எல்ஜி கே7 மற்றும் கே10 என இரு ஸ்மார்ட்போன் கருவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு கருவிகளும் இந்தியாவில் ரூ.15,000 பட்ஜெட்டில் அதாவது ரூ.9,500 மற்றும் ரூ.13,500க்கு முறையே விற்பனை செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இந்த இரு கருவிகளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே7 கருவியில் 5 இன்ச் திரை, ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் 1.5 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி மற்றும் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 8 ஜிபி இன்டர்னல் மெமரி, ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம் மூலம் இயங்கும் இந்த கருவியில் 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் 2125 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.
சற்றே விலை அதிகமான கே10 கருவியில் 5.3 இன்ச் எச்டி திரை, ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 16ஜிபி இன்டர்னல் மெமரி, 2300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இரு கருவிகளிலும் 2.5டி கிளாஸ் மற்றும் கருவியின் பின்புறம் கீறில் விழாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. போன் லாக் செய்யப்பட்டிருக்கும் போது வால்யூம் டவுன் பட்டன் மூலம் கேமராவை இயக்க முடியும்.
No comments:
Post a Comment