Monday 25 April 2016

Cinema Latest News


விஜய், அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்
                                    கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ் :
                                         
ஜி.வி.பிரகாஷ் கடந்து சில நாட்களாக பல கருத்துக்களை வெளிப்படையாக பேசி வருகிறார். இதில் முக்கியமாக சமீபத்தில் நடந்த போலி கருத்துக்கணிப்பை வெட்ட வெளிச்சம் ஆக்கினார்.
இவர் அடுத்து நடிக்கும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் டீசர் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்த டீசரில் தலதளபதி குறித்து ஒரு காட்சி இடம்பெறுகிறதாம், இதனாலாயே இந்த டீசருக்கு கண்டிப்பாக வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த டீசரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுவது கூடுதல் ஸ்பெஷல்.

 
                         விஜய் ஆண்டனியின் அதிரடி முடிவு- ரசிகர்கள்                      
                                              ஏற்றுக்கொள்வார்களா? :                                                     

               பிச்சைக்காரன் படம் விஜய் ஆண்டனியை வேறு லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. இப்படம் வசூலை வாரி குவித்தது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் இவர் அடுத்து நான் படத்தின் இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் எமன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக களம் இறங்கிவிட்டாராம், இதையும் ரசிகர்கள் விரும்புவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


                                                       அஜித்துடன் இணையும் சூப்பர் ஸ்டார்
                                                         

                       சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் வளர்ந்து வரும் நடிகர்கள் பலருக்கும் ரோல் மாடல். விஜய்அஜித் இருவருமே இவருடைய இடத்திற்கு தான் போட்டிபோட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி அவரின் புதுப்பட அறிவிப்பு வரவிருக்கின்றதாம். அன்றைய தினம் தல ரசிகர்களுக்கு மட்டுமில்லை சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் விருந்து தான்.
                  நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த கபாலி டீசர் அன்றைய தினம் வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.



               அஜித் தயாரிப்பாளரின் அடுத்தடுத்த பிரமாண்ட தயாரிப்பு படங்கள்
                                                          
                  அஜித் தனக்கு ஒரு தயாரிப்பாளர் செட் ஆகிவிட்டால் தொடர்ந்து அவர் தயாரிப்பிலேயே நடிப்பார். சமீபத்தில் ஏ.எம்.ரத்னத்துடன் என்னை அறிந்தால், வேதாளம் என தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
                  தற்போது ரத்னம் அடுத்து விக்னேஷ் சிவன்-விஜய் சேதுபதி, ஜெயம் ரவி நடிக்கும் படம், விஷால்படம் என தயாரிக்கவிருக்கின்றார்.
இதுமட்டுமின்றி தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தையும் தயாரிக்கவிருக்கின்றாராம். ரத்னம் சில வருடங்களுக்கு முன் பண கஷ்டத்தால் படமே தயாரிக்காமல் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



                             சென்னையில் 11 நாள் தெறி பிரமாண்ட வசூல்- முழு விவரம்
                                                           
               தெறி படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகின்றது. முதல் நாளே இப்படம் ரூ 1 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.                                                                                        
               ந்நிலையில் இப்படம் வெளிவந்து 11 நாட்கள் ஆகிய நிலையில் தற்போது ரூ 6.49 கோடி என வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
               டந்த வாரம் வெளிவந்த வெற்றிவேல் ரூ 21 லட்சம் வசூல் செய்ய, 3 வார முடிவில் ஜங்கிள் புக் 2.09 கோடி வசூல் செய்துள்ளது.                         

No comments:

Post a Comment