Wednesday 27 April 2016

பிபிசி உட்பட சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள இணையதளங்கள்.!

உலகின் தலைசிறந்த சூப்பர் பவர் நாடுகளில் ஒன்றான சீனா, உலக பொருளாதார மற்றும் தொழில்துறை சந்தையிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றது. இது ஒரு பக்கம் இருந்தாலும், உலகின் தலைசிறந்த பிரான்டுகளின் போலிகளுக்கும் சீனா பிரபலமானது எனலாம். இங்கு போலியான ஆப்பிள் ஸ்டோர் இருப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். 

போலிகளை போன்றே சீனா தடைகளுக்கு பெயர் பெற்றதாகும். சீனா இணைய உலகில் இன்று பெரும்பாலானோரும் பயன்படுத்தி வரும் பல்வேறு பிரபல இணைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. 

GNGeY8S.jpg

கூகுள்

உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் சேவையை சீனாவில் பயன்படுத்த முடியாது. 

jX1rI0C.jpg

ஃபேஸ்புக்

இன்று ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது எனலாம். ஆனால் சீனாவில் இந்த சேவையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Q49r7Ve.jpg

ட்விட்டர்

மற்றொரு பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் சேவையையும் சீன அரசு தடை செய்துள்ளது. 

kNWChFG.jpg

யாஹூ

2012 ஆம் ஆண்டு முதல் யாஹூ சேவைக்கு சீனா தடை விதித்துள்ளது. மெயின்லாந்து குறித்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0AuafXR.jpg

தி பைரேட் பே

சட்ட விரோதமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்ய வழி செய்யும் உலக பிரபல இணையம் தான் தி பைரேட் பே. காப்புரிமை பெற்ற தரவுகளை சட்டவிரோதமாக வழங்குவதால் இந்த சேவைக்கு சீனா தடை விதித்துள்ளது. 



சவுன்டு க்ளவுடு

ஆன்லைனில் இசையை கேட்டு மகிழ உலகம் அறிந்த ஒரு சேவை தான் சவுன்டு க்ளவுடு. இசை ப்ரியர்கள் தங்களது இசையை இந்த சேவையில் பதிவேற்றம் செய்து உலகளவில் தங்களது இசையினை உலக பிரபலமாக்கி கொள்வர். ஆனால் இந்த சேவை சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. 

fxhOwna.jpg

பிபிசி

உலகின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிபிசி சேவையானது சீனாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். சர்ச்சைக்குரியவற்றை ஒளிபரப்புவதால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

XWveBNo.jpg

டக்டக்கோ

இது அதிகம் அறிமுகமில்லாத தேடுபொறி என்றாலும், இந்த சேவையானது டார் பிரவுஸர் மூலம் வழங்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது. டார் பிரவுஸர் உலகின் அதிக பாதுகாப்பான பிரவுஸர் ஆகும். வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களை என்க்ரிப்ட் செய்வதால் இந்த சேவையை சீனா தடை செய்துள்ளது. 

uhBNmHG.jpg

டெய்லிமோஷன்

யூட்யூப் சேவையின் குறைந்த தரம் கொண்ட சேவை தான் டெய்லிமோஷன். இந்த சேவையானது வாடிக்கையாளர்களை எவ்வித தரவுகளையும் ஆன்லைனில் பதிவேற்ற வழி செய்கின்றது. இதன் காரணமாக இந்த சேவைக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. 



ஃப்ளிக்கர்

புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் பிரபல சேவையான ஃப்ளிக்கர் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. யூட்யூப் மற்றும் டெய்லிமோஷன் தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த சேவை அங்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment