மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரு குவாட் கோர் ஸ்மார்ட்போன் கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி மைக்ரோமேக்ஸ் போல்ட் சுப்ரீம் மற்றும் போல்ட் சுப்ரீம் 2 என புதிய கருவிகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய கருவிகளின் மூலம் 70 மில்லியன் பீச்சர் போன் பயனர்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க தூண்டுதலாக இருக்கும் என கூறப்படுகின்றது.
செயல்திறன்
இரு கருவிகளும் குவாட் கோர் சிப்செட் கொண்டிருப்பதால் செயல்திறன் ஒரே மாதிரி இருக்கும் என்பதோடு சிறந்த பேட்டரி, ஆண்ட்ராய்டு லாலிபாப் மற்றும் 3ஜி கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களை கொண்டிருக்கின்றது.
பிராசஸர்
போல்ட் சுப்ரீம் கருவியானது 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 512 எம்பி ரேம், 4ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
திரை
3.5 இன்ச் திரை கொண்ட கருவி போல்ட் சுப்ரீம் கருவியானது 1200 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. வேகமான 3ஜி இண்டர்நெட் இணைப்பு மற்றும் வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த கருவி கிடைக்கின்றது.
போல்ட் சுப்ரீம் 2
மைக்ரோமேக்ஸ் போல்ட் சுப்ரீம் 2 கருவியானது 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 512 எம்பி ரேம், 4ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
திரை
3.9 இந்ச் திரை கொண்ட போல்ட் சுப்ரீம் 2 கருவியும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம், மற்றும் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பேட்டரி பயன்பாடுகளை கொண்டிருக்கின்றது.
விலை
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போல்ட் சுப்ரீம் ரூ.2,749க்கும், போல்ட் சுப்ரீம் 2 ரூ.2,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனை
மைக்ரோமேக்ஸ் போல்ட் 2, மைக்ரோமேக்ஸ் போல்ட் 2 சுப்ரீம் கருவிகள் அனைத்து சில்லரை விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment