வியாழன் கிரகத்தின் அறியப்பட்ட 67 நிலவுகளில் ஒன்றான யூரோப்பா (europa) பற்றி கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா புதிய ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டது. புவியின் நிலவைவை விட சற்றே சிறியதான யூரோப்பா - சிலிக்கேட் பாறைகளால் ஆனது என்றும், அதன் கரும்பகுதியில் இரும்பு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இதன் பலம் குன்றிய வளிமண்டலத்தில் முதன்மையானதாக ஆக்சிசன் உள்ளது, பனிக்கட்டிகளால் ஆன இதன் மேற்பரப்பு சூரிய மண்டலத்திலேயே மிகவும் பள்ளம் மேடற்ற ஒரு விண்வெளி பொருளாகும்..!
இரசாயன சமநிலை :
தற்போது யூரோப்பாவின் சமுத்திரங்கள் ஆனது, நமது பூமி கிரக சமூத்திரங்களோடு சமநிலை பெற்றுள்ளது என்றும் முக்கியமாக வாழ்வாதார திறன் வளர்க்க வல்ல ஒரு இரசாயன சமநிலை கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அன்னிய வாழ்க்கை :
இதன் மூலம், அண்டத்தில் அன்னிய வாழ்க்கையை கண்டுபிடிக்க மிகவும் நம்பிக்கைக்குரிய இடங்களில் ஒன்றாக யூரோப்பா கருதப்படுவதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அன்னிய வாழ்க்கை :
பூமியில் அளவில் நான்கில் ஒரு பங்கு இருக்கும் இந்த ஜூப்பிடர் நிலவானது தடித்த பனியிலான ஷெல் மூலம் மூடப்பட்டிருக்கும்போதும் அதன் அடியில் ஒரு ஆழமான உப்பு கடல் இருக்க முடியும் என்ற வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.
உற்பத்தி செய்முறை :
யூரோப்பாவின் சாத்தியமான ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் முறையை பூமியின் உற்பத்தி முறையுடன் ஒப்பிட்டு நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகம் ஆய்வு செய்துள்ளது.
இயக்க காரணம் :
அதன் மூலம் யுரோப்பாவின் கடலில் நிகழும் ஆக்சிஜன் - ஹைட்ரஜன் உற்பத்திதான் யூரோப்பா கடலின் வேதியியல் மற்றும் அங்கு வாழும் எந்தவிதமான வாழ்க்கைக்கும் ஒரு முக்கிய இயக்க காரணமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஆக்சிஜன் :
உடன் யூரோப்பாவில் ஹைட்ரஜனை விட பத்து மடங்கு அதிக ஆக்சிஜன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் தான் தோராயமாக பூமியிலும் உள்ளது.
பதில் :
அங்கு உயிர் சாத்தியமா என்ற கேள்விக்கு, அடுத்தபடியாக கார்பன் மற்றும் நைட்ரஜன் போன்றவைகள் அங்கு இருக்கிறதா என்பதை கண்டறிவதின் மூலம் பதில் கிடைக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment