Thursday 19 May 2016

விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் - ரிலையன்ஸ் ஒப்பந்தம்.!

ஆப்பிள் நிறுவனத்தின் VoLTE கொண்ட ஐபோன் மற்றும் ஆப்பிள் பே போன்ற சேவைகள் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நெட்வர்க் மூலம் இயங்குவது குறித்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. மேலும் ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் இடையை பேச்சுவார்த்தை நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zQTGtuu.jpg

அம்பானி

இச்சந்திப்பு முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நடைபெற்றதாகவும், இதில் ஜியோவின் வளர்ச்சிக்கு ஆப்பிள் பங்கு மற்றும் இந்தியாவில் ஐபோன் விற்பனையை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 

s264JRr.jpg

விநியோகம்

ஆப்பிள் நிறுவனத்துடன் நேரடியாக ஒப்பந்தம் செய்யும் பட்சத்தில் விநியோகஸ்தர்கள், விற்பனை முகவர்கள் மற்றும் ஒப்பந்த முறையில் இணையதள விற்பனை போன்றவைகளை பயன்படுத்தி VoLTE சார்ந்த ஐபோன்களின் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

igdCPQw.jpg

விளக்கம்

மேலும் இந்த சந்திப்பின் போது ரிலையன்ஸ் 4ஜி வளர்ச்சி இந்திய தொழில்நுட்ப சந்தையை எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு எந்தளவு இருக்கும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

6JWs1Pt.jpg

அனுபவம்

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த தனது ஊழியர்களுக்கு ஐபோன் வழங்கவும் ரிலையன்ஸ் நிறுவனம் திட்மிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

nvPcVkW.jpg

ஒப்பந்தம்

ரிலையன்ஸ் ரீடெயில் வியாபாரத்தில் ஆப்பிள் பே பயன்படுத்துவது குறித்து இரு நிறுவனங்களுக்கும் இடையே சுமூகமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment