Thursday 28 April 2016

ப்ஹோபோஸ் நிலவில் 'மோனோலித்' - எந்த நாகரீகத்தின் தவறிய பாகம்..?!

ப்ஹோபோஸ் (Phobos) - செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் இரண்டு நிலவுகளில் ஒன்று. ப்ஹோபோஸ் தான் செவ்வாய் கிரகத்தின் துணை கோள்களிலேயே மிகவும் பெரியது என்பதும் குறிபிடத்தக்கது. ஒழுங்கற்ற வடிவில் 11 கி.மீ அளவிலான சராசரி ஆரம் கொண்ட ப்ஹோபோஸ், 1877 ஆம் ஆண்டு அமெரிக்க வானவியலாளர் அசாப் ஹால் என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டு இன்று வரையிலாக தொடர்ச்சியான ஆய்விற்கு உட்படுத்தப் பட்டுக் கொண்டே இருக்கிறது. 

அப்படியாக, செவ்வாய் கிரகத்தை ஆராயும் நோக்கத்தில் விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட செவ்வாய் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter - MRO) விண்கலம் ஆனது ப்ஹோபோஸ் நிலவை மேப்பிங் செய்ய புகைப்படங்களை எடுத்து அனுப்பியதில் சிக்கியது ஒரு விசித்திரம்..! 

hIwgHj8.jpg

மர்மமான அமைப்பு : 

புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பட்ட உருளை கிழங்கு வடிவத்தில் இருக்கும் ப்ஹோபோஸ் நிலவில் மேற்பரப்பில் தெளிவாக ஒரு மர்மமான அமைப்பு பதிவாகியுள்ளது. 

YCQIXIg.jpg

செவ்வக பொருள் : 

அது ஒரு பெரிய செவ்வக பொருள், சந்தேகத்திற்கு இடமின்றி செயற்கையான உருவமாக தெரியும் அது தெளிவாக தெரிகிறது..! 

oi65PZh.jpg

அருகாமை பகுதி : 

அதன் அளவு மற்றும் உருவத்தை ஒற்ற எந்த பொருளும் அதன் அருகாமை பகுதிகளில் இல்லை, தனித்து நிற்கிறது. அதனால் இது என்ன.? இதெப்படி இங்கே வந்தது..? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

ayeTN0G.jpg

பஸ் ஆல்ட்ரின் : 

இது சார்ந்த புரளிகளும், கோட்பாடுகளும் ஏகபோகமாக கிளம்ப, பூமி கிரக நிலவில் இரண்டாவதாக காலடி எடுத்து வைத்த பஸ் ஆல்ட்ரின் அவர்கள் இது சார்ந்த தனது கருத்தை முன்வைத்தார். 

2NfeZrc.jpg

பிரபஞ்சம் :

"9 மணி நேரத்திற்கு ஒருமுறை செவ்வாய் கிரகத்தை சுற்றி முடிக்கும் ப்ஹோபோஸ் நிலவானது மிகவும் விசித்திரமானதாகும், அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள விசித்திரமான உருவத்தை யார் அங்கே போட்டார்கள் என்று கேள்வி எழும்புவது நகைப்பாக உள்ளது. நிச்சயமாக அதை அங்கே போட்டது - பிரபஞ்சம் தான்..!" 

P59b65x.jpg

எக்ஸ்ட்ராடெரஸ்ட்ரியல் ராக் : 

வானியலாளர்கள் மற்றும் வல்லுனர்களின் கருத்துப்படி ப்ஹோபோஸ் நிலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மர்ம உருவம் ஆனது மேலுமொரு 'எக்ஸ்ட்ராடெரஸ்ட்ரியல் ராக்' (Extraterrestrial rock). 

Tv2Iw1i.jpg

முரண்பாடுகள் : 

நாசாவின் செவ்வாய் மற்றும் மற்ற சூரிய மண்டலத்தில் முரண்பாடுகள் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடும் விஞ்ஞானி லன் பிளெம்மிங் ப்ஹோபோஸ் நிலவு புகைப்படங்களை ஆய்வு செய்து அந்த மர்ம உருவத்தை ஒரு முரண்பாடான அமைப்பு கொண்ட 'மோனோலித்' (monolith) என்று கூறியுள்ளார். 

SodKIoR.jpg

மோனோலித் : 

ஒரே பாறையில் அல்லது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உருவத்தை தான் மோனோலித் என்று அழைப்பார்கள். 

wxuxEPp.jpg

வாதம் : 

செவ்வாய் கிரகத்தின் நிலவில் கிடைக்கப் பெற்றுள்ள இந்த மோனோலித் உருவம் ஆனது விஞ்ஞானிகள் வானவியலாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வாதங்களை கிளப்பி உள்ளது. 

cHgxFoQ.jpg

செயற்கை : 

1966-ல் செவ்வாய் கிரகத்தின் ப்ஹோபோஸ் ஆனது, பூமி கிரக நிலவை போன்றே செயற்கையாக உருவாக்கப்பட்ட செயற்கைகோள் என்ற வாதம் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது. 


ylNOzNz.jpg

வரிதடங்கள் : 

ப்ஹோபோஸ் நிலவில் காணப்படும் விவரிக்க இயலாத வரிதடங்கள் (Grooves) ஆரம்ப காலத்தில் இருந்தே அதன் மீதான சந்தேகங்களையும் அதன் தொடர்ச்சியாக ஆர்வத்தையும் அதிகரித்து கொண்டே போகிறது. 

2Az3HJS.jpg

தவறிய பாகம் : 

சில கோட்பாடுகள் ப்ஹோபோஸ் மோனோலித் ஆனது கைவிடப்பட ஏலியன் வாகனத்தில் இருந்து தவறிய பாகம் என்றும் ஈர்ப்பு விசையால் ப்ஹோபோஸ்தனில் கிடத்தப்பட்டுள்ளது என்றும் விவரிக்கிறது. 

No comments:

Post a Comment