சிரஸ் (Ceres) - 1801-ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, முதன்முதல் கண்டுபிடிக்கப்படும் போது சூரிய குடும்பத்தின் எட்டாவது கிரகம் என்றே நம்பப்பட்டது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் கழித்து, 1850-களில் தான் சிரஸ் ஆனது கிரகம் அல்ல ஒரு சிறுகோள் ( asteroid) என்று கண்டறியப்பட்டது.
செவ்வாய் மற்றும் வியாழன் கோளப்பாதைகளுக்கு இடையே உள்ள மிகப்பெரிய விண்வெளி பொருள் சிரஸ் தான். பாறை உள்மையப்பகுதி மற்றும் பனிக்கட்டி மேல், அமைப்பால் உருவாக்கம் பெற்றுள்ள இந்த சிறுகோள் தான் சூரிய குடும்பத்திலேயே மூன்றாவது பெரிய விண்வெளி பொருளாகும். சுமார் 945 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த சிரஸ் சிறுகோள் ஆனது தன்னுள் பல சுவாரஸ்யமான மர்மங்களை உள்ளடக்கியுள்ளது.
மர்மான பிரகாசமான புள்ளிகள் :
சிரஸ் சிறுகோளின் மேற்பரப்பானது மிகவும் புதிரான ஒன்றாகும், அதில் நூற்றுக்கணக்கான மர்மான பிரகாசமான புள்ளிகள் இருக்கின்றன.
விளக்கம் :
உப்பு சேமிப்பாக இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த பிரகாசமான புள்ளிகள் பற்றிய தெளிவான விளக்கம் இன்றுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்பாடுகள் :
அதுமட்டுமின்றி சிரஸ் மேற்பரப்பில் தெரியும் மர்ம புள்ளிகள் எரிமலைகளாக அல்லது வெந்நீரூற்றாக, இருக்கலாம் என்ற கோட்பாடுகள் உண்டு.
மேலும் ஒரு சிரஸ் மர்மம் :
சுமார் 6 மைல் அளவில் மிகப்பெரிய மர்மனான பிரகாசப்புள்ளி சிரஸ் சிறுகோளில் கண்டுப்பிடிகப்பட்டும் கூட அது ஏன் மிளிர்கிறது, எதனால் மிளிர்கிறது என்பது இன்றுவரை வானவிலயலாளர்களை குழப்பிக்கொண்டிருக்க, மேலும் ஒரு சிரஸ் மர்மம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வழக்கமில்லாத உருவம் :
சமீபத்தில், சிரஸ் சிறுகோளின் மேற்பரப்பில் வழக்கமில்லாத வகையில் ஒரு பிரமிட் உருவம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உயரம் :
கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள பிரமிட் உருவத்தின் உயரம் சுமார் நான்கு மைல் இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கிலிமாஞ்சாரோ மலை :
அதாவது, தன்சானியாவில் உள்ள கிலிமாஞ்சாரோ மலையை விட உயரமனாதாகும்.
எப்படி உருவாகி இருக்கும் :
"கவனிக்க வைக்கும் இந்த பிரமிட் உருவமானது சிரஸ் சிறுகோளின் மீது எப்படி உருவாகி இருக்கும், இதனை எது உருவாக்கி இருக்கும் என்பது புரியவில்லை" என்று கூறியுள்ளார் முக்கிய பணிக்குழு புலன்விசாரணை ஆய்வாளர் ஆன கிறிஸ்டோபர் ரஸ்ஸல்.
இதுபோன்ற உருவங்கள் :
மேலும், "பூமியில் ஆர்டிக் நிலப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் வெளியேறும் போது இதுபோன்ற உருவங்கள் ஏற்படும் ஆனால் அவைகள் மிகமிக சிறிய அளவுகளில் தான் உருவாகும்" என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அகுனா மோன்ஸ் :
கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள செங்குத்தான சரிவுகள் கொண்ட பிரமிட் கட்டமைப்புக்கு 'அகுனா மோன்ஸ்' (Acuna Mons) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நாசா :
மர்மமான பிரகாசப்புள்ளிகள் போலவே இந்த பிரமிட் அமைப்பு பற்றியும் எந்த விதமான தெளிவான விளக்கமும் கிடைக்கப்பெறவில்லை என்று நாசா தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment