Showing posts with label science. Show all posts
Showing posts with label science. Show all posts

Thursday, 19 May 2016

'டூம்ஸ்டே' எனப்படும் இறுதிநாளின் கடிகாரமானது ஒரு சாத்தியமான உலக பேரழிவை கணக்கீட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்கான பிரபலமற்ற "இறுதிநாள் கடிகாரம்" ஆனது 1947 ஆம் ஆண்டில், அறிவியல் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் மூலம் சிக்காககோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது..!

இயங்கி கொண்டிருக்கும் அந்த கடிகாரத்தை சார்ந்த விஞ்ஞானிகள் குழுவில் 16 நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..!

 Q7YhZuT.jpg

நள்ளிரவு தான் விடியல் :

 இறுதிநாள் கடிகார கோட்பாடானது நள்ளிரவு தான் ஒரு உலக பேரழிவின் விடியல் என்று பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

 OpqV5Yg.jpg

ஒவ்வொரு ஆண்டும் :

 1947-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நிலைக்கு ஏற்றது போல அந்த டூம்ஸ்டே கடிகாரம் செட் செய்யப்பட்டு கொண்டே இருக்கிறது.

 Xt2CvRy.jpg

ஏழு நிமிடங்கள் :

பனிப்போர் காலம் தொடங்கிய போது, டூம்ஸ்டே கடிகாரத்தில் நள்ளிரவு வர ஏழு நிமிடங்கள் 'செட்' செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 BT5ZbBY.jpg

மூன்று நிமிடங்கள் :

தற்போது அந்த கடிகாரத்தில் நள்ளிரவு பிறக்க மூன்று நிமிடங்களே உள்ளது போல் 'செட்' செய்யப்பட்டுள்ளது (அந்த கடிகாரத்தின் நேரத்தின் படியாக..!)

 Z7imfBz.jpg

இயற்கை பேரழிவு :

முதலில் இந்த அடையாள கடிகாரம் ஆனது ஒரு அணு ஆயுத பேரழிவை தான் பிரதிநிதித்துவப்படுத்தியது என்றாலும் கூட 2007-ஆம் ஆண்டில் காலநிலை மாற்ற அச்சுறுத்தல் மற்றும் சில இயற்கை பேரழிவுகளை பிரதிநிதிப்படுத்துவது போல் மாறிவிட்டது.

 hEo12hk.jpg

முன்னோக்கி அல்லது பின்னோக்கி :

அதை தொடர்ந்து அணு ஆயுத போர் வாய்ப்புக்கள் மற்றும் உலக நிலையைப் பொறுத்து முன்னோக்கி அல்லது பின்னோக்கி டூம்ஸ்டே கடிகார நள்ளிரவு தள்ளப்போடப்பட்டது.

 b120KA7.jpg

2012 :

 பின்பு 2012-ஆம் ஆண்டில், கடிகாரம் நள்ளிரவிற்க்கு மிக நெருக்கமாக (அதாவது நள்ளிரவிற்கு 5 நிமிடங்கள் ) சென்றது, ஏனெனில் அணு படைக்கலங்கள் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய அச்சுறுத்தல்கள் அந்த ஆண்டில் அதிகமாக இருந்தது.

 jU5sCXA.jpg

மிக நெருக்கம் :

டூம்ஸ்டே கடிகாரம் ஆனது எப்போதை விடவும், இந்த 2016-ஆம் ஆண்டு தான் மிக நெருக்கமாக நள்ளிரவை நெருங்கியுள்ளது, அதாவது 3 நிமிடங்கள் செட் செய்யப்பட்டுள்ளது.

 282kNmN.jpg

விளக்கம் :

தொடர்ச்சியான உலக காலநிலை மாற்றம் சார்ந்த பிரச்சினை, உலகம் முழுவதும் அரசியல் நடவடிக்கை இல்லாத நிலை ஆகியவைகள் தான் இந்த அளவிலான நள்ளிரவு நேர நெருக்கத்தை உண்டாக்கியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 is7vWXn.jpg

அணு ஆயுத நவீனமயமாக்கல் :

 மேலும் நள்ளிரவின் நெருக்கத்திற்கு ரஷ்யா மற்றும் அமெரிக்க அணு ஆயுதங்கள் நவீனமயமாக்கலில் உள்ள செல்வாக்கு மற்றும் அணு கழிவு பிரச்சனை ஆகியவைகளும் காரணமாக கூறப்பட்டுள்ளது

 ZcK1wof.jpg

2016 :

ஆக, டூம்ஸ்டே நம்பிக்கையாளர்கள் எதிர்நோக்கும் அந்த ஆண்டு இந்த 2016-ஆக இருக்கலாம் என்று அணு விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
0

Friday, 13 May 2016

காலப்பயணம் உண்மையோ, பொய்யோ தெரியாது ஆனால் இதனை விளக்கும் ஆதாரங்களாக இணையத்தில் வெளியாகும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டும் தினந்தினம் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது.

சமீபத்தில் நம்மிடையே அதிக பிரபலமாகி வரும் காலப்பயணம் உண்மையில் சாத்தியமா என்று அதிகம் யோசிக்காமல், இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் வீடியோவை பாருங்கள். இதில் காலப்பயணி ஒருவர் இருப்பதாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. 

xviq6G0.jpg

வீடியோ

1995 ஆம் ஆண்டு மைக் டைசன் மற்றும் பீட்டர் மெக்நீலியிடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

டைம் டிராவலர்

இந்த வீடியோவில் பார்வையாளர் ஒருவர் 21 ஆம் நூற்றாண்டின் கேமரா போன் ஒன்றை வைத்து போட்டியை புகைப்படம் எடுப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. 

Rvnwy2m.jpg

சதியாலோசனை கோட்பாடு

சதியாலோசனை கோட்பாட்டாளர்களின் மத்தியில் இந்த வீடியோ காலப்பயணத்திற்கான ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. 

AgdtQMC.jpg

ஆதாரம்

1995களில் கேமரா போன்கள் பயன்பாட்டில் இல்லாததால் இந்த வீடியோ காலப்பயணத்திற்கான ஆதாரமாக கருதப்படுகின்றது. 

QmVgTo3.jpg

பதிவேற்றம்

இந்த வீடியோவானது செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு யூட்யூபில் முதல் முறை பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

லாஸ் வேகாஸ்

லாஸ் வேகாஸ் நகரில் 1995 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 19 ஆம் தேதி மைக் டைசன் மற்றும் பீட்டர் மெக்நீலியிடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பார்வையாளர் ஒருவர் கையில் கேமரா போன் வைத்திருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது. 

jq04izo.jpg

பரபரப்பு

யூட்யூபில் தற்சமயம் வரை சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கும் இந்த வீடியோ தற்சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

HfpKSPR.jpg

விளக்கம்

மேலும் 1995 ஆம் ஆண்டு மக்களுக்கு சற்றும் அறிமுகமில்லாத கேமரா போன் எப்படி பார்வையளரிடம் வந்தது என்பதற்கு சரியான விளக்கம் அளிக்க சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

வீடியோ

இந்த வீடியோ மற்றும் அதில் காணப்படும் மர்ம மனிதர் குறித்து எவ்வித விளக்கமும் இது வரை அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 



