்க : 


No comments:

Post a Comment