இனிமேல் எல்லாமே நாங்கதான்! அசத்தும் இளம் சூப்பர் ஹீரோஸ்

" ஜங் ஜஸ்டிஸ்"

எந்த ஒரு கார்ட்டூன் தொடராயினும் சரி அல்லது ஒரு அனிமேட்டற் தொடராயினும் சரி பொதுவாக குழந்தைகள்,சிறுவர்களை கவரும் நோக்கின் அடிப்படையிலேயே உருவாக்கபடுகின்றன.
பொதுவாக அவ்வாறான தொடர்களே சிறுவர்களை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவர்ந்து வெற்றியும் பெறுகின்றன, பெற்றும் இருகின்றன....... ஆனால் இவங்க கொஞ்சம் வித்தியாசம்...
ஒரு தொடர் உலகம் பூராகவும் வெளியான சில மாதங்களிலேயே இவ்வளவு அதிகமான இளம் ரசிகர் பட்டாளத்தை கவரமுடியுமா ?கவரமுடியும் என நிரூபித்திருக்கிறது அமெரிக்காவில் 2010 முதல் 2013 களில் வெளியாகி சக்கைபோடுபோட்ட " ஜங் ஜஸ்டிஸ்" அனிமேட்டற் தொடர்.........

சிறுவர்கள்,குழந்தைகளை விடவும் அதிகளவில் இளம் சந்தியினரே இத்தொடருக்காக இன்டர்நெற்களிலும் , டிவி முன்னாடியும் சனிக்கிழமைகளில் தவமாய் தவம் இருந்தார்கள்...
அதிலும் இளம் பெண்களும் இத் தொடரை அதிகம் விரும்பிபார்க்க தொடங்கினார்கள் என்றால் சும்மாவா??
வெளியான முதல் மாதங்களிலேயே நெட்பிலிக்ஸ் இல் அதிக பேரால் பார்க்கப்பட்ட அனிமேட்டற் தொடராகவும் உருவானது....
மட்டுமின்றி வெளியாகிய முதல் சீசனிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரினதும் பாராட்டை பெற்றதுடன், டாப் கார்ட்டூன்/அனிமேட்டற் தொடர்களுக்கான சிம்மாசன வரிசையில் தனக்கென ஓர் இடத்தையும் பதித்ததே இதன் மிக பெரிய சாதனை......

உருவான கதை....

சூப்பர் ஹீரோஸ்னாலே முதல் எங்களுக்கெல்லாம் ஞாபகம் வர்றது என்ன? கேப் தான்!!
அவங்க முதுகுபுறமா பறக்குமே அதேதான் ..கேப் அணிஞ்சாலே நாங்களும் சூப்பர்ஹீரோ தான் என்ற ட்ரெண்ட அறிமுகபடுத்தியது வேறயாரும் இல்லேங்க,,காமிக்ஸில் அதித சக்தி வாய்ந்த சூப்பர் ஹீரோவான சூப்பர் மேனே தான்!காமிக்ஸின் முதல் சூப்பர்ஹீரோவும் கூட...
அவங்க முதுகுபுறமா பறக்குமே அதேதான் ..கேப் அணிஞ்சாலே நாங்களும் சூப்பர்ஹீரோ தான் என்ற ட்ரெண்ட அறிமுகபடுத்தியது வேறயாரும் இல்லேங்க,,காமிக்ஸில் அதித சக்தி வாய்ந்த சூப்பர் ஹீரோவான சூப்பர் மேனே தான்!காமிக்ஸின் முதல் சூப்பர்ஹீரோவும் கூட...

முதலில் காமிக்ஸ் புத்தகமாக மட்டுமே வெளியாகி வந்த நம்ம சூப்பர்ஹீரோஸ் பின் படிப்படியான வளர்ச்சியால் டிவி தொடராகவும்,திரைப்படங்களாகவும் ,அனிமேட்டற் தொடர்களாகவும் வலம்பரதொடங்கினார்கள் ... இவற்றில் ஆரம்பகாலங்களில் வெளியான சூப்பர்மேன், பேட்-மேன்,ஸ்பைடர்மேன்,எக்ஸ் மேன் அனிமேட்டற் தொடர்களே ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருந்தன....இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது " ஜங் ஜஸ்டிஸ்" ..

பிரபல காமிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றான DC காமிக்ஸ்ஸினால் 1998 களில் " ஜங் ஜஸ்டிஸ்" என்னும் பெயரில் வெளியான இளம் சூப்பர் ஹீரோக்களின் சாகசங்கள் பற்றிய காமிக்ஸ் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு பிரபல அனிமேட்டற் தயாரிப்பாளர்களும்,எழுத்தாளர்கள்களுமான கிரேக் வைஸ்மன் மற்றும் பிரண்டன் விற்ரியின் முயற்சியால் நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் சூப்பர்ஹீரோக்கள் அனிமேஷன் தொடரை தயாரித்து வெளியிட்டது வார்னேர் ப்ரோ அனிமேஷன் கம்பனி அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் இந்த " ஜங் ஜஸ்டிஸ்" அனிமேட்டற் தொடர்...
மொத்தம் இரண்டு சீசன்களில் 22 நிமிடங்கள் ஓடகூடிய 46 எபிசோட்ஸ்கள் ஒவ்வொன்றும் தெறி ரகம்...
கதை அமைப்பு
18 வயதிலும் குறைவான இளம் ஹீரோஸ் தான் இக் கதையோட கதாநாயகர்கள் ! அவங்க வேற யாரும் இல்ல நம்ம பேட் -மேன்,பிளாஷ்,அக்குவா மேன் போன்ற பெரிய தலைகளோட அடுத்த தலைமுறை.

சைடுகிக்குனு(side KICKS) கூட சொல்லலாம் . இதுவரைகாலமும் சைடுகிக்கா அவங்க கூட இருந்து பயிற்சி எடுத்துகிட்டு வர்ற ஹீரோஸ ஒரு ஆபீசியல் ஜங் டீமாக அறிவிக்கிறார்கள் லீக் மெம்பெர்ஸ்..இதிலிருந்து ஆரம்பமாகிறது ஜங் ஹீரோசோட சாகசபயணம்....
கதாபாத்திரங்கள்
அக்குவாலாட்/கால்ரோன்(தன்னம்பிக்கை நிறைந்த " ஜங் ஜஸ்டிஸ்"
லீடர்)
ராபின்/நைட்விங்(பேட்மேனோட மிக சிறந்த மாணவன் ஜங் ஜஸ்டிஸ்டின் ஜங் டிடேக்டிவ்)
கிட் பிளாஷ்/வாலி வெஸ்ட் (ஜங் ஜஸ்டிஸ்டின் சுறுசுறுப்பான அதிவேகமான ஸ்பீட் ஸ்டார்)
சூப்பர்போய்( மிகுந்த பலம் கொண்ட சூப்பர் மேன் குளோன்)
மிஸ் மார்ஸ்யன் (அதி சக்திசாலிமற்றும் புத்திசாலி,மனித குணாதிசயங்களை கொண்ட அன்பான வேற்றுகிரக பெண்....)
ஆர்ட்டிமஸ் (ஜங் பொம்பள ராபின் ஹூட்)
சட்டானா (மஜாயால சக்தி கொண்ட பெண்)
ரெட் அறோ/ஸ்பீடி
ப்ளூ பீட்டில்
தன்னம்பிக்கை கொண்ட , கபடமற்ற மகிழ்ச்சி, செய்யும் ஒவ்வொரு செயலிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட மனித குணாதிசயங்களை கொண்ட ஒரு இளம் கதாபாத்திரங்கள் தான் ஜங் ஜஸ்டிஸ்...

கதை அமைப்பும் ,வசனங்களுமே ஜங் ஜஸ்டிஸ் தொடருக்கு மிகப்பெரிய பிளஸ்
கலகலப்பான நண்பர் கூட்டம், சிறிய அழகான காதல் கதைகள், துல்லியமான வசனநடை,உணர்ச்சிபூர்வமான வசனங்கள் ,அதிகமாக பிரயோகிக்கபடும் வார்த்தைகள் (NOW OR Never(superboy) ,souvenir(Kidflash),robin(whelmed words) ),
பிரச்சனைகளை சாதுரியமாக மனம் தளராமல் சமாளிப்பது,

நல்ல குணங்கள்,விடாமுயற்சியின் முக்கியத்தும்,
இளம் தலைமுறை சந்ததியாலும் எதையும் சாதிக்கமுடியும் என்ற கோட்பாட்டை உணர்த்தும் ஜங் ஜஸ்டிஸ் இளம் தலைமுறை ரசிகர்களை கவர்வதில் ஆச்சரியம் ஏதும் இருக்கிறதா என்ன?
No comments:
Post a Comment