Tuesday, 17 May 2016

மர்மமான சைபீரிய இராட்சத ஓட்டைகள், உருவானது எப்படி..?

2014-ஆம் ஆண்டு, வடக்கு ரஷ்யாவின் சைபீரியவில் உள்ள யமல் பகுதியில் நிலத்தில் மாபெரும் துளைகள் மர்மமான முறையில் ஏற்பட்டுள்ளதை ஹெலிகாப்டர் விமானி ஒருவர் கண்டறிந்து தகவல் தெரிவித்திருந்தார். அடுத்த ஒரு சில நாட்களிலேயே அதே போல் இரண்டாவது இராட்சத ஓட்டை உருவானது, பின்னர் மூன்றாம் சைபீரிய பள்ளம் ஒன்றும் கண்டுப்டிகப்பட்டது.

 ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்த இந்த மர்மமான சைபீரிய இராட்சத பள்ளங்கள் எப்படி உருவானது என்பதை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அறிவியலார்கள் கண்டறிந்துள்ளன..!

j49mOOw.jpg

அகலம் :

மர்மமான இந்த சைபீரிய பள்ளங்கள் ஆனது சுமார் 100 அடி அகலம் கொண்டதாய் உள்ளன..!

KXNxSKv.jpg

ஏவுகணை சோதனை :

முதலில் இந்த ராட்சத பள்ளங்கள், ஏவுகணை சோதனை போன்றவைகள் உருவாகி இருக்கலாம் என்று நம்பப்பட்டது.

eYRpWpG.jpg

எரிகல் மோதல் :

அல்லது இவைகள் பூமியோடு நிகழ்ந்த எரிகல் மோதலில் உருவாகி இருக்கலாம் என்றும், சிலரால் இது வேற்றுகிரக வாசிகளின் செயல்பாடு மூலம் இது உருவாகி இருக்கலாம் என்றும் நம்பபபட்ட்டது.

rgqQyId.jpg

மாறுபட்ட காரணம் :

ஆனால், சைபீரிய யமல் தீபகற்பதில் உருவாகி கிடக்கும் இந்த இராட்சத பள்ளங்கள் உருவாக காரணம் முற்றிலும் மாறுபட்ட ஒரு காரணம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

0YdCAVX.jpg

பருவ நிலை மாற்றம் :

இந்த பள்ளங்கள் உருவாக முழுக்க முழுக்க பருவ நிலை மாற்றம் மட்டும் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

GrZHjU0.jpg

தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் :

இந்த தகவலை அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

DNFimLs.jpg

மீத்தேன் வெடிப்பு :

அதாவது ஆர்டிக் மண்டலங்கள் விபரீதமான வேகத்தில் சூடாகிக் கொண்டே போவதால் உருவான அதிகப்படியான மீத்தேன் வெடிப்பின் மூலம் உண்டாகியுள்ளது என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

FgiR2iX.jpg

பெர்மாப்ரோஸ்ட் :

அதாவது அப்பகுதியின் பெர்மாப்ரோஸ்ட் (Permafrost) உருக தொடங்கியுள்ளது என்று அந்த கோட்பாடு விளக்கம் அளிக்கிறது (பெர்மாப்ரோஸ்ட் என்றால் அந்த துருவப்பகுதியை நிரந்தரமாக படர்ந்து கிடக்கும் உறைந்த பிரதேசமாகும்)

I2FsHZ3.jpg

மீத்தேன் வெளியாகிறது :

அவ்வாறாக, பெர்மாப்ரோஸ்ட் குலைந்து போய் உருகுவதால் பனிகட்டிகளுக்குள் சிக்கி இருக்கும் மீத்தேன் வெளியாகிறது, அந்த மீத்தேன் வெடிப்பில் தான் இந்த இராட்சத பள்ளங்கள் உருவாகியுள்ளன.

EjChzcV.jpg

துணை :

உண்டான பள்ளங்களுக்குள் அடியில் கிடைக்கப்பெற்ற அதிக அளவிலான மீத்தேன் வாயு தான் இந்த கோட்பாடுக்கு துணையாக நிற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

MtnSHWX.jpg

காரணி :

இந்த கோட்பாடு இன்றி இந்த இராட்சத பள்ளங்கள் உருவானதற்கான பல்வேறு கோட்பாடுகளும் உண்டு, இருப்பினும் பருவ நிலை மாற்றம் தான் ஒரு நிச்சயமாக ஒரு காரணியாகும்.



RILr6PT.jpg

No comments:

Post a Comment