Tuesday, 17 May 2016

அஜீத்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி!




வேதாளம் படத்தைத் சிவா இயக்கும் படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க அஜீத் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் ஜூலையில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே படத்தின் நாயகி உட்பட படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வுகள் நடந்துகொண்டிருக்கிறதாம். நடிகர் கருணாகரன் படத்தில் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
அதுமட்டுமின்றி படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள். அந்த வேடம் மிகவும் பேசப்படக்கூடிய வேடமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் அதில் விஜய்சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணி அவரை அணுகியதாகவும் அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment