Monday 23 May 2016

ஐஸ்வர்யா ராயின் 'சரப்ஜித்': வசூலில் சாதனை!


ஐஸ்வர்யா ராயின் நடிப்பில், பாகிஸ்தான் சிறையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படமான ‘சரப்ஜித்’ மூன்றே நாளில் 13.96 கோடி வசூலித்துள்ளது.

சிறை கலவரத்தில் கொல்லப்பட்ட சரப்ஜித்தாக ரன்தீப் ஹூடாவும், அவரது தங்கையான தல்பீர் ரோலில் ஐஸ்வர்யாராயும் நடித்துள்ளனர். ஓமங் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி, பலதரப்பட்ட கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


பூச்சும், பேச்சும் பெண்ணாகவே! சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட்….

 

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘ரெமோ’ படத்தில் முதல் முறையாக மாறுபட்ட பல வேடங்களில் நடிக்கிறார். அதில் முக்கியமாக பெண் வேடத்திலும் நடித்து வருகிறார். அவருக்கு சிறப்பு மேக்-அப் செய்வதெற்கென ஹாலிவுட்டில் இருந்து சிறப்பு மேக்-அப் மேன்கள் இந்தப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ எனப்படும் முதல் தோற்றம் ஜூன் 9-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று சுவாரஸ்யமான மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது!

இந்தப் படத்தில் இவர் நடித்துள்ள பெண் வேடத்திற்கான டப்பிங் சிவாவே செய்ய உள்ளாராம்!

மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக இருந்து இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ள சிவா இன்று மீண்டும் மிமிக்ரியை கையில் எடுக்க உள்ளார். நேற்று இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி போன்றோர் இப்படத்தில் பணியாற்றுவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. 

சிவாவின் வித்தியாச நடிப்போடு, வித்தியாசமான குரலையும் ரெமோவில் கேட்கலாம்!
 

No comments:

Post a Comment