ப்ரீமியம் அதாவது ரூ.30,000க்கும் அதிகமான விலை கொண்ட ஸ்மார்ட்போன் கருவிகளின் விற்பனையில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை விட அதிக கருவிகளை விற்பனை செய்துள்ளது. இது 2015-2016 ஆம் ஆண்டு இந்திய நிலவரம் ஆகும். கவுண்டர்பாயின்ட் டெக்னாலஜி எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
பங்கு
அதன் படி 2015-2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சாம்சங் நிறுவனம் இந்திய ப்ரீமியம் சந்தையில் சுமார் 47% பங்குகளையும் ஆப்பிள் நிறுவனம் 45% பங்குகளை கொண்டிருந்தது.
வளர்ச்சி
எஸ் 6 எட்ஜ், கேலக்ஸி நோட் 5 போன்ற கருவிகளின் விலை குறைக்கப்பட்டதால் சாம்சங் நிறுவனம் தனது விற்பனையை அதிகரித்துள்ளது.
இடம்
முன்னதாக 2014-2015 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சாம்சங் 35% பங்குகளையும், ஆப்பிள் நிறுவனம் 43% பங்குகளுடன் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வல்லுநர் கருத்து
ப்ரீமியம் கருவிகளின் விற்பனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் இடையே பலத்த போட்டி நிலவுகின்றது. இதில் இம்முறை சாம்சங் நிறுவனம் 'எட்ஜ்' மூலம் முன்னிலையை பெற்றுவிட்டது, என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கருவிகள்
"சாம்சங் நிறுவனமானது எட்ஜ் சீரிஸ் கருவிகளை கொண்டு சந்தை பங்குகளை பெற்றுள்ளது, இதுவே ஆப்பிள் நிறுவனத்தின் 'எஸ்இ' மாடல் கருவிகளின் விலை அதிகமாக இருப்பதால் எதிர்பார்த்த அளவு இந்தியாவில் விற்பனையாகவில்லை" என கவுன்டர்பாயின்ட் ஆய்வாளர் தருன் பதாக் தெரிவித்துள்ளார்.
ஜிஎஃப்கே
சில்லறை சந்தை ஆய்வு நிறுவனமான ஜிஎஃப்கே மார்ச் 2015-2016 அறிக்கையை வெளியிட்டது, இதிலும் சாம்சங் நிறுவனம் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை
இதன் படி சாம்சங் நிறுவனம் 56% வால்யூம் பங்குகளையும், 55.7% மதிப்பு பங்குகளையும் கொண்டிருக்கின்றது. ஆப்பிள் நிறுவனத்தை பொருத்த வரை 37.9% வால்யூம் பங்குகளையும், 39.5% மதிப்பு பங்குகளையும் கொண்டிருக்கின்றது. இரு பிரிவுகளிலும் மார்ச் 2015 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
பின்னடைவு
ஒருபக்கம் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கிடையே போட்டி இருந்தாலும் சோனி மற்றும் எச்டிசி போன்ற நிறுவனங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாக பதாக் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment