Thursday, 19 May 2016

2017 : ஐந்து கருவிகளை வெளியிடும் சாம்சங், ஆனா ஒரு ட்விஸ்ட்.!

ஆப்பிள் நிறுவனம் தனது எஸ் சீரிஸ் வகை ஸ்மார்ட்போன்களை நிறுத்தி விடும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்பட்ட ஐபோன் கருவிகளை மட்டும் வரும் ஆண்டுகளில் வெளியிட கூடும் என இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 

இதோடு அடுத்து வெளியாகும் ஐபோன் 8 கருவியானது முழுமையாக கிளாஸ் பாடி கொண்டி வடிவமைக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இது ஒரு பக்கம் இருக்க சாம்சங் நிறுவனமும் தன் பங்கிற்கு புதிய திட்டங்களை கையில் வைத்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

kDVZLG4.jpg

சாம்சங்

சாம்சங் நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ஐந்து கருவிகளை வெளியிடும் என்றும் இதில் ஒரு கருவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக அமையும் என்றும் கூறப்படுகின்றது. 

L5PibRw.jpg

4கே டிஸ்ப்ளே

அதன் படி சாம்சங் வெளியிட இருக்கும் ஒரு கருவியில் மடிக்கும் திறன் கொண்ட 4கே டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

RE4YAy0.jpg

கருவிகள்

இதோடு சாம்சங் கேலக்ஸி எஸ்8, எஸ்8 எட்ஜ், கேலக்ஸி நோட் 7, கேலக்ஸி நோட் 7 எட்ஜ் போன்ற கருவிகள் 2017 ஆம் ஆண்டு வெளியாகும். மடிக்கும் திறன் கொண்ட கருவியானது கேலக்ஸி எக்ஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகின்றது. 

Q5AWE29.jpg

கேலக்ஸி எக்ஸ்

எனினும் கேலக்ஸி எக்ஸ் என்பது அந்நிறுவனம் தற்சமயம் வழங்கியிருக்கும் பெயர் தான் என்பதோடு அந்நிறுவனம் ஓஎல்இடி திரை தயாரிப்பதில் பல ஆண்டு அனுபவம் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

m3AuhIO.jpg

திரை

சாம்சங் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் திரை கேல்க்ஸி எஸ்7 எட்ஜ் போன்று வளைந்து இருக்காமல், கருவியை பாழாக்காமல் எப்பவும் திறந்து மூடும் வகையில் திரை உருவாக்க கூடும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். 

xzwtRg0.jpg

உறுதி

கொரிய சந்தையில் இருந்து வெளியாகும் தகவல்கள் மற்றும் சாம்சங் அதிகப்படியான காப்புரிமைகளை பதிவு செய்வதை வைத்து பார்க்கும் போது மடிக்கும் திறன் கொண்ட கருவிகள் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே கருதப்படுகின்றது. 

esEYh15.jpg

திட்டம்

சாம்சங் தரப்பில் ப்ராஜக்ட்-வேலி என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி வாலட் போன்று பாதியாக மடித்து வைக்குமளவு இருக்கும் என்றே கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment