நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலியாக இருந்தாலும் சரி, நீங்கள் அழைப்பை எடுக்க தவிர்க்க்கிரீர்கள் என்று தெரிந்தும் ஒருவர் தொடர்ச்சியாக உங்களுக்கு 'போன் மேல் போன்' போட்டுக் கொண்டே இருந்தால், உங்கள் பொறுமை நிச்சயம் உடையும், பின்பு நீங்கள் எரிமலை போல வெடிப்பீர்கள். நல்லவேளை, தொடர்ச்சியாக போன் செய்து கொண்டே இருக்கும் போன் மென்டல்களிடம் இருந்து தப்பிக்க ஆண்ராய்டு ஆண்டவர் நமக்கு கால் ப்ளாக் ஆப்ஸ்..! ஆண்ராய்டில் உள்ள சிறந்த 9 கால் பிளாக் ஆப்ஸ்களைத்தான் தொகுத்துள்ளோம். உங்களுக்கு பிடித்த கால் பிளாக் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்யுங்கள். தொந்தரவு செய்யும் நம்பர்களையும், மெம்பர்களையும் பிளாக் செய்யுங்கள். லெஸ் டென்ஷன்.. மோர் வர்க்..!!
#1 சேபஸ்ட் கால் பிளாக்கர் (Safest Call Blocker) :
கால் ப்ளாக் மட்டுமின்றி இதன் ப்ரீமியம் வெர்ஷன் ஆனது எரிச்சலூட்டும் விளம்பரங்களையும் ப்ளாக் செய்யும்.
#2 மிஸ்டர் நம்பர் (Mr.Number) :
ஆட்டோமட்டிக்காக ஸ்பாம் மெசெஜ்களை ப்ளாக் செய்யும் மிஸ்டர்.நம்பர் செயலியானது முதல் 20 காலர் லுக்-அப்ஸ்களை மட்டுமே இலவசமாக வழங்கும்.
#3 கால்ஸ் பிளாக்லிஸ்ட் (Calls Blacklist) :
இது தேவையற்ற எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை தடுக்கும்.
#4 கால் ப்ளாக்கர் ப்ரீ (Call Blocker Free) :
இது முற்றிலும் இலவசமான அதே சமயம் எந்த விதமான விளம்பரங்களையும் காட்சிப்படுத்தாத ஒரு ஆப் ஆகும் கால் ப்ளாக் ஆப் ஆகும்.
#5 கால் ப்ளாக்கர் ப்ரீ - பிளாக்லிஸ்ட் (Call Blocker Free - Blacklist) :
இது கால் ப்ளாக் மட்டுமின்றி மேலும் பல அம்சங்களை வழங்கும் ஆப் ஆகும். இதை பயன்படுத்தி பிளாக் லிஸ்ட் மற்றும் வைட்லிஸ்ட் ஆகிய இரண்டையும் உருவாக்கலாம்.
#6 பிளாக்லிஸ்ட் ப்ளஸ் (Blacklist Plus) :
இதில் எண்களை/ அழைப்புகளை தடுக்க பல வழிகளில் இல்லை என்றாலும் கூட இது தடுக்கப்பட்ட எண்களை நிர்வகிக்க பல்வேறு வழிகளை வழங்குகிறது
#7 மாஸ்டர் கால் ப்ளாக்கர் (Master Call Blocker) :
இது முற்றிலும் இலவசமான அதே சமயம் எந்த விதமான விளம்பரங்களையும் காட்சிப்படுத்தாத மேலுமொரு ஒரு ஆப் ஆகும்.
#8 ட்ரூகாலர் (TrueCaller):
அடிப்படையில் அடையாளம் தெரியாத எண்களை அடையாளம் காண உதவும் ஒரு சேவையாகும். இதன் மூலம் கால் பிளாக்கும் நிகழ்த்த முடியும்.
#9 அவஸ்ட் மொபைல் செக்யூரிட்டி அண்ட் ஆன்ட்டிவைரஸ் (Avast Mobile Security & Antivirus) :
புகழ்பெற்ற வைரஸ் தடுப்பு திட்டமான அவாஸ்ட் ஆனது அதன் மொபைல் பயன்பாட்டில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகளை பிளாக் செய்யும் வசதியையும் வழங்குகிறது.
No comments:
Post a Comment