எல்லோரும் கேள்விகள் கேட்கலாம். ஆனால், எல்லோராலும் பதில் சொல்லி விட இயலாது. கேள்விக்கான சரியான விளக்கம் அளிப்பதற்கு அந்தந்த துறைகளில் ஜாம்பவனாக இருத்தல் அவசியம். ஆனால், சில கேள்விகளுக்கு சில சந்தேகங்களுக்கு எப்பெரும் ஜாம்பவான்களிடமும் விளக்கமே கிடையாது. அப்படியானவைகளை தான் புதிர், விசித்திரம், மர்மம் என்கிறர்கள்.
ஆங்கிலத்தில் எனிக்மா (Enigma) என்றொரு வார்தைபயன்பாடு உள்ளது, புரிந்துகொள்ள மிகவும் கடினமான ஒரு நபர் அல்லது ஒரு மர்மமான விடயம்தனை எனிக்மா என்பர்.
அப்படியாக, உங்கள் சாத்தியமான கற்பனைக்கும், புத்திசாலித்தனத்திற்கும் தீனி போடும் வகையில் விளக்கமே இல்லாத, சுவாரஸ்யமான 10 மர்மமான நிகழ்வுகளை (எனிக்மாக்களை) பட்டியலிட்டுள்ளோம். நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும் கூட சில விடயங்கள் மர்மமாக இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது..!
எனிக்மா #10 :
ஹட்சிசன் விளைவு (Hutchison Effect)
நிகோலா டெஸ்லா :
ஹட்சிசன் விளைவு என்பது கண்டுபிடிப்பாளர் ஜான் ஹட்சிசன் மூலம் சில நிகோலா டெஸ்லா பரிசோதனைகளை பெருக்கும் முயற்சியின் போது ஏற்பட்ட வியப்பான நிகழ்வுகளை குறிக்கிறது.
சாட்சி :
பொருட்களை காற்றில் மிதக்க செய்தல், முற்றிலும் வேறுபட்ட பொருட்களை இணைவு செய்தல் (எடு - மரம், உலோகம்), சிறிய பொருட்களை மறைய செய்தல் போன்ற ஆராய்ச்சிகள் சாட்சிகளுடன் நிகழ்த்தப்பட்டுள்ளன.
நிகழ்த்தப்படவில்லை :
அமெரிக்கா ராணுவம் மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவை மிகவும் கவர்ந்த அந்த ஆராய்ச்சிகள் மீண்டும் ஒருமுறைக்கூட நிகழ்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனிக்மா #09 :
ஐயர்ன் பில்லர் ஆப் டெல்லி (Iron Pillar of Delhi)
நிதர்சனம் :
இரும்பானது அறிவியல் மற்றும் இயற்கையான விதிப்படி மெல்ல மெல்ல துரு பிடித்து போவதில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பது தான் நிதர்சனம்.
விதிவிலக்கு :
ஆனால், இந்த விதிக்கு விதிவிலக்காக திகழ்கிறது டெல்லியில் உள்ள இரும்பு தூண். 7 மீட்டர் உயரம், ஆறு டன் எடையுள்ள இந்த இரும்பு 1600 ஆண்டுகளுக்கு மேலாக அரிப்பை தோற்க்கடித்துக் கொண்டிருக்கிறது.
98 சதவீதம் :
மேலும் இந்த தூண் ஆனது சாத்தியமே இல்லாத வண்ணம் 98 சதவீதம் இரும்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன காலத்தில் கூட இது சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனிக்மா #08 :
கரோல் ஏ.டெர்ரிங் (Carroll A. Deering)
இரட்டை பாய் மர கப்பல் :
மிகவும் மர்மமான முறையில் காணமல் போன இரட்டை பாய் மர கப்பலான கரோல் ஏ.டெர்ரிங் ஜனவரி 31, 1921-ஆம் ஆண்டு வட கரோலினா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தடயங்கள் :
அதன் தாழ்வாரத்தில் அடுத்தடுத்த நாளுக்கான உணவை தயாரித்துள்ளன என்ற ஆதாரத்தை தவிர்த்து தனிப்பட்ட விளைவுகள், கப்பல் பதிவுகள், தடயங்கள் என எந்த விதமான ஆதராமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அமானுட நடவடிக்கை :
சில கோட்பாடுகள் இந்த கப்பலில் அமானுட நடவடிக்கையை சுட்டிக்காட்டுகிறது என்பதும், இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் இப்போது பெர்முடா முக்கோணமாக அறியப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
' பெர்முடா முக்கோணத்திற்குள்ளே (Bermuda Triangle) : புதிய சர்ச்சை கிளப்பும் ஜெர்மன் கடல் ஆய்வாளர்..! '
எனிக்மா #07 :
ஐஸ் வுமன் (Ice Woman)
இறந்த நிலை :
19 வயதான ஜீன் ஹில்லியார்ட்டின் உடல் மைனஸ் இருபத்தைந்து டிகிரி கடும்குளிரில் இரவு முழுக்க உறைந்து கிடந்தது பின் காலை மீட்கப்பட்டது. இறந்த நிலையைப்போல் முகம் வெளுத்துப்போயும், தோலுறைவு என உச்சக்கட்ட உறை நிலையில் இருந்த அவரின் உடலைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ந்து போயினர்.
சுயநினைவு :
படுபயங்கரமான மூளை பாதிப்பு மற்றும் கால்கள் துண்டுப்பு போன்றவைகளை ஜீன் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 மணி நேரம் கழித்து பயங்கரமான இழுப்பு நோயை தொடர்ந்து சுயநினைவு கொண்டார்.
