தற்சமயம் வரை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் மோட்டோ ஜி சீரிஸ் சிறப்பான இடம் பிடித்திருக்கின்றது. சில காலங்களுக்கு முன் அழிவின் விளிம்பில் இருந்த மோட்டோ நிறுவனம் இன்று இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கின்றது.
அந்த வகையில் மோட்டோரோலா நிறுவனத்தின் வெற்றி பாதையில் மற்றும் ஓர் மோட்டோ ஜி கருவியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது மோட்டோ ஜியின் நான்காம் தலைமுறை கருவிகளின் அம்சங்களை பாருங்கள்..
இரு கருவிகள்
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி4 மற்றும் ஜி4 ப்ளஸ் என இரு கருவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
திரை
அம்சங்களை பொருத்த வரை இரு கருவிகளிலும் 5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
பிராசஸர்
ஜி4 மற்றும் ஜி4 ப்ளஸ் கருவிகளில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் 64-பிட் ஸ்னாப்டிராகன் 617 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
கேமரா
இரு மோட்டோ கருவிகளிலும் வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்ட 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் ஆம்னிவிஷன் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி4 கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமராவும், டூயல்-டோன் எல்இடி ப்ளாஷ், மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவியில் 16எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் டூயல்-டோன் எல்இடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி
இதோடு 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 3000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு இதன் டர்போ சார்ஜிங் அம்சம் மூலம் 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் பேக்கப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டோரேஜ்
மோட்டோ ஜி4 கருவியில் 2ஜிபி ரேம், 16 ஜிபி ரோம் மற்றும் மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவியை பொருத்த வரை 2ஜிபி ரேம் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
சென்சார்
மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவியில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருப்பதோடு மோட்டோ ஜி4 மற்றும் ஜி4 ப்ளஸ் கருவிகளில் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது.
விலை
மோட்டோ ஜி4 ப்ளஸ் (2ஜிபி ரேம்+16ஜிபி மெமரி) ரூ.13,499 மற்றும் (3ஜிபி ரேம்+32ஜிபி மெமரி) ரூ.14,999க்கும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருவிகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றதோடு இவை இரண்டும் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது.
No comments:
Post a Comment