Tuesday, 24 May 2016

ஹைப்பர்லூப் : சும்மா கண்ணை மூடி கண்ணை திறக்குறதுக்குள்ள..!

ஹைப்பர்லூப் (Hyperloop) என்பது மணிக்கு சுமார் 700-க்கும் மேற்பட்ட மைல் வேகத்தில், காப்ஸ்யூல்கள் போன்ற வடிவத்தை கொண்ட ஒரு குழாய் போக்குவரத்து அமைப்பாகும். 2013 ஆம் ஆண்டு, டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் (Elan Musk) முதன்முதலில் ஹைப்பர்லூப் யோசனையை வெளிப்படுத்தினார்..! 


கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் நீங்கள் சேர வேண்டிய இடத்திற்கு உங்களை கொண்டு சென்று சேர்த்து விடும் வல்லமை கொண்ட ஹைப்பர்லூப் எப்படி அனைத்து வகையான போக்குவரத்து அம்சங்களிலும் வருங்கால புரட்சியை ஏற்படுத்த போகிறது என்பதை நிரூபிக்கும் நான்கு ஹைப்பர்லூப் சமாசாரங்களை 

PnIvosv.jpg

ஹைப்பர்லூப் புரட்சி #1 :

நவீனகால போக்குவரத்தில் அதிக அணுகலையும் அதிக திறனையும் கொண்டுள்ளதாய் இருக்கும்..! 

uDvw57f.jpg

செயல்படும் :

நகரின் மையத்தில் சுரங்கப்பாதை மூலம் விமான வேகத்தில் மக்களை பயணிக்க செய்ய முடியும். இதனால் இது அதிக மக்களால் அணுகப்படும் உடன் மிகத்திறமையாக செயல்படும் என்பதிலும் சந்தேகமே இல்லை.

8NjMeaX.jpg

வாய்ப்பே இல்லை :

ஹைப்பர்லூப் ஆனது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மற்றும் முற்றிலும் தன்னாட்சியாய் இயங்க கூடியது ஆகையால் வானிலை அல்லது பிற ஆப்ரேட்டிங் பிழை காரணமாக போக்குவரத்து தாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை.

Et5niDn.jpg

ஹைப்பர்லூப் புரட்சி #2 :

டிக்கெட் கவுன்டர்கள், வரிசைகள் முற்றிலுமாக காணமல் போகும்..! 

J3VUPrJ.jpg

பிரச்சனை :

ஹைப்பர் லூப் உருவாக்கும் நிறுவனம் ஒரு நெறிப்படுத்தப்பட்ட டிக்கெட் முறை அறிமுகப்படுத்த விரும்புகிறது. அதனால் டிக்கெட் கவுன்டர்கள் வரிசை போன்ற பிரச்சனைகளே இருக்காது. 

IKHlMch.jpg

ஹைப்பர்லூப் புரட்சி #3 :

கற்பனை செய்வதை விட அதன் இருக்கைகள் மிக வசதியாக இருக்கும்..!

ZANyHJd.jpg

இடவசதி :

ஹைப்பர்லூப் நிறுவனம் அதன் இருக்கைகளை வசதியாக மட்டுமின்றி பயணிகளை மக்கள் எல்லா நேரங்களிலும் அவர்கள் தங்கள் சாமான்களை வைக்க போதுமான விசாலமான இடவசதியை வடிவமைக்கும் முனைப்பிலும் உள்ளது.

blb8whm.jpg

ஹைப்பர்லூப் புரட்சி #4 :

அனைவரும் பயன்படுத்தும் வகையில் மலிவாக இருக்கும்..! 

RbY2Y8K.jpg

வடிவமைப்பு :

ஹைப்பர்லூப் சௌகரியமான மற்றும் வசதியான ஒன்றாக இருப்பது மட்டுமின்றி அனைவரும் அணுகும் வண்ணம் மிக மிக மலிவாக இருக்க வேண்டும் என்பதிலும் வடிவமைப்பு நிறுவனம் முனைப்பாக செயல்படுகிறது..!

No comments:

Post a Comment