நாஸ்கா கோடுகள் (Nazca Lines) என்பது தெற்கு அமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டிலுள்ள, நாஸ்கா பாலைவன நிலத்தில் செதுக்கப்பட்டுள்ள வடிவியல் உருவங்கள் (geometric shapes) ஆகும். மனிதன், மிருகம், தாவரம் என பல வகையிலான உருவங்களில் சுமார் 900 வடிவியல் உருவங்கள் அப்பாலைவன நிலப்பகுதியில் காணப்படுகிறது..!
பல வகையான குழப்பமான கேள்விகளுக்கு பின்பு, 500 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் செதுக்கப்பட்டுள்ள இந்த கோடுகள் நாஸ்கா நாகரீகத்தின் கலைசார்ந்த விடயம் மட்டுமில்லை என்ற சந்தேகம் கிளம்பியது.
தழைத்தோங்கி :
கடும் பாலைவன பகுதியான நாஸ்காவானது, 200 கிமு - கிபி 600 ஆகிய காலகட்டத்தின் இடையே தழைத்தோங்கி இருந்துள்ளது.
உள்கட்டமைப்புகள் :
அதுமட்டுமின்றி, பல உள்கட்டமைப்புகள், புக்யூஸ் (Puquios) எனபப்டும் கல் வரிசையிலான குழிகள், இப்பகுதி முழுக்க காணப்படுகின்றன.
கருத்துப்படிவம் :
செழிப்பான காலகட்டத்தை கொண்ட பாலைவனம் மற்றும் நிலத்தடி கட்டமைப்புகள் - இந்த இரண்டு விடயமும் தான் நாஸ்கா கோடுகள் ஒரு தொடர்ச்சியான, நீண்ட நிலத்தடி கால்வாய்களாக இருக்கலாம் என்ற கருத்துப்படிவத்தை ஏற்படுத்தியது.
மர்மம் பற்றிய சில தெளிவு :
தற்போது நாஸ்கா கோடுகள் மர்மம் பற்றிய சில தெளிவுகளை பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக, அட்க்ஹு சார்ந்த ஆய்வில் ஈடுப்பட்டுள்ள ரோசா லசபோனாரா (Rosa Lasaponara)மற்றும் இத்தாலி நாட்டின் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு செயல்முறை (Institute of Methodologies for Environmental Analysis) எனும் நிறுவனத்தின் குழு நம்புகிறது.
எப்படி :
அதாவது செயற்கைக்கோள் புகைப்படங்களை பயன்படுத்தி, கல்வரிசையிலான குழிகள் எப்படி நாஸ்கா பிராந்தியம் முழுக்க பிரித்து வழங்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து கொள்ள முடியுமாம்.
கால்வாய் அமைப்புகள் :
நாஸ்கா பிராந்தியத்தில் கிடைக்கபெற்ற நீர் ஆதாரங்கள் மற்றும் தங்கள் குடியிருப்புகள் அமைந்திருக்கும் இடம் போன்றவைகளை மையமாக கொண்டு நாஸ்கா கோடுகள் மூலம் நிலத்தடி கால்வாய் அமைப்புகள் அசாதாரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோர்க்ஸ்க்ரூ வடிவ சுரங்கங்கள் :
முக்கியமாக, நாஸ்கா பிராந்தியங்களில் உள்ள கோர்க்ஸ்க்ரூ வடிவ சுரங்கங்கள் (corkscrew-shaped tunnels) ஆனது நீர் ஆதாரத்தை வறண்ட பகுதியை நோக்கி செல்ல கட்டாயப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சிய நீரியல் திட்டம் :
ஆண்டுதோறும் தண்ணீர் கிடைக்கும் வகையிலாக உருவாக்கம் பெற்ற இந்த நிலத்தடி கால்வாய்கள் நாஸ்கா நாகரீகத்தின் லட்சிய நீரியல் திட்டமாக இருந்துள்ளது.
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் :
ஆண்டுதோறும் கிடைக்கபெறும் நீர் வசதியானது நாஸ்கா நாகரீகத்தின் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் தேவைகளுக்கு மட்டுமின்றி வீட்டு உபயோகங்களையும் பூர்த்தி செய்துள்ளது.
நவீனத்துவம் :
உலகின் மிக வறண்ட இடங்களில் ஒன்றான நாஸ்காவில் வருடம் முழுக்க வற்றாத ஒரு நீர் வழங்கல் அமைப்பின் மூலம் நாஸ்கா நாகரீகத்தின் நவீனத்துவத்தை அறிந்துகொள்ள முடிகிறது என்கிறார் ஆய்வாளர் ரோசா லசபோனாரா.
முன்னோடித்தனமான தொழில்நுட்பம் :
அதுமட்டுமின்றி, நிலத்தடி கால்வாய்கள் மிகவும் முன்னோடித்தனமான தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், தெளிவான முறையில் நீர் இருப்பை கண்டறியப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
வரைபடம் :
மேலும் சமீபத்திய கோட்பாடு ஒன்று நாஸ்கா கோடுகள் ஆனது, அதன் அடியில் இருக்கும் கால்வாய்களை துல்லியமாக சுட்டிக்காட்டும் ஒரு வரைபடம் என்று விளக்கம் அளிக்கிறது.
அசாத்தியமான விடயம் :
பல தசாப்தங்களாக (10 ஆண்டுகள்) உலக நாட்டு ஆய்வாளர்களால் உற்று நோக்கப்பட்டு கொண்டிருக்கும் நாஸ்கா கோடுகள் மேலும் பல அசாத்தியமான விடயங்களை தன்னுள் மறைத்து வைத்திருக்கலாம்.
No comments:
Post a Comment