கணினி பயன்பாட்டில் ஃபோல்டர்களை பராமரித்தல் மிகவும் அத்தியாவசிய அம்சம் எனலாம். இந்நிலையில் காலம் காலமாக விண்டோஸ் இயங்குதள கணினிகளில் ஃபோல்டர்களின் நிறம் ஒரே நிறத்தில் இருந்து வருகின்றது. இங்கு விண்டோஸ் 7,8,10 என கணினியில் எந்த இயங்குதளம் ஆனாலும் ஃபோல்டரின் நிறங்களை மாற்றுவது எப்படி என்பதை தொகுத்திருக்கின்றோம்..
பதிவிறக்கம்:
முதலில் கணினியல் ரெயின்போ ஃபோல்டர் என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்யவும்.
க்ளிக்:
அடுத்து ஸ்டார்ட் மெனு சென்று மென்பொருளை இரு முறை க்ளிக் செய்து திறக்க வேண்டும்.
மாற்றம்:
இதன் எளிய இன்டர்ஃபேஸ் மூலம் பல்வேறு ஃபோல்டர்களுக்கு ஒரே சமயத்தில் நிறம் மாற்றம் செய்ய முடியும்.
ஃபோல்டர்:
இதோடு மாடன், டிப்பிக்கல் மற்றும் கிளாசிக் என மூன்று ஃபோல்டர் அம்சமும் இருக்கின்றது இதில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.
நிறம்:
இனி உங்களது ஃபோல்டரின் நிறத்தை தேர்வு செய்யலாம் அல்லது ரேண்டம் என்ற ஆப்ஷன் மூலம் நிறத்தை தேர்வு செய்யலாம்.
வேண்டாம்:
ஒரு வேலை நிறம் ஏதும் வேண்டாம் எனில் ஃபோல்டர்களை தேர்வு செய்து decolorize என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும்.
No comments:
Post a Comment