0

Thursday, 12 May 2016

உலகம் அழியப் போகிறது. பூமியே அழியப் போகிறது என்பதாகப் பல ஊடங்கங்கள் மூலம் பரப்பப்படுகிற வதந்திகளை நம்பாதீர்கள். எல்லாமே கட்டுக்கதை
பூமி அழியப் போகிற்து என்று வதந்தி கிளப்புவோர் தங்களது கூற்றுக்கு ஆத்ரவாகக் கூறுகின்ற ”ஆதாரங்களுக்கு” எந்த அறிவியல் அடிப்படையும்  இல்லை.
உலகம் அழியப் போவதாகப் பல ஆண்டுகளாக அவ்வப்போது கிளம்பி வந்துள்ள அனைத்து வதந்திகளும் பொய்யாகிப் போயின. இப்போதைய வதந்தியும் அப்படி பொய்யாகிப் போகிற வதந்தியே.
தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில்அம்மன் கோயிலில் திடீரென விளக்கு அணைந்து விட்டதால ஆண்களுக்கு ஆகாது என்று வதந்தி கிளம்புகிறது. மூன்று நாட்கள் எல்லோர் வீடுகளிலும் பெண்கள்  வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைக்கிறாரக்ள். இப்படியான செய்தி அடிக்கடி தமிழ்ப் பத்திரிகைகளில் வருகிறது. இந்தச் செய்தியைப் படிக்கிறவர்க்ள் இப்படியும் மூட நம்பிக்கையா என வியக்கின்றனர்.
ஆனால் பூமி அழியப் போவதாக இண்டர்னெட்டில் செய்தி வெளியானால் யாரும் அதை மூட நம்பிக்கை என புறக்கணிப்பதில்லை. ஏனெனில் இண்டர்னெட்டில வந்தால் அதற்கு தனி மரியாதை. அது ஆங்கிலத்தில் இருப்பதால் தனி அந்தஸ்து. அமெரிக்காவிலிருந்து வருவதால் அது மதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கருதுகிறார்கள்.
உலகம் அழியப் போவதாகக் கிளப்பி விடப்பட்டுள்ள செய்தி இப்படியாகத் தான் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை யாரும் ஒதுக்கித் த்ள்ளுவதில்லை.இந்த வதந்திகளுக்கு அறிவியல் சாயம் பூசப்பட்டுள்ளதும் ஒரு காரணமாகும்.
மாயன் காலண்டரில் பூமி அழியும் என்று சொல்லியிருக்கிறதாம். உலகில் மாயன் காலண்டர் அல்ல. வெவ்வேறான பல காலண்டர்களும் இருந்து வந்துள்ள்ன. .பாபிலோனியர், எகிப்தியர், சீனர்கள், பண்டைக்கால இந்தியர்கள் என ஒவ்வொருவரும் தனித்தனி காலண்டர்களைப் பின்பற்றினர். 2012 ஆம் ஆண்டில் பூமி அழியப் போவதாக ஒருமுகமாக  எல்லா காலண்டர்களிலும் கூறப்பட்டுள்ளதா? அப்படி ஒன்றுமில்லை.
இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்துள்ள ஹிந்து காலண்டரின்படி கலியுகம் முடியவே இன்னும் 4,26,887 ஆண்டுகள் உள்ளன. கலியுகம் முடிந்த பின்னர் பூமி அழியப் போவதாக சொல்லப்படவில்லை. கலியுகம்முடிந்த பின்னர் மறுபடி சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகங்கள் வரிசையாக  வரும் என்று தான் கூறப்பட்டுள்ளது.  எல்லாக் காலண்டர்களிலும் இப்படித்தான்.இது ஒவ்வோர் ஆண்டும்  டிசம்பர் மாதம் முடிந்ததும் பழையபடி ஜனவரி மாதம் வருவதைப் போலத்தான்.
தங்களைச் சுற்றி உள்ளவர்கள், அத்துடன்  தங்களைப் பின்பற்றுபவர்கள் ஆகியோர் மீது தங்கள் பிடி இருக்க வேண்டும் என்பதற்காகக்  கடந்த காலத்தில் காட்டுவாசிகளின் தலைவர்கள், பூசாரிகள், மத குருமார்கள், ராஜ குருக்கள் போன்றோர்  சந்திர கிரகணம், சூரிய கிரகணம், வால் நட்சத்திரத்தின் தோற்றம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மக்களைப் பயமுறுத்தி தங்களுக்கு அடிபணிந்து நடக்கும்படி செய்து வந்தனார்.. மக்களின் அறியாமை இதற்கு வசதியாக இருந்தது
.
ஐரோப்பாவில் 1860 ஆண்டில் பெரிய வால் நட்சத்திரம் தோன்றிய போது விஷயமறியாத மக்கள் உலகம் அழியப் போகிறது என்று பீதியில் ஆழ்ந்தனர். பலர் தங்கள்து சொத்துக்களை மடங்களுக்கு எழுதி வைத்தனர்.
இப்போது அறிவியல் முன்னேற்றம் காரணமாக மக்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது. ஆகவே மக்களை நம்ப வைப்பதற்குப் புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும். மாயன் காலண்டர் பற்றிய “ கண்டுபிடிப்பு” அப்படிப்பட்டதே.
உலகம் எப்படி அழியப் போகிறதாம்?  நிபிரு என்ற ஒரு கிரகம்  பூமி மீது மோதப் போகிறதாம். சொல்லப் போனால் நிபிரு என்ற கிரகமே கிடையாது. அது  எங்கிருந்தோ வந்து மோதவும் வாய்ப்பு கிடையாது
.
பூமியை சந்திரன் சுற்றுகிறது. பூமியும் மற்றும் எட்டு கிரகங்களும் சூரியனை சுற்றுகின்றன. இது பல நூறு கோடி ஆண்டுகளாக இயற்கை நியதிகளின்படி நடைபெற்று வருவதாகும். சூரியன்.இந்த கிரகங்களை இழுத்துக் கொண்டு  நமது அண்டத்தின் ( Galaxy) மையத்தைச் சுற்றி வருகிறது. இதுவும் பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.
சூரிய மண்டலத்துக்குள்ளாகப்  பறக்கும் பாறைகள் என்று சொல்லத் தக்க அஸ்டிராய்டுகள் தங்களது பாதைகளில் சுற்றி வருகின்றன.பூமிக்கு அருகே வந்து செல்கின்ற அஸ்டிராய்டுகள் உண்டு. விஞ்ஞானிகள்  இவற்றின் பட்டியலை ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளனர். ஐந்து மீட்டர், பத்து மீட்டர் நீளம் கொண்ட பாறைகளின் சுற்றுப்பாதைகளும் அளந்து பதிவு செய்யப்பட்டுள்ளன
உதாரணமாக டிசம்பர் 14 ஆம் தேதியன்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடி ஐந்து மீட்டர் நீளமுள்ள பாறை ஒன்று பூமியைக் கடந்து சென்றது. விபரீதமாக எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இவை அனைத்தும் டெலஸ்கோப்புகள், ராடார்கள், பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன
எந்த பறக்கும் பாறை என்றைய தினம் பூமியைக் கடந்து செல்லும் என்பது பற்றிய விவரத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.விஞ்ஞானிகள் இப்படியான விஷயங்களை மூடி மறைப்பது இல்லை.
ஒரு வால் நட்சத்திரத்தின் தலையின் சைஸ் பத்து அல்லது இருபது கிலோ மீட்டர்களே. ஒரு வால் நட்சத்திரம் சில லட்சம கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போதே அதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
ஆகவே நிபிரு என்ற கிரகம் பூமியைத் தாக்கப் போகிறது என்றால் இத்தனை நேரத்துக்கு அது பூமியை நெருங்கியிருக்க வேண்டும்.அப்படியானால் அது டெலஸ்கோப், ராடார், செயற்கைக்கோள் ஆகியவற்றில் தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை தட்டுப்படவில்லை.
நிபிரு பூமியைப் போல நான்கு மடங்கு பெரியதாம். அப்படி  என்றால் அது பல ஆயிரம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்க வேண்டும்.ஐந்து மீட்டர் பறக்கும் பாறையே விஞ்ஞானிகளின் கருவிகளில் சிக்கும் போது அந்த அளவுள்ள நிபிரு  கிரகம் இது வரை ஏன்  தட்டுப்படவில்லை? நிபிரு கற்பனையான கிரகம் என்பதால் தான் அது தட்டுப்படவில்லை.
