Friday, 22 April 2016

Torrent என்றால் என்ன?


Torrent என்றால் என்ன?

unnamed.png



Torrent என்பது peer to peer sharing முறையில் செயல்படும் ஒரு பிரபலமான தொழில் நுட்பம் ஆகும்.



Peer என்றால் என்ன?



Peer என்றால் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாம் தான்..

peerல் இரண்டு நிலை உண்டு 



1.Seeders


2.Leechers



Seeders என்பது யார்?

Seeders என்பவர்கள் .torrent file ஐ உருவாக்கி அதனை Seeding செய்துகொண்டு இருப்பவர்கள்.



Seeding என்றால் என்ன?



'Seeding' என்றால் விதைப்பது என்று பொருள்..



Torrent இல் seeding என்ன வென்றால் நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொண்டே இருப்பது என்றாகும்...அதற்க்கு நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை... நீங்கள் பயன்படுத்தும் Torrent client(utorrent or bittorrent or transmission) மூலமாக உருவாக்கிய .torrent file ஐ நீங்கள் உருவாக்கிய thread இல் attach செய்து thread ஐ post செய்து பன் அதில் இருந்து attachment ஐ download செய்து அந்த .torrent file ஐ click செய்தால் போதும் seeding தொடங்கிவிடும்..

seeding செய்தால் தான் Leechers ஆல் download செய்ய இயலும்..

நீங்கள் thread உருவாக்கிய 3 மணி நேரத்திர்க்குள் seeding செய்யவில்லையேல் உங்கள் thread நீக்கப்படும்...



சரி Leechers என்பது யார்?





Leechers என்பவர்கள் நீங்கள் post செய்த torrent ஐ download செய்பவர்கள்...

Leechers download செய்து முடித்தபின் கண்டிப்பாக Seeding செய்தாக

வேண்டும் இல்லையேல் தங்களின் Ratio பாதிக்கப்படும்...அதற்க்கு நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை...downloading முடிந்தபின் அந்த torrent ஐ stop அல்லது pause அல்லது delete செய்தல் கூடாது.. ஒன்றும் செய்யாமல் விட்டாலே போதும்..மேலும் முக்கியமாக உங்கள் torrent client ஐ (utorrent or bit torrent or transmission etc..) close செய்யாமல் இருந்தாக வேண்டும்...அதே போல் download செய்த file ஐ இடம் மாற்ற கூடாது மாற்றினால் seeding நின்றுவிடும்..இந்த நிலைக்கு நீங்கள் வந்ததும் நீங்களும் ஒரு seeder ஆகிவிடுவீர்கள்...

No comments:

Post a Comment