Saturday, 30 April 2016

தமிழுக்கு கவுண்டமணி-செந்தில்னா! உலகத்துக்கே நம்ம டாம் அண்ட் ஜெர்ரி தான்.....

தமிழுக்கு கவுண்டமணி-செந்தில்னா! உலகத்துக்கே நம்ம டாம் அண்ட் ஜெர்ரி தான்.....

Tom_and_Jerry_Free_PNG_Clip_Art_Image.pn

எப்போது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களை ‘எலியும் பூனையும் போல’ என்று சொல்வார்கள். இந்த எலி - பூனை சண்டையை உலகம் ரசிக்க வைக்கும் வகையில் மாற்றினால் என்ன என்று தோன்றியதன் விளைவுதான் ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கார்ட்டூன் தொடர்.

குழந்தைகளுக்குக் கார்ட்டூன் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பெயர் ‘டாம் & ஜெர்ரி’தான். பெரியவர்களும் இதை ரசித்துப் பார்க்கிறார்கள். டாம் என்ற பூனை, ஜெர்ரி என்ற எலியைப் பிடிக்க முயல்வதுதான் எல்லாக் கதைகளின் உள்ளடக்கம்.

இந்த ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு 75 ஆண்டுகள் தொடர்ந்து ரசிகர்களைத் தக்கவைக்க முடியும் என்பதை இந்தத் தொடர் நிரூபித்து உள்ளது.

உருவான கதை:

tom-and-jerry-cat-mouse-cartoon-wallpape



வால்ட் டிஸ்னியின் ‘சில்லி சிம்பொனிஸ்’ தொடரே ஒவ்வொரு வருடமும் கார்ட்டூன் படங்களுக்கான ஆஸ்கர் விருதை வென்று வந்தது. எம்.ஜி.எம். நிறுவனமும் போட்டியாக பல கார்ட்டூன் படங்களை எடுத்தது. இதனால் ஏற்பட்ட தொடர்ச்சியான பொருளாதார நஷ்டத்தைச் சரிகட்ட, கதாசிரியர் ஹன்னா மற்றும் இயக்குநர் பார்பரா ஆகியோரைக்கொண்டு எதேச்சையாக அமைந்த கூட்டணிதான் டாம் & ஜெர்ரியின் உருவாக்கத்துக்குக் காரணம்.

200.gif

ஹன்னா எழுதிய பூனைக்கும் எலிக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை இயக்குநர் பார்பராவும், அவரது குழுவினரும் ஆரம்பத்தில் ரசிக்கவில்லை. ‘புதுமை இல்லை’ என்ற எண்ணத்துடன் தயாரிக்கப்பட்ட ‘ பஸ் கெட்ஸ் தி பூட்’ என்ற திரைப்படம் ஆர்ப்பாட்டம் இன்றி வெளியானது.

ஆனால், தியேட்டர்களில் சிறப்பான வரவேற்பு பெற்றது இத்திரைப்படம். ஆஸ்கர் விருது கமிட்டியின் கவனத்தையும் கவர்ந்தது. முதல்முறையாக வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் எதுவுமே விருதுக்குப் பரிந்துரைக்கப்படாமல், எம்.ஜி.எம். நிறுவனத்தின் படங்கள் முதலிரண்டு இடங்களைப் பிடித்தன.

banner_1636.jpg

நூலிழையில் ஆஸ்கர் விருதைத் தவறவிட்டது பூனை-எலி போராட்டக் கதை. உடனடியாக மற்ற படங்களை இயக்குவதை நிறுத்தச் சொல்லிவிட்டு, ஹன்னா & பார்பராவைத் தொடர்ந்து இதே தொடரை மையமாக வைத்து படமெடுக்க எம்.ஜி.எம். நிறுவனத்தின் ஃபிரெட் க்விம்பி உத்தரவிட்டார்.


டாம் & ஜெர்ரியின் கதை:

Be-Friends-with-us-tom-and-jerry-3480007


எலியைப் பிடிக்க எடுத்த முயற்சியில் தவறுதலாக அலங்காரப் பூத்தொட்டியை உடைத்து விடுகிறது ஜாஸ்பர் என்ற பூனை. “இனிமேல் வீட்டுப் பொருட்கள் ஏதாவது உடைந்தால், உன்னை வீட்டைவிட்டே அனுப்பி விடுவேன்” என்று வீட்டுக்கார அம்மா பூனைக்கு விடுத்த மிரட்டலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்கிறது அந்த எலி.

giphy.gif

வீட்டில் இருக்கும் எளிதில் உடையக்கூடிய பொருட்களை எடுத்துப் பூனையை நோக்கி வீச, அவற்றை உடையாமல், கவனமாகப் பிடித்து மறுபடியும் அவை இருந்த இடத்திலேயே வைக்கிறது பூனை. இப்படித்தான் ஆரம்பித்தது டாம் & ஜெர்ரியின் கதை.

200.gif

கதாசிரியரால் ஜிங்ஸ் என்று அழைக்கப்பட்ட எலிக்கு, முதல் கதையில் பெயர் எதுவுமே வைக்கவில்லை. படம் வெற்றி பெற்ற உடன், தயாரிப்பாளர் கேட்டு கொண்டதற்கு இணங்க, பெயரை மாற்ற அனைவரும் ஏகமனதாக முடிவெடுத்தனர். சிறந்த பெயரை பரிந்துரைப்பவர்களுக்கு ஐம்பது டாலர் பரிசும் அறிவிக்கப்பட்டது. பலரும் துண்டுச் சீட்டில் எழுதித் தர, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்தான் டாம் & ஜெர்ரி.