வீடு திரும்பினார் :
மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் ஜீனின் உடல் நலம் முற்றிலும் குணமானது. அவரின் தோலுறைவு உட்பட. 49 நாட்களுக்கு பின்பு தனது ஒரே ஒரு விரலை இழந்துப்பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஜீன். இந்த மருத்தவ துறை நிகழ்வுக்கு தெளிவான விளக்கமே இல்லை..!
எனிக்மா #06 :
பெல்மெஸ் முகங்கள் (Faces Of Belmez)
விசித்திரமான முகங்கள் :
ஸ்பெயின் நாட்டில் உள்ள பெராரா குடும்ப வீட்டின் சுவற்றில் மிகவும் விசித்திரமான முகங்கள் இயற்கையான அதே சமயம் மிகவும் மர்மமான முறையில் வெளிப்பட்டன.
சுவர்கள் :
இருபது ஆண்டுகளுக்கு மேலாக, ஆண்கள் மற்றும் பெண்களின் முகங்களை பிரதிபலித்த அந்த சுவர்கள், பல வகையான முகபாவங்களில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன.
முடிவு :
இறந்துபோன ஒருவரின் உடல் இந்த வீட்டின் அடியில் இருந்து கிடைக்கப்பெற்றது பின் இந்த விசித்திரமான நிகழ்வின் மீது பல கருத்துகள், பல விளக்கங்கள் இருப்பினும்கூட ஒட்டுமொத்தமாக எந்த ஒரு முடிவு இன்றுவரையிலாக கிடைக்கப்பெறவில்லை..
எனிக்மா #05 :
மாயமான ஏரி (Disappearing Lake)
மார்ச் - மே :
மார்ச் 2007 வரையிலாக எந்தவிதமான மாறுதலும் இன்றி காணப்பட்ட சிலியில் படகோனியாவில் உள்ள ஒரு ஏரி திடீரென்று மே 2007 ஆம் ஆண்டு காணமல் போனது.
நிலநடுக்கம் :
அங்கு ஒரு 30 மீட்டர் ஆழமான குழி, பனிப்பாறைகளாகவும் மற்றும் உலர்ந்த மண் மட்டுமே காணப்பட்டது, நிலநடுக்கம் மூலம் இந்த நீர் உறிஞ்சுக் கொள்ளப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தாலும் கூட சமீபத்தில் எந்த விதமான நிலநடுக்கத்தையும் அந்த நிலப்பகுதி சந்திக்கவில்லை.
யுஎஃப்ஒ :
மறுபக்கம் யுஎஃப்ஒ ஆர்வலர்கள் இந்த ஏரியானது பறக்கும் தட்டு மூலம் உறிஞ்சுக் கொள்ளப்பட்டது என்று நம்புகின்றனர்.
எனிக்மா #04 :
மழைக்குமிழ் (Raining Blobs)
விசித்திரமான மழை :
ஆகஸ்ட் 7, 1994-ல், வாஷிங்டன்னின் ஒக்வில்லே நகரில் மிகவும் விசித்திரமான மழை பொழிந்தது, அதாவது வானத்தில் இருந்து வழவழப்பான துளிகள் விழுந்தன. தொடர்ந்து நகரில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உண்டாகின.
காய்ச்சல் அறிகுறி :
ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட அந்த குமிழ்களில் மனித வெள்ளை இரத்த அணுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மிகப்பெரிய அதிர்சிகள் கிளம்பின. இருப்பினும் அதில் மனித வெள்ளை இரத்த அணுக்கள் உள்ளடங்கியது ஏன் அது காய்ச்சல் அறிகுறிகளை கிளப்பியது என்பது இன்றுவரை புதிர்தான்..!
எனிக்மா #03 :
தி பிளாக் ஹெலிகாப்டர் (The Black Helicopter)
கருப்பு உடை :
1994-ல் பறக்கும் தட்டுகளுக்கு இணையாக பீதியை கிளப்பிய ஒன்று தான் - பிளாக் ஹெலிகாப்டர். மே 7, 1994-ஆம் ஆண்டு சிறுவன் ஒருவனால் முதன்முதலில் காணப்பட்டதாக பதிவான இந்த கருப்பு ஹெலிகாப்படர் கருப்பு உடையணிந்த ஆயுதங்கள் ஏந்திய மனிதர்களை கொண்டுள்ளதாக பதிவாகியுள்ளது. ஆனால் இது சார்ந்த விளக்கம் எதுவுமில்லை.
எனிக்மா #02 :
கற்களுக்குள் விலங்குகள் (Animals within Stone)
உயிருடன் :
தவளைகள்,தேரைகள், மற்றும் பிற சிறிய விலங்குகளை திடமான கற்களுக்குள் இருந்து உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு எந்தவிதமான தெளிவான விளக்கமும் இல்லை.
எனிக்மா #01 :
டோனி டெக்கர் (Donnie Decker)
சாட்சிகள் :
எப்போது டோனி டெக்கர் நினைக்கிறானோ அப்போது மழையை வரவழைக்க முடியும் சக்தி கொண்ட சிறுவனாக நம்பப்பட்டான். குறிப்பாக அவன் தலைக்கு மேல் மட்டும் மழை பொழிவதை கண்ட சாட்சிகள் பல உண்டாம்.
மர்மமான மழை :
வீட்டுக்குள், உணவகத்தின் உள்ளே, சிறைக்கு உள்ளே என அவன் தலைக்கு மேல் மட்டுமே பெய்த மர்மமான மழை மற்றும் அந்த மர்மமான சிறுவன் பற்றிய வரலாற்றில் வேறெந்த தகவலும் இல்லை.
No comments:
Post a Comment