அமாவாசை இரவில் கருப்புப் போர்வை போர்த்திக் கொண்டு சுவர் ஏறிக் குதிக்கின்ற ஒரு திருடன் போல நிபிரு கிரகம் பூமியை நெருங்கித் தாக்க வாய்ப்பே இல்லை
பூமிக்கு வேறு வகையில் ஆபத்து ஏற்படும் என்றும் விஷமிகள் கதை கட்டி விட்டுள்ளனர். சூரியனில் பயங்கர சீற்றம் ஏற்பட்டு சூரியனிலிருந்து நெருப்பு ஜுவாலைகள் பூமியைத் தாக்கி பூமியை அழிக்கப் போவதாக பீதி கிளப்பிவிட்டு ள்ளனர். இதுவும் அறிவியல் சாயம் பூசப்பட்ட கற்பனையே.
சூரியனில் இப்போது அடிக்கடி சீற்றம் ஏற்படுகிறது என்பது உண்மையே. ப்தினோரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் கரும்புள்ளிகள் (Sunspots) அதிகபட்சமாக இருக்கும்.இப்போது அப்படியான நிலைமை உள்ளது. ஆகவே தான் சூரியனில் சீற்றம் காணப்படுகிறது
இது பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருவதாகும்.சூரியனில் சீற்றம் ஏற்படும் போது சூரியனிலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் அடங்கிய மொத்தை தூக்கி எறியப்படும். இது Coronal Mass Ejection  (CME) எனப்படுவதாகும்.
கடந்த பல மாதங்களில் பல CME க்கள் தோன்றியுள்ளன. இவற்றிலிருந்து   பூமியின் காந்த மண்டலம் நம்மை பாதுகாக்கிறது. தவிர, இந்த CME க்களால் பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள், பூமியில் உள்ள மின் இணைப்பு கிரிட்டுகள்,  நிலத்துக்கு  அடியில் உள்ள எண்ணெய், மற்றும் வாயுக் குழாய்களுக்கு சேதம் ஏற்படுமே தவிர, மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.
சூரியனில் கரும்புள்ளிகள் 2013 ல் உச்சத்தை எட்டிவிட்டுப் பிறகு குறைய ஆரம்பிக்கும். முன்னர் 1980 ஆம் ஆண்டில் சூரியப் புள்ளிகள் மிக அதிகமாகவே இருந்தன. 2000 ஆம் ஆண்டில் அதை விடக் குறைவாக இருந்தது. இப்போது அதை விடவும் குறைவாக உள்ளது.2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு சூரியனில் கரும்புள்ளிகள் குறைய ஆரம்பிக்கும்.
சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிப்பதும் குறைவதும் வழக்கமான ஒன்று. கடந்த காலத்தில் சூரியனில் கரும்புள்ளிகள் அதிகமாக இருந்த ஆண்டுகளில் விபரீதம் எதுவும் ஏற்ப்ட்டுவிடவில்லை. ஆகவே சூரியனிலிருந்து நெருப்பு ஜுவாலை பூமியை வந்து தாக்கலாம் என்பது வெறும் கற்பனையே.
பூமி அழியப் போகிற்து. மக்கள் அழியப் போகிறார்கள் என்று பீதி கிளப்பப்படுவது இது முதல் தடவை அல்ல. 1806, 1843, 1891, 1910, 1982, 1997, 1999,  என கடந்த பல ஆண்டுகளில் இப்படி பீதி கிளப்பப்பட்டது. ஆனால்  எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இந்தத் தடவை இந்த பீதி பரவலாகப் பரவியுள்ளது. இண்டர்னெட், பேஸ்புக் எனற சாதனங்கள் மூலம் எளிதில் எதையும் ப்ரப்ப முடியும் என்பதே இதற்குக் காரணம்.
இப்படியான பீதி பரவும் போது பல சமூக விரோத செயல்கள் தோன்றும். மன உறுதியற்றவர்கள் தற்கொலை எண்ணத்தைப் பெறுவர். சில நாட்கள் தானே உயிரோடு இருக்கப் போகிறோம், அதற்குள்ளாக எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என முறைகேடான செயல்களுக்கு தூண்டப்படுவோர் இருப்பர்.
சமூகத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் வகையில் பீதி கிளப்புவது என்பது கிரிமினல் குற்றமாகும். இதில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க உலகில் எல்லா நாடுகளிலும் அரசுக்கு அதிக்ர்ரம் உண்டு.
சீனாவில் ஒரு நகரில் “உலகம் அழியப் போகிறது” என்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்துச் சென்றவர் மற்றும் நோட்டீஸ் வினியோகித்துச் சென்றவர் உடபட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை முற்றினால் மேலும் பல நாடுகளிலும் இவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
ஆகவே உலகம் அழியப் போவதாகக் கூறும் பீதியைப் பரப்புவதில் நீங்கள் ஒருவராக இருக்க முற்படாமல் இருப்பது நல்லது.
சீனாவிலும் ரஷியாவிலும் பெரும் பீதி நிலவுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்காவில் நிலத்துக்கு அடியில் உள்ள பாதாளப் புகலிடங்களில் இடம் பிடிக்கப் பலரும் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் போய் தங்கினால் அழிவிலிருந்து தப்பிவிடலாம் என்ற வதந்தி கிள்ம்பி பல்ரும் அந்த கிராமத்தை நோக்க்ப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.அதிகாரிகள் இதைச் சமாளிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
நல்ல வேளையாக இந்தியாவில் பெரும் பீதி எதுவும் இல்லை. சென்னை செண்டிரல், அல்லது எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 21 ஆம் தேதி கிளம்பும் ரயில் வண்டிகளில் இடம் இருப்பது சந்தேகமே. அன்றைய தினம் சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் நீங்கள் விரும்பும் படத்தைக் காண டிக்கெட் கிடைப்பது எளிதாக இராது. சென்னை விமான நிலையத்துக்குப் போனால் வழக்கம் போல கூட்டம் காணப்படும். சாதாரண பொது மக்களுக்கு பூமி அழியும் என்று சொல்லப்படுகிற வதந்தி பற்றியே தெரிந்திராது. அல்லது அதை அவர்கள் பொருட்படுத்தாதவாகள்.
பூமி அழிந்து விடும் என்று சொல்லப்படுகிற வதந்தி பற்றி அதே வேலையாக இண்டர்னெட்டைக் குடைந்து கொண்டிருப்பவர்க்ள் பலரிடம் ஒரு வேளை பீதி  நிலவலாம்.
.எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை என  நாஸா உட்பட யார்  சொன்னாலும் நம்ப மறுக்கிறவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் தெளிவாக இருங்கள். வருகிற  டிசம்பர் 21 ஆம் தேதி மற்ற நாட்களைப் போல ஒரு நாள். அவ்வளவு தான். உலகம் அழியாது
(Update: ஜ்னவரி முதல் தேதி 2013--  பூமி நிச்சயம் அழியப் போவதில்லை என்று எழுதி பத்து நாட்கள் கழிந்து விட்டன. ஆனால் இது தொடர்பாக பீதி கிளப்பியவர்கள் தங்களது ஜோசியம் ஏன் பொய்த்தது என்பதற்கான நொண்டிச் சாக்கு எதையும் இதுவரை கூறவில்லை.
     எனினும் இப்படி ஒரு பீதி மறுபடி கிளம்பாது என்று சொல்லி விட முடியாது. இப்போது கிளப்பி விடப்ப்ட்ட பீதி பற்றிய விவகாரம் எளிதில் மறக்கப்பட்டு விடும். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி இது மாதிரியான புரளி மீண்டும் கிளம்பும். ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கின்ற வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பர்...



