இ பயன்படுத்தி வரும் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் மிகப்பெரிய வரலாறு இருக்கின்றது. உலகில் அசையும், அல்லது நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் காரணமாக ஒருவர் நிச்சயம் இருப்பார். உடனே அந்த ஒருவர் கடவுள் என நினைக்காதீர்கள், அந்த ஒருவர் நீங்கள் தான்..
உலகில் சரியான அல்லது தவறான என, ஏதேனும் காரணமின்றி எதுவும் நடக்காது. அப்படியாக உலகில் மனிதன் கண்டுபிடித்திருக்கும் ஒவ்வொன்றிற்கும் பின் மறைக்கப்பட்ட அல்லது அழிந்து போன வரலாறு நிச்சயம் இருக்கின்றது.
அவ்வாறு இன்று பிரபலமாக பேசப்பட்டும், புழக்கத்தில் இருக்கும் பல்வேறு கருவிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டு விட்டது. கண்டுபிடிப்பாளர்கள் இன்று பிரபலங்களாகி இருக்கின்றனர். இதற்கு அடித்தளம் அல்லது இதனை முன்பே கணித்தவர்கள் குறித்த தொகுப்பே இது.!!
தானியங்கி மகிழுந்து கண்டுபிடிப்பு :
தானியங்கி கார்
டிரைவர்லெஸ் டாக்ஸி:
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களும் ஓட்டுனர் இல்லாமல் தானே இயங்கும் வாகனங்களை கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றன. சில நாடுகளில் இவை விரைவில் பயன்பாட்டிற்கும் வழங்கப்பட இருக்கின்றது. இந்தியாவிலும் டாட்டா நானோ வாகனத்தை தானியங்கி முறையில் இயங்க வைத்திருக்கின்றனர்.
வரலாறு:
இன்று பிரபலமாகி வரும் தானியங்கி வாகன முறையினை 80 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது 1930களில் டேவிட் எச்.கெல்லர் என்பவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரோபோட் கண்டுபிடிப்பு :
ரோபோட்
சதுரங்க ரோபோட்:
உலகளவில் ரோபோட் சந்தையானது மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. தினம் தினம் அறிமுகமாகும் புது வகை ரோபோட்களே இதற்கு எடுத்துக்காட்டு. அந்த வகையில் இன்று மனிதனால் செய்யக்கூடிய மற்றும் செய்ய இயலாத அனைத்தையும் சுலபமாக செய்து முடிக்க ரோபோட்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. இதில் நம்முடன் சதுரங்கம் விளையாடும் ரோபோட்களும் அடங்கும்.
வரலாறு:
இன்று பெருமையாக நாம் நினைத்து கொண்டிருக்கும் ரோபோட் இயந்திரம் 1700களில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டும் வந்தது. இக்காலத்தில் மனிதர்களுடன் சுதரங்கும் விளையாடும் திறன் கொண்ட ரோபோட் இயந்திரமாக மெக்கானிக்கல் ட்ரக் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பயணம்:
மனிதன் நிலவில் 1969 ஆம் ஆண்டு வாக்கில் கால் பதித்து விட்டான். அன்று துவங்கி இன்று வரை நிலவு சார்ந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. இதோடு நிலவு இல்லாமல் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க
வரலாறு:
ஆனால் பூமியை விட்டு மனிதன் வெளி கிரகங்களுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து ஜோஹானஸ் கெப்ளர் என்பவர் 1610 ஆம் ஆண்டு குறிப்பிட்டுள்ளார்.
டிரோன்:
இன்று நமக்கு அதிகம் அறிமுகமாகியிருக்கும் டிரோன்கள் பல்வேறு பயன்பாடுகளை வழங்குகின்றது. வீடியோ எடுப்பதில் துவங்கி, பொருட்களை விநியோகம் செய்வது மற்றும் உளவு சார்ந்த பணிகளுக்கும் டிரோன்கள் அதிகம் பயன்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது.
வரலாறு:
1938 ஆம் ஆண்டு வொன்டர் ஸ்டோரீஸ்'இல் மேன்லி வேடு வெல்மேன் என்பவர் செயற்கை கண் ஒன்று கீபோர்டு மூலம் இயக்கும் திறன் பெற்று கன நேரத்தில் வீடியோவினை வழங்கும் என குறிப்பிட்டிருந்தார்.
ஸ்மார்ட்போன்:
கருவி பல்வேறு அல்லது அனைத்து தினசரி பயன்களையும் வழங்கும் ஒற்றை கருவியாக ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. இன்று மிகவும் சகஜமான ஒன்றாகிவிட்ட ஸ்மார்ட்போன் கருவிகள் சார்ந்த கணிப்பு 1960களில் மேற்கொள்ளப்பட்டது.
வரலாறு:
வரலாறு:
1966 ஆம் ஆண்டு ஃப்ரெட்ரிக் ஃபோல் என்பவர் 'தி ஏஜ் ஆஃப் தி புஸ்ஸிஃபூட்' என்ற புத்தகத்தில் 'இன்று நம் வாழ்வின் மிக உயரிய கருவியாக இருக்கும் ஜாய்மேக்கர், ஒரு நாள் தொலைபேசி, கிரெடிட் கார்டு, அலாரம், உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒற்றை கருவியில் வழங்கும் காலம் வரும்' என குறிப்பிட்டிருந்தார்.
செயற்கை உணவு:
உணவு இன்று நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகளில் ரசாயனம் மூலம் சுவை கூட்டுப்படுகின்றது. இவை தான் இன்று நமக்கு ஏற்படும் பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கும் காரணமாக இருக்கின்றது.

செயற்கை உணவு உட்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை எச்.ஜி வெல்ஸ் 1914 ஆம் ஆண்டு வெளியான 'தி வோர்ல்டு செட் ஃப்ரீ' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இ-புக்:
இ-ரீடர் உலகில் நமக்கு தெரியாத பலவற்றை தெரிந்து கொள்ள பயன்படும் விக்கிபீடியா சேவை மற்று புத்தகங்களை படிக்க பயன்படுத்தும் இ-ரீடர் கருவிகள் நம்மில் பலருக்கும் நன்கு அறிமுகமான கருவியாவே இருக்கின்றது.
வரலாறு:
ஆனால் எதிர்காலத்தில் அதாவது இன்று இது போன்ற சேவைகள் மற்றும் கருவிகள் பயன்படுத்தப்படும் என்பதை 'தி ஹிட்ச்சிக்கர்ஸ் கைடு டு தி கேலக்ஸி' என்ற புத்தகத்தில் டௌக்லஸ் அடாம்ஸ் என்பவர் 1939 ஆம் ஆண்டு குறிப்பிட்டுள்ளார். ன்று நாம் பயன்படுத்தி வரும் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் மிகப்பெரிய வரலாறு இருக்கின்றது. உலகில் அசையும், அல்லது நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் காரணமாக ஒருவர் நிச்சயம் இருப்பார். உடனே அந்த ஒருவர் கடவுள் என நினைக்காதீர்கள், அந்த ஒருவர் நீங்கள் தான்..
உலகில் சரியான அல்லது தவறான என, ஏதேனும் காரணமின்றி எதுவும் நடக்காது. அப்படியாக உலகில் மனிதன் கண்டுபிடித்திருக்கும் ஒவ்வொன்றிற்கும் பின் மறைக்கப்பட்ட அல்லது அழிந்து போன வரலாறு நிச்சயம் இருக்கின்றது.
அவ்வாறு இன்று பிரபலமாக பேசப்பட்டும், புழக்கத்தில் இருக்கும் பல்வேறு கருவிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டு விட்டது. கண்டுபிடிப்பாளர்கள் இன்று பிரபலங்களாகி இருக்கின்றனர். இதற்கு அடித்தளம் அல்லது இதனை முன்பே கணித்தவர்கள் குறித்த தொகுப்பே இது.!!
தானியங்கி மகிழுந்து கண்டுபிடிப்பு :
தானியங்கி கார்
டிரைவர்லெஸ் டாக்ஸி:
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களும் ஓட்டுனர் இல்லாமல் தானே இயங்கும் வாகனங்களை கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றன. சில நாடுகளில் இவை விரைவில் பயன்பாட்டிற்கும் வழங்கப்பட இருக்கின்றது. இந்தியாவிலும் டாட்டா நானோ வாகனத்தை தானியங்கி முறையில் இயங்க வைத்திருக்கின்றனர்.
வரலாறு:
இன்று பிரபலமாகி வரும் தானியங்கி வாகன முறையினை 80 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது 1930களில் டேவிட் எச்.கெல்லர் என்பவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரோபோட் கண்டுபிடிப்பு :
ரோபோட்
சதுரங்க ரோபோட்:
உலகளவில் ரோபோட் சந்தையானது மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. தினம் தினம் அறிமுகமாகும் புது வகை ரோபோட்களே இதற்கு எடுத்துக்காட்டு. அந்த வகையில் இன்று மனிதனால் செய்யக்கூடிய மற்றும் செய்ய இயலாத அனைத்தையும் சுலபமாக செய்து முடிக்க ரோபோட்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. இதில் நம்முடன் சதுரங்கம் விளையாடும் ரோபோட்களும் அடங்கும்.
வரலாறு:
இன்று பெருமையாக நாம் நினைத்து கொண்டிருக்கும் ரோபோட் இயந்திரம் 1700களில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டும் வந்தது. இக்காலத்தில் மனிதர்களுடன் சுதரங்கும் விளையாடும் திறன் கொண்ட ரோபோட் இயந்திரமாக மெக்கானிக்கல் ட்ரக் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பயணம்:
மனிதன் நிலவில் 1969 ஆம் ஆண்டு வாக்கில் கால் பதித்து விட்டான். அன்று துவங்கி இன்று வரை நிலவு சார்ந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. இதோடு நிலவு இல்லாமல் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க
வரலாறு:
ஆனால் பூமியை விட்டு மனிதன் வெளி கிரகங்களுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து ஜோஹானஸ் கெப்ளர் என்பவர் 1610 ஆம் ஆண்டு குறிப்பிட்டுள்ளார்.
டிரோன்:
இன்று நமக்கு அதிகம் அறிமுகமாகியிருக்கும் டிரோன்கள் பல்வேறு பயன்பாடுகளை வழங்குகின்றது. வீடியோ எடுப்பதில் துவங்கி, பொருட்களை விநியோகம் செய்வது மற்றும் உளவு சார்ந்த பணிகளுக்கும் டிரோன்கள் அதிகம் பயன்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது.
வரலாறு:
1938 ஆம் ஆண்டு வொன்டர் ஸ்டோரீஸ்'இல் மேன்லி வேடு வெல்மேன் என்பவர் செயற்கை கண் ஒன்று கீபோர்டு மூலம் இயக்கும் திறன் பெற்று கன நேரத்தில் வீடியோவினை வழங்கும் என குறிப்பிட்டிருந்தார்.
ஸ்மார்ட்போன்:
கருவி பல்வேறு அல்லது அனைத்து தினசரி பயன்களையும் வழங்கும் ஒற்றை கருவியாக ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. இன்று மிகவும் சகஜமான ஒன்றாகிவிட்ட ஸ்மார்ட்போன் கருவிகள் சார்ந்த கணிப்பு 1960களில் மேற்கொள்ளப்பட்டது.
வரலாறு:
வரலாறு:
1966 ஆம் ஆண்டு ஃப்ரெட்ரிக் ஃபோல் என்பவர் 'தி ஏஜ் ஆஃப் தி புஸ்ஸிஃபூட்' என்ற புத்தகத்தில் 'இன்று நம் வாழ்வின் மிக உயரிய கருவியாக இருக்கும் ஜாய்மேக்கர், ஒரு நாள் தொலைபேசி, கிரெடிட் கார்டு, அலாரம், உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒற்றை கருவியில் வழங்கும் காலம் வரும்' என குறிப்பிட்டிருந்தார்.
செயற்கை உணவு:
உணவு இன்று நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகளில் ரசாயனம் மூலம் சுவை கூட்டுப்படுகின்றது. இவை தான் இன்று நமக்கு ஏற்படும் பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கும் காரணமாக இருக்கின்றது.
உணவு இன்று நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகளில் ரசாயனம் மூலம் சுவை கூட்டுப்படுகின்றது. இவை தான் இன்று நமக்கு ஏற்படும் பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கும் காரணமாக இருக்கின்றது.
வரலாறு:
செயற்கை உணவு உட்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை எச்.ஜி வெல்ஸ் 1914 ஆம் ஆண்டு வெளியான 'தி வோர்ல்டு செட் ஃப்ரீ' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இ-புக்:
இ-ரீடர் உலகில் நமக்கு தெரியாத பலவற்றை தெரிந்து கொள்ள பயன்படும் விக்கிபீடியா சேவை மற்று புத்தகங்களை படிக்க பயன்படுத்தும் இ-ரீடர் கருவிகள் நம்மில் பலருக்கும் நன்கு அறிமுகமான கருவியாவே இருக்கின்றது.
வரலாறு:
ஆனால் எதிர்காலத்தில் அதாவது இன்று இது போன்ற சேவைகள் மற்றும் கருவிகள் பயன்படுத்தப்படும் என்பதை 'தி ஹிட்ச்சிக்கர்ஸ் கைடு டு தி கேலக்ஸி' என்ற புத்தகத்தில் டௌக்லஸ் அடாம்ஸ் என்பவர் 1939 ஆம் ஆண்டு குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment