ரசிகர்களை மிரட்டும் ஹார்ட்கோர் ஹென்றி
சென்ற வாரம் யுஎஸ்ஸில் வெளியான, ஹார்ட்கோர் ஹென்றி திரைப்படத்தைப் பற்றிதான் உலகம் பேசிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் நாயகனின் பார்வையில் சொல்லப்படுகிறது
இதில் என்ன அதிசயம் என்று எண்ணத் தோன்றும். படம் முழுக்கவே நாயகனின் பார்வையில் கேமரா வழியாக நாம்தான் சம்பவங்களில் இடம்பெறுகிறோம்.
ஹென்றி என்பவனை சுட்டுவிட்டு, அவனது மனைவியை கடத்திச் சென்றுவிடுகிறார்கள். மனைவியை காப்பாற்ற ஹென்றி நடத்தும் அசகாயசூர விளையாட்டுகள்தான் படம்.
இதில் காட்சிகள் அனைத்தும் ஹென்றியின் பார்வையில் - அதாவது ஹென்றியின் பார்வைதான் கேமராவே.
அதனால் ஹென்றியின் முகத்தை நம்மால் பார்க்க முடியாது. அவனது இடத்தில் இருந்து கொண்டு, அவன் தாவுவது, குதிப்பது, அடிப்பது என்று அனைத்தையும் பார்வையாளர்களாகிய நாமே செய்வது போன்ற ஒரு ஹைடெக் ரோலர் ஹோஸ்டர் ரைட்தான் இந்தப் படம்.
உலக சினிமா சரித்திரத்தில் இப்படியொரு முழுநீளப்படம் இதுவரை எடுக்கப்பட்டதில்லை. இணையத்தில் இப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கலாம். மேக்கிங் வீடியோவும் பார்க்கக் கிடைக்கிறது. படத்தைவிட மேக்கிங் இன்னும் படுசுவாரஸியம்.
No comments:
Post a Comment