0

விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் ஏலியன் எனப்படும் வேற்றுகரக வாச தேடலில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சமீபத்தில் வெளியான ஆய்வுகளில் பூமியை போன்ற வாழும் சூழல் கொண்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

டிராப்பிஸ்ட்-1 பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் வியாழன் அளவு இருக்கும் பொருள் ஆகும். அவ்வளவு எளிதாக கண்களில் தெரியாத டிராப்பிஸ்ட்-1 வெப்பம் 2,400º செல்ஷியஸ் ஆகும். பூமியை பொருத்த இது அதிகப்படியான எனலாம், ஆனால் நட்சத்திர தரத்தை பொருத்த வரை இது மிகவும் குளுமையான ஒன்று என குறிப்பிடப்படுகின்றது. 

Yozw4SX.jpg

மூன்று கிரகங்கள் 

சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி டிராப்பிஸ்ட்-1 வட்டப்பாதையில் மொத்தம் மூன்று கிரகங்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

Jx5Z1ut.jpg

சூழ்நிலை

இந்த கிரகங்களின் சூழ்நிலையானது பூமியை போன்ற வாழ்க்கையை அனுமதிப்பதோடு பூமியை போன்றே அங்கும் வாழ்க்கை இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Wn4tb63.jpg

ஆய்வு

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையம், பெல்ஜியத்தின் லெய்க் பல்கலைக்கழத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சிலியில் இருக்கும் 60 செமீ தொலைநோக்கி மூலம் விரிவான கண்கானிப்பு துவங்கியது.

76Dr16K.jpg

பெயர்

இந்த தொலைநோக்கியானது TRAnsiting Planets and Planetesimals Small Telescope என அழைக்கப்படுகின்றது. இதில் இருந்தே டிராப்பிஸ்ட் என்ற பெயர் சூட்டப்பட்டது. 

MwQv4iA.jpg

வழிமுறை

வெளி கோள்களை கண்டுபிடிக்கும் பொதுவான வழிமுறையானது தொலைநோக்கியை சரியான பாதையில் பொருத்தவது ஆகும். அதாவது கிரகங்கள் சுற்றி வரும் போது நட்சத்திரங்களுக்கிடையே சிறிய அளவு ஒளி சிமிட்டல் ஏற்படும் நேரத்தில் அதனிடையே தெரிவதற்கு ஏற்ப பொருத்தப்பட வேண்டும். 

வடிவமைப்பு

இதற்கென பிரத்யேக கருவிகளை கொண்டு தொலைநோக்கியை வடிவமைக்க வேண்டும் என ஜூலியன் டீ விட் என்ற ஆய்வாளர் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

2yM1q1r.jpg

இன்ஃப்ரா ரெட் 

டிராப்பிஸ்ட்-1 குறித்து ஆய்வுகளில் சாதாரணமாக இல்லாமல் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரம் மூலம் ஆய்வு செய்தால் எதையேனும் கற்று கொள்ள முடியும் என ஆய்வு குழு அதிக சிரமம் கொண்டு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. 

wNcBRQo.jpg

ஆய்வு

இந்த தொலைநோக்கி மொத்தமாக 254 மணி நேரம், அதாவது 62 இரவுகள் ஆய்வு செய்தது. இன்ஃப்ரா ரெட் சிக்னல்களில் மின்மினிப்புகள் இருந்ததால் பூமியை போன்ற அளவில், குறைந்த பட்சம் மூன்று கிரகங்கள் இருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. 

FB5lEwk.jpg

சுற்றுவட்டபாதை

மூன்று கிரகங்களில் இரண்டு கிரகங்கள் ஒவ்வொரு 1.5 அல்லது 2.4 நாட்களில் ஒரு முறை சுற்று வட்டபாதையில் சுற்றி வருவதாகவும் தனியே இருக்கும் கிரகமானது 73 நாட்கள் எடுத்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

JOwH5c0.jpg

அருகாமை 

பூமியில் இருந்து சூரியன் இருக்கும் தூரத்தை விட இந்த கிரகங்கள் டிராப்பிஸ்ட்-1'உடன் மிகவும் அருகாமையில் இருக்கின்றது. இதே சூழல் பூமியில் நிலவும் போது பூமியின் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும். 

nNlYQPS.jpg

அண்மை

டிராப்பிஸ்ட்-1 உடன் இரு கிரகங்களின் அண்மை நிலை சீராக இருப்பதால் பகல் நேரத்தில் அதிக வெப்பமாகவும், இரவு நேரத்தில் அதிக குளிர்ச்சியாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

U6zrGmp.jpg

விண்கலம் 

பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதால் தற்சமயம் வரை இத்தகைய தூரத்தை கடக்க விண்கலம் பூமியில் தயாரிக்கப்படவில்லை.

0C6xGiv.jpg

ஆய்வு

இத்தகைய கிரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளதால், உலகெங்கும் இருந்தும் தொலைநோக்கிகளின் மூலம் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகளை செய்து இவை குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இதில் வேற்றுகிரக வாசம் குறித்த சுவார்ஸ்ய தகவல்களும் நிச்சயம் எதிர்பார்க்க முடியும்.
0