கார்பரேட் உலகில் முடி சூடா மன்னாக விளங்கும் ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் மத்தியிலான போட்டி சில வருடங்களாக அமைதிகாத்த நிலையில் தற்போது ஆல்பபெட் நிறுவன உருவாக்கத்திற்குப் பின் மீண்டும் போட்டி சூடுபிடித்துள்ளது. உலக நாடுகளில் வர்த்தகம் செய்யும் இரு நிறுவனங்களும் முதல் இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் பல வருடங்களாகப் போட்டுப்போட்டு வருகிறது. இந்த வருடம் யாருக்கு...?

2016ஆம் ஆண்டு:
2016ஆம் ஆண்டுக்கான நிறுவன ஆய்வு மதிப்புகள் நடைபெற்று முடிந்த நிலையில், ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி இருந்தது. ஏனென்றால் 2016ஆம் நிதியாண்டில் இரு நிறுவனங்களுமே அதிகளவிலான லாபத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்விரு நிறுவனங்களுக்கும் வர்த்தகச் சந்தை வேறு என்றாலும் போட்டி முதல் இடத்திற்குத் தான்.

ஆல்பபெட் உருவாக்கம்:
கடந்த வருடத்தைப் பார்க்கும் போது கூகிள் நிறுவனம் தனது பிரதான வர்த்தகத்தைக் கூகிள் பெயரிலும் முக்கிய ஆராய்ச்சி திட்டங்களைப் புதிதாக உருவாக்கப்பட்ட ஆல்பபெட் நிறுவனத்திற்குத் தனியாகப் பிரித்தது.

மே மாதம்:
ஆனால் மே மாதத்தில் 2015ஆம் ஆண்டு ஆப்பிள் தான் இழந்த முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ளது.
வெள்ளிக்கிழமை:
மே மாத்தில் 20ஆம் தேதி முடிவில் ஆப்பிள் நிறுவனம் 552 பில்லியன் டாலராகவும், ஆல்பபெட் நிறுவனம் 496 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் கடந்த வருடம் தான் இழந்த முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ளது.

30 சதவீதம்:
உயர்வு கடந்த 12 மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 30 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது.
No comments:
Post a Comment