டாம்:
200.gif

அமெரிக்காவில் பூனைகளுக்கு அதிகமாக வைக்கப்படும் பெயரான தாமஸ் என்பதன் சுருக்கமே டாம். ஒவ்வொரு முறையும் ஜெர்ரியிடம் தோற்றுவிடும் டாம், ஆரம்பத்தில் நான்கு கால்களில் நடந்து, பூனைக்கான அறிவுடன் செயல்பட்டது. பின்னர் இரண்டு கால்களில் நடப்பது, மனிதனைப் போல சிந்திப்பது எல்லாம் இத்தொடரின் பரிணாம வளர்ச்சி. சில குறிப்பிட்ட தொடர்களைத் தவிர, வலியால் கத்துவது மட்டுமே இதன் வசனமாக இருந்து வந்துள்ளது.


ஜெர்ரி:

giphy.gif

தொடரின் ஆரம்பம் முதல் முக்கியக் கதாபாத்திரம் ஜெர்ரிக்கு. இது ஒரு அதிபுத்திசாலி எலி. ஒவ்வொரு முறையும் டாம் விரிக்கும் வலையில் சிக்காமல் தப்பிக்கும். டாமை சிக்கலில் விழவைப்பது இதற்குக் கை வந்த கலை.


தொடரின் வளர்ச்சி:

200.gif

தொடரின் வெற்றியில் இசையமைப்பாளர் ஸ்காட் பிராட்லிக்குப் பெரிய பங்கு உள்ளது. ஆரம்பத்தில் தொடரின் அனிமேஷன் வேகம் மிதவேகமாக இருந்தது. பின்னர் அதிக வேகத்துடன் வெளியாக ஆரம்பித்தது. திரைப்படங்களுக்கான வரவேற்பு குறைந்தவுடன் இத்தொடர் தொலைக்காட்சிக்கு மாறியது.

200.gif

அதிக வன்முறைக் காட்சிகளைக் கொண்ட இத்தொடர், தணிக்கை முறை காரணமாக முற்றிலும் மாற்றப்பட்டது. எழுபதுகளில் உருவான புதிய தொடரில் டாமும் ஜெர்ரியும் நண்பர்கள். அவர்கள் இணைந்து செய்யும் சாகசங்களையும் கொண்டே கதைகள் உருவாக்கப்பட்டன.


துணைக் கதாபாத்திரங்கள்

நிப்பிள்ஸ் / டஃப்பி:
The-Tom-and-Jerry-Show-Episode-14-Tuffy-

ஜெர்ரியின் உறவுக்காரப் பொடியனான இந்த எலி, சூதுவாது தெரியாத ஒரு அப்பிராணி. வெண்ணெயைக் காவல் காக்கும் பூனை டாமியிடமே “எக்ஸ்கியூஸ்மி, அந்த வெண்ணெய்க்கட்டியைக் கொஞ்சம் எடுத்துத் தர்றீங்களா?” என்று கேட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளும்.


ஸ்பைக்:
200.gif


கொஞ்சம் மந்த புத்தி கொண்ட புல்டாக் வகை நாய் இது. ஜெர்ரியின் உற்ற தோழன். பலமுறை டாமை கண்டிக்கும் ஸ்பைக், ஜெர்ரிக்கு பாதுகாவலனாகவும் செயல்படுவது உண்டு.

புட்ச்:


tom_and_butch___by_mtb_by_erinbaka1090-d

தெருவில் வசிக்கும் பூனைக் கூட்டத்தின் தலைவன். ஜெர்ரியைப் பிடிக்க டாமுக்கு உதவும். கறுப்பு நிறப் பூனையான இதற்கு தனிக் கதையும் உண்டு.

ஏன் வெற்றி?:

giphy.gif

உலகம் முழுவதும் பல நாடுகளில் கார்ட்டூன் தொடராகப் பிரபலமானது டாம் & ஜெர்ரி. மொழி பிரச்சினை இதில் இல்லை. வழக்கமாகப் பூனை, எலி போராட்டத்தில் பூனையே ஜெயிக்கும். அப்படி நடப்பது இயற்கையே. ஆனாலும், வலியவரை எளியவர் வெற்றிகொள்வதே மக்களுக்குப் பிடிக்கும். அதனாலேயே இத்தொடர் இமாலய வெற்றி பெற்று வருகிறது.

உருவாக்கியவர்கள்:

வில்லியம் ஹன்னா (கதாசிரியர்) & ஜோசப் பார்பரா (இயக்குநர்)
முதலில் தோன்றிய தேதி: ஃபிப்ரவரி 10, 1940
பெயர்: டாம் & ஜெர்ரி
வேறு பெயர்கள்: முதலில் வைக்கப்பட்ட பெயர் ஜாஸ்பர் & ஜிங்க்ஸ்

மற்ற கதாபாத்திரங்கள்:

ஸ்பைக் என்ற புல்டாக் வகை நாய் (பின்னர் ஸ்பைக்கின் வாரிசு டைக்), புட்ச் என்ற தெருவில் வசிக்கும் கறுப்புப் பூனை, ஜெர்ரியின் உறவான நிப்பிள்ஸ் என்ற குட்டி எலி, டூடுல்ஸ் என்ற வெள்ளைப் பூனை, முகம் காட்டாத வீட்டுக்கார அம்மா போன்ற கதாபாத்திரங்கள் இத்தொடரில் வந்தன.

No comments:

Post a Comment